Skip to Content

01 - தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும், ஸ்ரீ அரவிந்தமும்

கர்மயோகி

     நம் வாழ்வு முழுவதும் நம் பழமொழிகளால் பிரதிபலிக்கப்படுகிறது. அவற்றுள் பலவற்றை எடுத்து, அதற்குரிய அன்னை கருத்தை எழுதி உள்ளேன்.  சில ஒன்று போருக்கும். மற்றவை எதிர்மாறாக இருக்கும்.  ஒரு சில முற்றிலும் மாறியிருக்கும்.  நம் வழக்கிலுள்ள கருத்திற்குப் பொருத்தமான அன்னை கருத்தை எழுதுவதே என் நோக்கம்.

  1. கெஞ்சினால் மிஞ்சுவது; மிஞ்சினால் கெஞ்சுவது. 
  • காரியம் ஆகும்வரைக் காலைப் பிடிப்பது; காரியம் ஆனபின் சிண்டைப் பிடிப்பது.
  • அய்யோ பாவம் என்றால், ஆறு மாதத்துப் பாவம் கையோடு வரும்.
  • தீட்டிய மரத்தில் கூர் பாய்வது.
  • பரோபகாரம் படு அபசாரம்.
  1. ஆவாதவன்தான் ஆபத்திற்கு உதவுவான்.
  • முரண்பாடே உடன்பாடு.
  1. கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானம் துறந்து வையகம் காட்டுவானா?
  • சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றாதவன், யோகத்தில் சாதிக்க முடியுமா?
  1. தர்மம் தலை காக்கும்.
  • அழைப்பை அருள் தவறாது ஏற்கும்.
  1. தானாடாவிட்டாலும் தன் தசையாடும்.
  • நீ மறந்தாலும், நின் அருள் மறவாது.
  1. பட்ட காலிலே படும்; கெட்ட குடும்பமே கெடும்.
  • அதிர்ஷ்டம் வரும்பொழுது அனைத்து திசையிருந்தும் வரும்.
  1. தோட்டத்துப் பச்சிலைக்கு மரியாதையில்லை.
  • மனிதன் unconsciousஆக இருக்கிறான்.
  1. 30 வருஷம் வாழ்ந்தவனுமில்லை; 30 வருஷம் கெட்டவனுமில்லை.
  • என் மீது கோபப்படாதவர் ஒருவருமில்லை.
  1. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
  • வேண்டும் என்பதை மனிதன் சாதிப்பான்.
  1. தைரியலக்ஷ்மி உள்ள இடத்தில் மற்ற எல்லா லக்ஷ்மிகளும் வருவர்.
  • சமர்ப்பணம் உள்ள இடத்தில் எல்லாக் காரியங்களும் நிறைவேறும்.

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

நினைவே ஒரு செயலைத் தீமையாக்குவது; அல்லது தீமையாகக் காண்பிப்பது. செயலில் தீமையில்லை. செயல், வெறும் செயலாகும்.

தீமை செயலில்லை; நினைவிலுள்ளது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.

விஸ்வாசத்தை உணர முடியாத மனிதன்.

ஜீவியத்தின் ஓசை

 

  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஜோதி அறிவுக்குரியது.
  • புத்தகம் அறிவைத் தாங்கி வருவது.
  • புத்தக சேவை ஸ்ரீ அரவிந்த ஜோதிக்குரிய சேவை.
  • சித்தி மனித முயற்சி; அருள் தெய்வ அனுக்கிரஹம்.
  • மனித முயற்சி முடியுமிடத்தில் தெய்வ அருள் செயல்படும்.

 



book | by Dr. Radut