Skip to Content

08 - "லைப் டிவைன்" - கருத்து

"லைப் டிவைன்" - கருத்து

Invasion by the Infinite.

அனந்தம் படையெடுக்கும்.

 

  • இருட்டில் விளக்கேற்றினால் வெளிச்சம் வரும்.
    அது விளக்கைச் சுற்றியிருக்கும்.
    எத்தனை ஆயிரம் விளக்கு ஏற்றினாலும், ஜகஜ்ஜோதியாக இருந்தாலும், இருட்டு இருக்கும்.
    சூரியோதயம் முன்னால் இருட்டு கரைந்து, மறைந்து, அழியும்.

  • நெடுநாள் மழை பெய்தால் ஊரார் ஏழைகட்குச் சோறு போடுவார்கள்.
    ஏழைக் குழந்தைகட்குப் பள்ளியில் மதிய உணவு உண்டு.
    திருமண வைபவத்தில் அனைவருக்கும் விருந்துண்டு.
    தீபாவளியன்று எல்லா வீடுகளிலும் தவறாது விருந்து நடக்கும்.
    இதைக் கடந்து சூர்யோதயம்போன்ற அனுபவம் நமக்கில்லை.
    அமெரிக்கர் உழைத்து, ஊரைச் செழிப்பாக்கி, வளம் கொழித்த நிலையில் எல்லாத் தொழிலாளிகளும் காரில் பாக்டரிக்கு வரும் நிலை ஏற்பட்ட பொழுது செல்வம், செல்வ வளமாகி, பெருகியதை நாம் கேள்விப்படுகிறோம்; பார்த்ததில்லை. நேரடியாக அமெரிக்கா சென்றவர் பார்த்தனர்.

    வளம் அனந்தமாகப் படையெடுத்த நிலை அது.

  • சத்தியஜீவியம் உலகில் வந்து, வாழ்வு மாறினால், அது அனந்தத்தின் படையெடுப்பு என்கிறார். அதன் நிலை,

    மனிதனுக்குச் சோர்விருக்காது.
    வியாதி வாராது.
    வலியிருக்காது.
    மரணமில்லை.
    வேலை செய்தால் தெம்பு வரும்.
    பணம் செலவானால் பெருகும்.
    மனிதருடன் உறவாடினால் சந்தோஷம் பொங்கும்.
    எல்லாப் புத்தகங்களிலுள்ள ஞானமும் நம்  மனதில் எழும்.
    உடல் நாளாக, நாளாக இளமையுறும்.
    அழிவு அழியும்.
    வேலையென்றால் கூடிவரும்.
    இதை அனந்தம் நம் வாழ்வில் மலர்வது என்கிறார்.
    இதை அனந்தம் மனித வாழ்வில் படையெடுத்துச் செயல்படுகிறது என்கிறார்.

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

செய்திகளையும், கருத்துகளையும், கடந்தகாலச் சரித்திர நிகழ்ச்சிகளையும் கல்வி போதிக்கிறது. இன்று குடும்பமும், சமூகமும் கல்வியைச் சேர்த்துக் கொடுக்கலாம். i.e. இன்று சமூகத்தில் திறம்படச் செயல்படும் உணர்வுக்குரிய கல்வியை அளிக்க முடியும்.

பள்ளி குடும்பமாகவும் செயல்பட முடியும்.



book | by Dr. Radut