Skip to Content

06.அஜெண்டா

“Agenda”

1. The Supramental Light gives knowledge and pwoer.

2. An intermediate stage is necessary.

3. The intermediate stage is the capacity to prolong life at will.

4. In the Supramental Consciousness one is in contact with the Supreme Lord.

5. Sense of wear and tear is abolished, establishing a flexibility but the spontaneous immortality is not possible.

6. Changing sense of time help abolish wear and tear.

7. Thinking and foreseeing brings you inside Time.

1. சத்திய ஜீவிய ஜோதி ஞானத்தையும், சக்தியையும் தரும்.

2. இடைப்பட்ட நிலை தேவை.

3. இடைப்பட்ட நிலை ஆயுளை நம் இஷ்டப்படி வளர்க்கும்.

4. சத்திய ஜீவியத்தில் நாம் காலத்தைக் கடந்த ஈஸ்வரனுடன் தொடர்புகொள்கிறோம்.

5. உடல் தேய்வது மறைந்து உடல் கனியும், ஆனால் உடனே அமரத்துவம் வாராது.

6. காலத்தை நாம் அறிவது மாறினால் தேய்மானம் மறையும்.

7. சிந்தனை, எதிர்காலத்தை அறிவது இரண்டும் நம்மைக் காலத்திற்குட்படுத்தும்.

1. மனத்தில் ஞானமும், சக்தியும் பிரிந்துள்ளன. புரிவதை நாம் செய்ய முடியாது. புரிவதைச் செய்ய முடிவு செய்தால் செய்யலாம். சத்திய ஜீவியத்தில் புரிந்தால் செயல் தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும்.

2. நமக்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடைப்பட்ட நிலை ஒன்று அவசியம்.

3. இடைப்பட்ட நிலையில் ஆயுள் தானே வளரும்.

சத்திய ஜீவனுக்கு மரணமில்லை.

அதற்கு முந்தைய நிலையில் ஆயுள் வளர்வது இயல்பு.

அன்பர்கள் அனைவருக்கும் ஜாதகப்படி உள்ள ஆயுள் நீண்டுள்ளது.

4. ஈஸ்வரன் பிரபஞ்சத்தையும், உலகையும் சிருஷ்டித்தவன். அவன் காலத்திலும், காலத்தைக் கடந்தும் உள்ளான். காலத்தைக் கடந்த ஈஸ்வரனுடன் நமக்கு சத்திய ஜீவியத்தில் தொடர்பு ஏற்படும்.

5. மரணம் தேய்மானத்தால் ஏற்படுவது. தேய்மானம் இப்பொழுது அழிந்தால் மரணம் பின்னால் அழியும்.

6. அழிவு, தேய்மானம், மரணம் ஆகியவை காலத்திற்குரியவை.

7. சிந்தனையால் நாம் காலத்துள் வருகிறோம். மௌனத்தால் காலத்தைக் கடக்கின்றோம். எதிர்காலத்தை அறியும் அவா நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதைக் காட்டும். காலம் நம்மைக் கட்டுப்படுத்தாத நேரம் எதிர்காலம் நினைவு வருவதில்லை. குறி கேட்பது, ஜாதகம் பார்ப்பது, எப்பொழுது திருமணமாகும் என அறிய விரும்புவது நம் மனம் காலத்தால் கட்டுண்டது என்பதைக் குறிக்கும்.

****



book | by Dr. Radut