Skip to Content

02 - வல்லுநர்கள்

வல்லுநர்கள்

N. அசோகன்

 

     தனி மனிதருடைய ஆன்மீக நம்பிக்கைஎன்பது வல்லுநர்களால் பொதுப்படையான அறிவாக மாற்றப்படுகிறது.  நம்பிக்கைஎன்பது ஆன்மாவினுடைய அறிவாகும்.  காலப்போக்கில் இந்த ஆன்மாவின் அறிவாவது மனதின் அறிவாக மாறுகிறது.  இப்படிப்பட்ட அறிவைப் பெற்றவர் சான்றோராகவும், மேதாவியாகவும் மாறுகிறார்.  வல்லுநர்கள் இந்தத் தனிப்பட்ட மனிதனின் அறிவை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குகிறார்கள்.  ஒரு சிவனடியார் ஒரு சிவபக்தரின் வீட்டிற்குச் சென்ற பொழுது, அந்த சிவபக்தரின் மகன் பாம்புக் கடிபட்டு இறந்திருந்தான்.  உடனே சிவனடியார் சிவபெருமான் மேல் ஒரு பதிகம் பாடி அப்பையனை உயிர்ப்பித்தார்.  அடிகளார் பாடும் பதிகத்தை மாந்திரீகர்கள் மந்திரங்களாக மாற்றி உயிரைக் காப்பாற்றுகிறார்கள். காலப்போக்கில் மந்திரம் ஓதுதல் என்பது மருத்துவர்கள் மூலமாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய மருந்தாக மாறிவிடுகின்றது.  பாம்புக்கடியால் இறந்தவரை உயிர்ப்பிக்கும்பொழுது இந்த ஆற்றல் விசேஷமாகத் தெரிகிறது.  ஆனால்,மருந்து என்ற நிலைக்கு வரும்பொழுது இந்த பிரார்த்திக்கும் ஆற்றல் மருந்தின் மூலம் அறிவு சார்ந்த ஆற்றலாக மாறுகிறது.  ஒரு காலத்தில் கவித்திறன்என்பது ஒரு தெய்வீகத் திறனாகக் கருதப்பட்டது.  ஆனால், இன்று சமூகம் கல்வித் திட்டங்களின் மூலம் இந்தக் கவித்திறனை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை எல்லோருக்கும் வழங்குகிறது.  எழுதும் திறனை வளர்த்துக்கொண்டே ஆக வேண்டும்என்று கட்டாயப்படுத்தும் நிலைக்குக்கூட இன்று சமூகம் வந்து விட்டது.

     பழங்காலத்தில் நீதி வழங்குவதுகூட ஒரு தெய்வீகத் திறனாகக் கருதப்பட்டது. மனுநீதிச் சோழனுடைய காலத்தில் ஒரு பசுவிற்குக்கூட நீதி கிடைத்தது.  தெய்வீகக் குணங்கள் படைத்த அரசனால்தான் இப்படிப்பட்ட நீதியை வழங்க முடிந்தது. ஆனால், இன்று சட்டத்தின் மூலம் எவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய வாய்ப்பு வந்துவிட்டது.

  • ஒரு காலத்தில் பிரார்த்திக்கும் ஆற்றலாகக் கருதப்பட்டது பிற்காலத்தில் பொதுப்படையான வல்லுநர்களின் ஆற்றலாக மாறுகிறது.

     அறியாமையில் இருக்கும் ஒரு பக்தன் பிரார்த்தனை செய்து தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறான்.  காலப்போக்கில் அவனுடைய அறிவு அதிகரிக்கும்பொழுது பிரச்சினை என்று வந்தால், தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி ஒரு செயல்பாட்டின் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கிறான். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், தரகர்கள் போன்ற எல்லாத் துறைகளிலும் இருக்கின்ற வல்லுநர்கள்தாம் இன்று பிரார்த்தனையைத் தீர்வு தரும் செயலாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.  இருந்தாலும் இன்றும் ஒவ்வொருவருக்கும் அவருடைய அனுபவமும், வல்லமையும் உதவாதுஎன்று ஆகி பிரார்த்தனைதான் உதவும்என்ற நிலை வருவதுண்டு.  பிரார்த்தனைக்கு மாற்றாக அரசியல் செல்வாக்கும், சமூகச் செல்வாக்கும் இன்று பெருமளவில் செயல்படுகின்றன.  இருந்தாலும் இந்தச் செல்வாக்கு பெரும்பாலும் தவறான நோக்கங்களுக்குத்தான் பயன்படுகிறது.

     பக்தர்களுக்கு பிரார்த்தனை உதவுவதுபோல இன்று படித்தவர்களுக்கு வல்லுநர்கள் உதவுகின்றார்கள்.  மருந்து, மாத்திரைகள் வந்துவிட்ட பிறகு இப்பொழுது வியாதியைக் குணப்படுத்துவதற்காக மாந்திரீகர்களிடம் செல்பவர்கள் குறைந்துவிட்டார்கள். பிரார்த்தனை, அறிவை ஆன்மாவின் நிலைக்கு உயர்த்தி, அறிவின் தெளிவை அதிகரிக்கிறது.  இப்படி அதனுடைய நிலை உயரும்பொழுது சூழ்நிலையில் இதற்குமுன், அதற்குத் தென்படாத விஷயங்கள் தென்படுகின்றன. அதனால் தீர்வு கிடைக்கிறது.  பிரார்த்தனை என்பது ஆன்மாவின் ஆற்றலாகும். தீர்வுஎன்பது ஜடநிலையில் (physical level) பெறக்கூடிய ஒரு செயல்பாடு ஆகும். முன்னதைப் பின்னதாக மாற்றுவதுதான் நாகரீக வளர்ச்சியாகும்.

     ஓர் அமெரிக்கப் பொறியியல் வல்லுநருக்கு சர்க்கரை வியாதி வந்து விட்டிருந்தது.  ஆனால், அவர் அதை அறியவில்லை. 12 புள்ளிகளாக இருக்க வேண்டியது ஆயிரம் புள்ளிகளாக உயர்ந்துவிட்டது.  இருந்தாலும் அவர் நடமாடிக்கொண்டிருந்தார்.  ஒரு நாள் அவருக்கு மயக்கம் வந்தது.  அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். டாக்டர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.  அவருடைய தாயாருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.  அவர் மகனை பிரார்த்தனை செய்யச் சொன்னார்.                    ஆனால், மூன்று மாதங்களாக மருத்துவமனைக்கு வந்து மகனைப் பார்க்கவில்லை.  பொறியியல் வல்லுநரின் மகள் அவருடன் வந்து மூன்று மாதங்கள் தங்கி, அவருக்குச் சமைத்துக் கொடுத்தாள்.  நோயாளி, டாக்டர்கள் அவருக்குச் சொல்யவற்றை எல்லாம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். நான்கே மாதங்களில் சர்க்கரை வியாதியைப் பற்றி அவரே ஒரு வல்லுநராக மாறினார்.  அவர் எடுத்த குறிப்புகளெல்லாம் சக நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவர் செய்த ஆராய்ச்சிகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்று அவர் மகள் விரும்பினாள். அவருடைய ஆராய்ச்சி மிகவும் விரிவாகவும், துல்லி யமாகவும் இருந்தது.  நான்கே மாதங்களில் பூரண குணமாகி, மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சையிருந்து விடுபட்டார். மருந்து, மாத்திரைக்குப் பதிலாகக் கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டார். இறுதியாக சர்க்கரை வியாதியைப் பற்றிப் புத்தகத்தையும் எழுதினார். சர்க்கரை வியாதியைப் பற்றி, இருப்பதிலேயே சிறந்த புத்தகம் இதுதான் என்று இப்பொழுது கருதப்படுகிறது. அவர் குணமாவதற்கு பிரார்த்தனை, மருந்து, மாத்திரை, மருத்துவச் சிகிச்சை, சுயக்கட்டுப்பாடுஎன்று எல்லாம் காரணமாக இருந்தன. சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த காலத்தில் எதேச்சையாக நிகழ்ந்த ஓர் ஆறு நிகழ்ச்சிகள் அவர் குணமாவதற்குக் காரணங்களாக இருந்தன. இவையெல்லாமே பிரார்த்தனை அவருக்கு எப்படி உதவியது என்பதை நிரூபிக்கின்றன.

  • அவருடைய அனுபவத்தை எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு செயல் முறையாக அவர் மாற்றியுள்ளார்.
  • அவர் வாழ்க்கையில் எதேச்சையாக நிகழ்ந்ததை மற்றவர்கள் தாமே தேர்வு செய்து பின்பற்ற வேண்டும் என்கிறார்.

பிரார்த்தனைஎன்பது பெரிய ஆன்மாக்களுக்கு உரியது. வல்லுநர்களின் சேவை என்பது சாதாரண குடிமக்களுக்கு உரியது. பிரார்த்தனை தனிப்பட்ட மனிதனுக்கும், சேவை சமூகத்திற்கும் உரியன. வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும் இன்று வல்லுநர்கள் வந்துவிட்டதால் ஏதோ ஒரு சில உயர்ந்த மனிதர்களுக்குக் கிடைக்கக்கூடியது எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய காலம் வந்துவிட்டது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரகிருதி மனத்தாலும், உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வாழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்சினை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.


உள்ளக் கிளர்ச்சியிலுள்ளது உலகத்துப் பிரச்சினைகள்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மேலெழுந்தவாரியான மனம்:
எண்ணம், உணர்வு, செயலனைத்தும் மேல்மனத்தைச் சார்ந்தவை. நாம் மேலெழுந்தே வாழ்கிறோம்; உடலும் அதற்கு உரியதே.


மனம், உணர்வு, உடல், மூன்றும் சேர்ந்தது மேல்மனம்.



book | by Dr. Radut