Skip to Content

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)

அண்ணன் - இரு தலைப்புகளாகப் பிரித்துச் சொல்கிறேன்.

கதை

நம் வாழ்வு

1. புரட்சியை விலக்க முடியும்

- நஷ்டம், ஆபத்து, கஷ்டத்தை விலக்க

முடியும்.

2. எலிசபெத்தின் உயர்குணம் உயர்வு பெறுகிறது.

- மனம் செல்வத்தை உற்பத்தி செய்யும்.

3. உலகம் மாறும் நேரம் அதிர்ஷ்டம் அநேகரைத் தேடி வருகிறது

- அன்னைச் சூழலில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

4. அதிர்ஷ்டத்தை அனைவரும் விலக்குகின்றனர்.

- நாம் அருளை விட்டுப் போகிறோம்.

5. சார்லேட் நல்லெண்ணம் அவளுக்கு அதிர்ஷ்டம் தருகிறது.

- சார்லேட்போல் நல்லெண்ணம் மட்டும்

இருந்தால் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி

வரும்.

தம்பி - முக்கியமான இடத்தைக் சுட்டிக்காட்டுங்களேன்.

அண்ணன் - எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்ற கதை எல்லா நாடுகளிலும் இருப்பதாகத் தெரிகிறது. பரவலாக வறுமையுள்ள நாடுகளில் பொதுவான அபிப்பிராயம் இது.

நாடு வளம் பெற நாம் மனத்தால் கொள்ளும் கொள்கை உயர்ந்ததாக இருக்க வேண்டும். எனக்கு வரும் அதிர்ஷ்டம், அதற்குமுன் அனைவருக்கும் வரவேண்டும் என்ற உணர்வு மனதில் எழுந்தால், அது தானே வரும்.

தம்பி - அதிர்ஷ்டம் என்பதை அருளால் ஒருவர் உற்பத்தி செய்ய முடியும். அது நல்லவரால் மட்டும் முடியும் என மிகவும் வலியுறுத்திப் பல முறை சொல்லி விட்டீர்கள். மீதி சொல்வனவெல்லாம் புரியாமலில்லை. இருப்பினும் ஏதோ ஒரு குறையிருப்பதாகத் தெரிகிறது.

அண்ணன் - விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல் எதுவும் தெரியவில்லையே என்பதுதான் குறை.

தம்பி - இருக்கலாம்.

அண்ணன் - நான் சொல்கிறேன். நீ கேட்கிறாய். கேட்டால் மனம் அறியும். விதை முளைப்பது கேட்பதால் எப்படித் தெரியும்? முளைத்தபின்தானே தெரியும். செய்ய ஆரம்பித்தால் தெரியாமலிருக்காது.

தம்பி - அதிர்ஷ்டம் வரும் என்ற தெளிவுக்கு மாற்றம் தெரியாதா?

அண்ணன் - தெளிவுக்குத் தெளிவு எழும். நம்பிக்கைக்கு மாற்றம் மனதில் தெரியும்.

தம்பி - தெளிவு இருக்கிறது. நம்பிக்கை ஏற்படவில்லை. நம்பிக்கை ஏற்படும்படிச் சொல்ல முடியாதா?

அண்ணன் - நம்பிக்கை மனிதனுக்குரியது. அருள் இறைவனுக்குரியது. இறைவனே நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்பது பொருந்தாது.

தம்பி - நான் பெற்ற தெளிவு எனக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டாமா?

அண்ணன் - நம்பிக்கையை ஏற்படுத்தாத தெளிவு, தெளிவாகாது. கருவான இடம் finite மாறி infinite ஆகுமிடம். எப்படிப் பெருகுகிறது என்பதே நம்பிக்கையை எழுப்பும் தெளிவு.

தம்பி - சிறியது பெரியதாகும். அளவுகடந்து பெருகும் என நம்புகிறேன். எப்படிப் பெருகும் என்று தெரியவில்லை.

அண்ணன் - நம் energy சக்தி அளவுகடந்து பெருகினால், பலன் - பணம் - அளவுகடந்து பெருகும். அதை விளக்கமாகச் சொல்ல முடியும்.

தம்பி - நமக்கு அபரிமிதமான energy எங்கிருந்து வரும்?

அண்ணன் - நாம் இப்பொழுது நம் திறமையில், energyஇல் 1/100 பங்கு, 1/1000 பங்குதான் பயன்படுத்துகிறோம். மற்றவற்றைச் சோம்பலில் விட்டுவிடுகிறோம்.

தம்பி - நம் energy 100 மடங்கு, 1000 மடங்கு பெருகுமா?

அண்ணன் - நம் energyயை physical, vital, mental, உடல், உணர்வு, மனம் எனப் பிரித்து அங்கெல்லாம் இப்பொழுது energy எப்படியிருக்கிறது, எப்படி அது பெருகும் எனக் கூறலாம்.

தம்பி - Energy சக்தி பெருகுவதைக் கூறலாம். கெட்டது, நல்லதை எப்படிச் சொல்ல முடியும்? திருடனுக்கு அபாரசக்தி எதிராக இருக்கிறது. அதையும் நல்லவனுடைய சக்தியையும் எப்படி ஒப்பிடுவது?

அண்ணன் - திறமைகளை உடலுக்கு உரியவை 1 எனவும், உணர்வுக்குரியவை 10 எனவும், மனத்திற்குரியவை 100 எனவும், ஆன்மாவுக்குரியவை 1000 எனவும், அன்னைக்குரியவை 10,000 எனவும் கருதலாம். மனம், உணர்வு வருமிடங்களில் கணக்காகச் சொல்ல முடியாது. உத்தேசமாகப் பேசுவதற்குப் பதிலாக 10 அல்லது 100 என்று கூறலாம்.

தம்பி - ரூ.7000 வருமானமுள்ள வீட்டில் இலட்ச ரூபாய் வருமானம் வருவது அதிர்ஷ்டம் என்றால் அவர்கள் சக்தி 15 மடங்கு பெருகவேண்டும் என்று கணக்காகச் சொல்வதற்குப் பதிலாக அது 50 அல்லது 100 மடங்கு பெருகும் என்பதை மனம் தெளிவாக அறிந்து கொண்டால், அதன் விளைவாக நாளைக்கு 1 இலட்சமோ, பல இலட்சமோ வருமானம் பெருகினால், நம் விளக்கம் சரி எனக் கொள்வோம்.

அண்ணன் - சுருக்கமாகப் பேசிப் பார்ப்போம். physical (உடல்) என்பதற்கு சுத்தம், ஒழுங்கு போன்றவற்றைக் கூறுகிறோம். Vital(உணர்வு) என்பதற்குப் பேச்சு, உறவு (human relationship) போன்றவற்றைக் கூறுகிறோம். எரிச்சல், கோபம் என்பவை எதிரானவை. Minus மார்க் போடுவோம். அபிப்பிராயம் opinion என்பதை மனம் என்போம். அதுவரை scale அளவுகோல் போடுவோம்.

தம்பி - வீட்டைச் சுத்தமாக, ஒழுங்காக வைக்க 10 அல்லது 20 மடங்கு சக்தி தேவை. அதுவே 7000த்தை இலட்சமாக்கிவிடுமே.

அண்ணன் - அதுதான் உண்மை. இந்த முறைகளைச் சரிவர அனுசரித்தால் 100 அல்லது 500 மடங்கு நம் energy பெருகும். அதையே அதிர்ஷ்டம் என்கிறேன்.

தம்பி - 100 மடங்கு என்றால் மாதம் 7 இலட்சம், 500 மடங்கானால் 35 இலட்சமாயிற்றே.

அண்ணன் - கணக்கு அப்படி வாராது.

தம்பி - பின்னே, குறைவாக வருமா?

அண்ணன் - அதிகமாக வரும். நான் விளக்கும்வரை பொறுக்க முடியாதா? வீட்டைச் சுத்தம் செய்து ஒழுங்காக வைப்பதை நாம் ஏராளமாகப் பேசியதால் அதை மீண்டும் சொல்லாமல் அதனால் சக்தி 10 மடங்கு பெருகுவதாகக் கொள்வோம். உடலுக்கு ஒன்று எனில் உணர்வுக்கு 10 என்றேன்.

தம்பி - சுத்தம் செய்வதால் 10 மடங்கு சக்தி பெருகினால், அதே முயற்சியை உணர்வால் செய்தால், அதன் பலன் 10 மடங்கல்ல அதிகம் என்றாகுமோ?

அண்ணன் - கோபம் எதிரானது. என் கோபம் கொஞ்சமானது அதனால் அதற்கு score பாயிண்ட் -12 என்று போட்டால், நான் கோபத்தைக் கட்டுப்படுத்திவிட்டால் -12 மாறி "0'க்கு வருகிறது. எந்த அளவுக்குக் கோபம் வந்ததோ, அதே அளவுக்குச் சாந்தம் வந்தால் பலன் உணர்வில் 12 என்று கூறுவோம்.

தம்பி - உணர்வு, உடலைப்போல் 10 மடங்கு அதிகப் பலன் தரும் என்றால், கோபம் சாந்தமானதற்கு 12 பாயிண்டுக்கு உடல் (சுத்தம்) 120 பாயிண்டுக்கு சமமா?

அண்ணன் - சுத்தம் 10 மடங்கு உயர்ந்தது என்றோம். சாந்தம் 12 என்றோம். உடல் 10 + உணர்வு 120 ஆக "நாம்'' 130 பாயிண்ட் உயர்ந்ததாக அர்த்தம்.

தம்பி - உடலுக்கு 1 எனில் அதே 1 பாயிண்ட் முயற்சி உணர்வில் எடுத்தால் உடலில் 10 பாயிண்ட் முயற்சியாகக் கொள்கிறோம். எனவே சுத்தமும், சாந்தமும் 130 மடங்கு எனில் 910000. மாதம் 9 லட்சம் என்றால் அது வெறும் அதிர்ஷ்டமில்லையே, பெரிய அதிர்ஷ்டமாயிற்றே.

அண்ணன் - கொஞ்சம் பொறு, கணக்குக்கு வருவோம். மனம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் தவறான அபிப்பிராயத்துடன் நடக்கிறார். அவருக்கு அண்ணார் உதவி வசதியாக இருக்கிறது. அப்படி அவர் பெறுவது தம் வருமானமும் உதவியும் சேர்ந்து ரூ.7000 என்றால் 'இனி நான் உதவி பெறப் போவதில்லை' என்று உதவியை மறுத்துச் சொந்தமாக வாழ ஆரம்பித்தால் minus மாறி plus ஆகிறது. Minus 8லிருந்து +5க்கு இவ்விஷயத்தில் அவர் மாறினால்.....

தம்பி - அந்த புரோக்கர் ஏராளமாகச் சம்பாதிக்கிறார் என்று அவர் குடும்பத்தை ஒன்றாக ரொம்ப நாள் வைத்திருந்தார். தம்பி பிரிந்து வந்தார். சண்டை என்றில்லை. சொந்தமாக வந்த பிறகு வீடு வாங்கினார். 1 பஸ் ஓடுகிறது.

அண்ணன் - மனம் என்பது உடலைப்போல் 100 மடங்கு என்றேன். +5 என்றால் நீ 500 என்று கொள்வாய். -8லிருந்து +5க்கு வந்தால் 13 பாயிண்ட் மாறியிருக்கிறார். அதாவது உடல் கணக்குப்படி 1300 ஆகும். சாந்தத்தை 12 என எடுத்துக்கொண்டோம். அது -12லிருந்து +12 எனில் 24 பாயிண்ட். உடல் கணக்கில் 240.

தம்பி - இப்படி எனில்!

அண்ணன் - ஒவ்வொரு மாறுதலுக்கு இப்படிப்பட்ட உயர்வுண்டு. ஸ்ரீஅரவிந்தர் The Mother என்ற புத்தகத்தில் மனத்திற்கு 5, உணர்வுக்கு 12, உடலுக்கு 12 என 29 பாயிண்ட்களில் நாம் தவற்றிலிருந்து நல்லதற்கு மாறவேண்டும் என்கிறார்.

தம்பி - உங்கள் கணக்குப்படி 29 எனில் எங்கோ போகிறதே!

அண்ணன் - கணக்கு என்பது பேசும் முறை. விஷயம் என்ன? நம் சக்தி அபரிமிதமாகப் பெருக ஆயிரம் வழிகள் உள்ளன.

தம்பி - ஆன்மாவுக்கும், அன்னைக்கும் ஓர் உதாரணம் சொல்லுங்கள். அது 1000மாகவும் 10,000மாகவும் சொன்னீர்களே.

அண்ணன் - நாமெல்லாம் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைப் படிப்போம். அத்துடன் சரி. பிரார்த்தனை செய்வோம். அத்துடன் நம் பக்தி முடிந்துவிடுகிறது.

தம்பி - நடப்பது அருளாலும், அன்னைச் சூழலாலும் ஆகும். கொஞ்ச நாள் கழித்து அதுவும் நின்றுவிடுகிறது.

அண்ணன் - ஒரேயொரு பிரார்த்தனை பலிக்கவில்லை என்றால் அது danger signal. நம் பக்தி ஜீவனற்றுப் போய்விட்டது எனப் பொருள்.

தம்பி - ஒன்று பலிக்கவில்லை என்றால், கொஞ்ச நாளில் 9 பலிக்காது. ஒன்றுதான் பலிக்கும்.

அண்ணன் - பக்தி ஜீவனோடில்லை என்றால், பிரார்த்தனைக்கு வேலையில்லை. பிறகு எந்தப் பிரார்த்தனையும் பலிக்காது. பழைய காலத்து ஜபம் போலாகும்.

தம்பி - விஷயம் மனம் மாறுவதில்தானிருக்கிறதுபோலும்.

அண்ணன் - Silent will மௌனமான செயல் என்பதை மனத்திற்குரியது எனலாம். Silence மௌனம் என்பதால் ஆன்மாவுக்குரியது. 1000 மடங்கு உடலைவிட அதிகப் பலன் தருவது. இந்த ஒரே கருவியால், கோடீஸ்வரராக ஆனவர் ஒரு பக்தர்.

தம்பி - அன்னைக்குரியது எது?

அண்ணன் - Another man's point of view பிறர் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது. இதைப் பின்பற்றியவர் பெற்ற பலன் 10,000 மடங்கில்லை, அதைவிடப் பெரியது. நாம் எல்லா இடங்களிலும் (உடல், மனம்) minusஇல் இருக்கிறோம். Plusஆக வேண்டும் என்றால் ஆயிரம் மடங்கு உயர வழியுள்ளது என்று அறிகிறோம்.

அதிர்ஷ்டம் வர minus இருக்கக்கூடாது.

Minus point உள்ளவர்கள் plusஆக மாறும்வரை இந்தக் கணக்கு பூஜ்யமான பலன்தான் தரும்.

தம்பி - அதிர்ஷ்டம் வர நாம் சொல்லும் முறையை இந்த வகையில் சொல்லுங்களேன்.

அண்ணன் - பிறர் வாழ சந்தோஷப்படுபவர்க்கு அதிர்ஷ்டம் தானே வரும்.

தம்பி - பிறர் அழிய நினைப்பவர் நிலை என்ன?

அண்ணன் - அதைப்பற்றிப் பேசுவதைவிட நல்லதை மட்டும் பேசுவது போதும். பிறர் வாழ விரும்புவது அன்னை வழி. அதற்கு 10,000 பாயிண்ட் மதிப்புண்டு.

தம்பி - சந்தர்ப்பத்தால் நம் தொழில் பிறர் வாழ வகை செய்கிறது. அதுவும் அதே பலனைத் தருகிறதல்லவா?

அண்ணன் - அப்படி நடந்தால்தான் நமக்கு இந்தக் கொள்கை பயன்படும். நாமாக அதைச் செய்வதில்லை.

தம்பி - பிறருக்கு உதவுவது ஆபத்து என்றும் கூறுகிறீர்களே.

அண்ணன் - வலிய பிறருக்கு உதவப் போவது வேறு, அதில் பெருமையுண்டு. நான் சொல்வது நல்லெண்ணம். இந்த வித்தியாசம் தெரியுமே.

தம்பி - அது தெரியும். நல்லெண்ணத்தால் மட்டும் செய்தால் தவறு வாராது. அதிர்ஷ்டம் வரும்.

அண்ணன் - பிறர் அழிய விரும்பும் எண்ணம் minus 1000. அதனால் பிறர் வாழ விரும்புவது அதற்கெதிரானது, அன்னைக்குரியது. 10,000 பாயிண்ட் மதிப்புள்ளது.

தம்பி - இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் எத்தனையோ 1000 மடங்கு உயரலாம் போலிருக்கிறதே.

அண்ணன் - நடைமுறையில் நாம் எதிரான திசையில் போய்விடுவதாலும், மனமாற்றத்தை நாடாததாலும், பெரும் பலன் தெரிவதில்லை.

தம்பி - உடலுக்கு 15 தலைப்பு, உணர்வுக்கு 12, மனத்திற்கு 10 என அது வளர்ந்துகொண்டே போகிறதே.

அண்ணன் - பெரு முன்னேற்றம், அடுத்தது அதிர்ஷ்டம்.

தம்பி - அருளும், பேரருளும் அவற்றைக் கடந்தன.

அண்ணன் - செய்து பலனைக் காண்பது முக்கியம். பேசுவது பலனில்லை.

தம்பி - பணம் சம்பந்தப்பட்ட வேறு கருத்துக்கள் இருக்கின்றனவா?

அண்ணன் - பணம் பெருகும் என்பதை 3 தலைப்புகளில் கூறலாம்.

1) மனிதச் சமூகத்தில் பணம் அவனுக்குச் செய்யக்கூடிய சேவையில் சிறு பங்குக்குக் (10%) குறைவாகவே பெறுகிறான்.

2) சமூகமே - குறிப்பாக இந்தியாவில் - பணம் செய்யும் சேவையில் 10%தான் பெறுகிறது.

3) புது product வந்தால் அது சமூகத்தில் பரவும்பொழுது தனி மனிதனுக்குப் பெருஞ்சேவையை செய்யும். அதை மனிதன் ஓரளவே பெறுகிறான்.

தம்பி - முழு விளக்கம் தேவை.

அண்ணன் - பணம் என்பது நாளுக்கு நாள் மனிதனுக்குப் புதிய சேவைகளைச் செய்ய முன்வருகிறது. உதாரணமாக xerox வருமுன் 100 காப்பி எடுக்கவேண்டுமானால் 100 காப்பி டைப் செய்ய வேண்டும். Xerox வந்தபின் காப்பி எடுப்பது சுலபம். செலவு குறைவு. நாம் xerox ஐப் பயன்படுத்தாவிட்டால் பழைய செலவே செய்யவேண்டி வரும். பழைய செலவு ரூ.200, புதிய செலவு ரூ.75 என்றால் நாம் புது முறையை ஏற்பதால் பழைய (வருமானம்) ரூபாய்க்கு 3 மடங்கு அதிகப் பலன் எனப் பொருள்.

தம்பி - இதுபோல் யோசனை செய்தால் தவணை முறை, credit card எனப் புதியதாக ஏராளமான முறைகள் வந்துள்ளனவே.

அண்ணன் - சீட்டுக் கட்டுவது என்பது நெடுநாளைய முறை. இதைப் பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் இதை ஏற்காதவர் உண்டு. இந்த விஷயத்தைப் பொருத்தவரை அவருடைய ரூபாய்க்கு 15 பைசா மதிப்பு குறைவு. ரூ.10,000 வருமானமுள்ளவர் 8500 சம்பாதிப்பதாக அர்த்தம்.

தம்பி - பாங்கில் பணம் போடாதவர்க்கு, போடும் பழக்கமில்லாதவர்க்கு வட்டி நஷ்டம். சமயத்தில் பணமே திருடு போகும்.

அண்ணன் - Study ஆராய்ச்சி என்று எடுத்தால் பொதுவாக நம்மைப் போலுள்ளவர்க்குச் சமூகத்தின் பல சௌகரியங்கள் தெரியாது. தெரிந்தாலும் பயன்படுத்துவதில்லை. அதுவும் கிராமப்புறத்திலுள்ளவர் அறிவது குறைவு.

தம்பி - என் அபிப்பிராயம் நாம் இதுபோன்ற வசதிகளில் பாதியைத்தான் பயன்படுத்துகிறோம்.

அண்ணன் - Studyதான் புள்ளியைச் சரியாகக் கொடுக்கும். 75% பயன்படுத்துவதில்லை என்று கூறலாம்.

தம்பி - 50% என்றால் நாம் மாறினால் நம் பணத்திற்கு இருமடங்கு மதிப்பு வரும். 75% என்றால் 4 மடங்கு மதிப்பு வரும். நம்பமுடியவில்லையே.

அண்ணன் - முறைகள் மட்டுமல்ல, time, energy, space, materials, ஆகியவற்றை மிச்சம் செய்யும் முறைகள் சமூகத்தில் ஏராளமாக உண்டு. இவையெல்லாம் யார் கண்ணிலும் படாது. பட்டால், "நமக்கு இவையெல்லாம் எதற்கு?'' என்பார்கள்.

தம்பி - படிப்பு, பண்பு, பக்குவம், அறிவு, அனுபவம், நகர வாழ்வு, பிரயாணம் ஆகியவை இதை நிர்ணயிக்கின்றன.

அண்ணன் - சமூகம் இன்ஷூரன்ஸ் தருகிறது. பயன்படுத்துபவர் குறைவு. இன்றும் நம் இன்ஷூரன்சில் பிள்ளைகள் திருமணம், படிப்புக்குக் குழந்தை பிறந்தவுடன் பாலிசி எடுக்க முடியும் என்பது தெரியாதவர் உண்டு. படித்தவர்க்கேத் தெரியாது. நாம் 5%தான் பணத்தைப் 'பயன்படுத்துகிறோம்'. அதாவது இம்முறைகள் முழுவதையும் கற்று, பயன்படுத்துவதால் நம் பணம் 20 மடங்கு பெருகும்.

தம்பி - யாருமே நம்ப முடியாதது போலிருக்கிறது. பெரு நகரங்களில் ரூ.10,000 வருமானமுள்ளவர் கிராமத்தில் 80,000 வருமானமுள்ளவர் அனுபவிக்கும் வசதிகளை அனுபவிப்பதைக் காண்கிறோம். இதன் இரகஸ்யம் இப்பொழுது புரிகிறது. தனி மனிதன் பயன்படுத்தாததுபோல் சமூகமே பயன்படுத்தாத முறைகள் ஏராளம். புது product வந்தால் அது கொடுக்கும் வாய்ப்புகள் அளவுகடந்தது. பணத்தைப் 'பெருக்க' மனிதன் தானும், சமூகமும் இதுவரை பயன்படுத்தாத முறைகளை ஒன்றுவிடாமல் பட்டியல் போட்டு, அவற்றுள் தன் சந்தர்ப்பத்திற்கு ஒத்த அனைத்தையும் பயன்படுத்தி, தன் வாழ்வில் புது product - கம்ப்யூட்டர் போன்றது - உடன் இணைத்துக் கொண்டால், தவறாமல் அது 10 மடங்கு பெருகும் என்று புரிகிறது.

அண்ணன் - சமூகம் - சர்க்கார் - இதைக் கொள்கையாக ஏற்றால் நாட்டில் real money அச்சடித்த பணமில்லை (not deficit financing) 10 மடங்கு உபரியாகும். ஏனெனில் 100 மடங்கு பெருகும் வாய்ப்பு இருப்பதால் 10 மடங்கு நிச்சயம் பலன் தரும்.

தம்பி - இதை யோசனை செய்தால் ஏற்கனவே பணப்புழக்கம் இதுபோல் ஏராளமாகப் பெருகியுள்ளது என்று தெரிகிறது.

அண்ணன் - இதேபோல் நம் எனர்ஜி, திறமை, நேரம் ஆகியவற்றையும் அளவுகடந்து பெருக்கலாம்.

தம்பி - 10 மடங்கு பணம் பெருகுவது சிரமமன்று என்று ஆணித்தரமாக நம்பலாம்.

அண்ணன் - விபரம் தெரியவேண்டும், முயற்சி செய்யவேண்டும். ஆர்வம் தேவை.

தம்பி - இவற்றைக் கடந்த நிலையில் நல்லெண்ணமுண்டு. முடிவாக அன்னை இருக்கிறார்.

அண்ணன் - இவ்வளவு சந்தர்ப்பம் உள்ளபொழுது பணம் பற்றாக்குறை என்று கூறுவது சரியில்லை.

தம்பி - அன்னை அதிர்ஷ்டமானவர், அதிர்ஷ்டம் தருவார் என்று வெகுநாளாக நாம் கேள்விப்படுகிறோம். சாதாரண மக்களுக்கும் புரியும்படி இதைச் சொல்ல முயன்றேன். பல பகுதிகள் தெளிவாக வருகின்றன. சில விட்டுப் போகின்றன.

அண்ணன் - நானும் இதே கருத்தைப் பலருடன் பேசியிருக்கிறேன். யோசனை செய்திருக்கிறேன். நான் சொல்வது எல்லாம் எனக்குத் தெளிவாக இருக்கிறது. பலரும் தெளிவாக இருக்கிறது என்கின்றனர். எவரும் செய்ய முன்வருவதில்லை.

தொடரும்.....

****


 


 



book | by Dr. Radut