Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

லைப் டிவைன்                                                                   கர்மயோகி

                (சென்ற இதழின் தொடர்ச்சி....)
 

XII. Delight of Existence : The Solution

Page No. 101 , Para No. 2

12. ஆனந்தம் - விளக்கம்

These are the three essential aspects of Being.

சத்புருஷனுக்கு முக்கிய அம்சங்கள் மூன்று.

One in reality.

அவை மூன்றும் உண்மையில் ஒன்றே.

To our mental view they are triune.

மனம் அவற்றை மூன்றாகக் காண்கிறது.

They are separable only in appearance.

தோற்றத்தால் அவை பிரிந்து தோன்றும்.

They are so in the phenomena of the divided consciousness.

பகுக்கப்பட்ட ஜீவியத்தின் தோற்றம் அது.

The formulae of the old philosophies are divergent.

பழைய தத்துவங்கள் மாறுபட்டவை.

We are able to put them in the right place.

நாம் அவற்றைத் தொகுத்துக் காணவேண்டும்.

Thus they unite.

அவை அப்படி ஐக்கியமாகின்றன.

They become one that way.

அவ்வகையாக அவை ஒன்றுபடுகின்றன.

The age-long controversy ceases.

பரம்பரையான பிணக்கு முடிவுறுகிறது.

We can regard world-existence only in its appearance.

நாம் உலகைத் தோற்றமாகவே காணமுடியும்.

We can regard it only in its relation to immutable Existence.

நாம் உலகை அக்ஷரப்பிரம்மத்துடன் தொடர்புகொண்டு காணமுடியும்.

The immutable Existence is pure, infinite, indivisible.

அக்ஷரப்பிரம்மம், அகண்டம், அனந்தம், தூய்மையானது.

Then we can describe it as Maya.

நாம் உலகை மாயை என்று கூறலாம்.

We can realise it as Maya.

நாம் உலகை மாயையாகக் காணலாம்.

We are entitled to regard it thus.

நாம் அப்படிக் கருத உரிமையுள்ளது.

Maya has an original sense.

மாயை எனில் அனைத்தையும் அறிவது எனப் பொருள்.

It meant a comprehending consciousness.

மாயைக்கு ஆதியில் வேறு பொருள்.

It is a consciousness that contains.

மாயையின் ஜீவியம் அனைத்தையும் தன்னுட்கொண்டது.

It is formative.

அது சிருஷ்டிக்கவல்லது.

Formative because it embraces, measures and limits.

அணைத்து, அளந்து, வரையறை செய்வதால் சிருஷ்டிக்கும்.

It is that which outlines.

மாயையே எல்லையைக் காட்டுவது.

It measures out.

மாயை அளக்கும்.

It moulds forms in the formless.

அரூபத்தினின்று ரூபத்தை உற்பத்தி செய்கிறது மாயை.

It psychologises.

உயிர் கொடுக்கும்.

It makes the knowable unknowable.

தெரியாததைத் தெரிந்ததாக்கும்.

It geometrisises.

ரூபம் தரும்.

It makes the measurable limitless.

அளவோடுள்ளதை அளவற்றதாக்கும்.

Later Maya acquired a pejorative sense.

பிற்காலத்தில் மாயைக்குத் தவறான பொருள் ஏற்பட்டுவிட்டது.

It meant cunning, fraud, illusion.

இல்லாதது, திருடு, மோசடி என்று பொருள்.

It is now in the figure of an enchantment or illusion.

இல்லாதது, மந்திர சக்தியால் கட்டுண்டது என்ற பொருள் இப்பொழுதுள்ளது.

This is the meaning of Maya for the philosophic systems.

தத்துவங்களில் அக்கருத்து நிலவுகிறது.

Page No.101 Para No.3


 

World is Maya

உலகம் மாயை.

World is not unreal.

உலகம் உண்மையன்று.

Unreality means having no existence.

உண்மையில்லை எனில் இல்லாததாகும்.

It may be a dream of the Self.

அது பிரம்மத்தின் கனவாக இருக்கலாம்.

Then it exists in It as a dream.

அது உண்மை எனில் வாழ்வில் அது கனவாக இருக்குமன்றோ?

It is real to It in the present.

இப்பொழுது அதற்கு அது உண்மை.

Even though ultimately unreal, now it is real.

முடிவாக இல்லை எனினும், இப்பொழுது அது உள்ளது.

We must not say the world is unreal.

உலகம் இல்லை என நாம் கூற முடியாது.

Unreality means no eternal existence.

மாயை எனில் நிலையாக இல்லை எனப் பொருள்.

Particular worlds may dissolve.

குறிப்பிட்ட லோகங்கள் கரையலாம்.

It may dissolve physically and return mentally.

ஜடமாகக் கரைந்து மனத்தில் எழலாம்.

It may come from manifestation into non-manifestation

சிருஷ்டியிலிருந்து பிரம்மத்திற்குப் போகலாம்.

Still Form is eternal; world in itself is eternal.

ரூபம் நிலையானது. உலகமே என்பதும் நிலையானது.

All are in potential in non-manifestation.

சிருஷ்டிக்கு முன் அனைத்தும் வித்தாக உள்ளது.

From there they return to manifestation.

அங்கிருந்து சிருஷ்டிக்கு வருகின்றன.

This is inevitable.

இது தவிர்க்க முடியாதது.

They have an eternal recurrence.

முடிவில்லாமல் அவை திரும்பத் திரும்ப வருகின்றன.

They do not have an eternal persistence.

முடிவற்ற நிலை பெறவில்லை.

It is an eternal immutability in sum.

முடிவற்ற சலனமற்ற தொகுப்பு அவை.

It is equally so in foundation.

அடிப்படையில் அவை அதே போலிருக்கின்றன

It goes with an eternal immutability.

அது முடிவற்ற சலனமற்ற நிலை.

It is so in aspect and aspiration.

அம்சத்திலும், ஆர்வத்திலும் அப்படிப்பட்டவை.

People believe in an intuitive perception.

ஞானதிருஷ்டியை மக்கள் நம்புவார்கள்.

It is a perception that the world appears from That.

பிரம்மத்தினின்று உலகம் எழுகிறது என்பது நோக்கம்.

It also believes the world returns into It.

உலகம் மீண்டும் பிரம்மத்தை அடைகிறது எனவும் நம்புகிறார்கள்.

It does so perpetually.

தொடர்ந்து அதுவே நடக்கிறது.

We are not sure of this.

அது நிச்சயமா என நாமறியோம்.

A form of the universe can represent to itself.

பிரபஞ்சத்தின் ரூபம் அதைப் பிரதிபலிக்கும்.

It can be in eternal Conscious-Being.

அது சத் புருஷனில் காலத்திற்குமிருக்கும்.

A play of the being can be so represented.

லீலையை அது பிரதிபலிக்கும்.

It could be in a period of Time.

அது காலத்திற்குட்பட்டதாகவுமிருக்கும்.

This is what we believe.

நாம் இதை நம்புகிறோம்.

Contd...

தொடரும்....


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அதிகாரம், கட்டாயம், தண்டனை ஆகியவை பகவான் யோகத்திற்கு விலக்கு. எந்த நிலைக்குரிய கட்டுப்பாடும் சுயக்கட்டுப்பாடாகவே இருக்க வேண்டும்.

தானே கட்டுப்படாதது கட்டுப்பாடில்லை.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இன்றைய மனிதப் பிறவி நாம் பெறக்கூடிய பல பிறவிகளில் ஒன்று என்றும், பிரம்மம் ஒரு கோடி - நாமுள்ள நிலை அடுத்த கோடி என்றும் அறிவது - நாமே விரும்பிப் பெற்றது இப்பொழுதுள்ளது - ஆன்மீக விவேகம்.

ஆன்மீக விவேகம் இரு கோடிகளையும் அறியும்.


 


 



book | by Dr. Radut