Skip to Content

13.மெயின் ஸ்விட்ச்

மெயின் ஸ்விட்ச்

நாடு முன்னேறும்பொழுது படிப்பு கூடாது என்பவரும் உண்டு. நகர வாழ்வு சரியில்லை, தவறு எனவும் பேசுகின்றனர். பழைய பஞ்சாங்கம், கட்டுப்பெட்டி, மடி சஞ்சி என்பவை பின்னணிக்குப் போனாலும், மனத்தைப் பொருத்தவரை நாம் பெரும்பாலும் பழைய பஞ்சாங்கமாகவேயிருக்கிறோம். அன்னையை அறிவது அதிர்ஷ்டம், பாக்கியம் என நான் கூறுவதை, "இன்று மின்சாரம், படிப்பு வேண்டாம்'' என்பவர் அவற்றை ஏற்க முன்வருதல்போல் எனக் கூறலாம். 60 ஆண்டுகட்கு முன் மின்சாரம் என்றால் விளக்கு, அத்துடன் சரி. அந்நிலை மாறி இன்றைய நிலை வர மனம் மாறவேண்டும். "பிரிஜ் எதற்கு?'', "மிக்ஸி, கிரைண்டர் கூடாது, அதெல்லாம் அதிகம்'' என்று பெரியவர்கள் கூறியது நினைவிருக்கும். எல்லாப் புதிய சாதனங்களும் உள்ள வீடும், மற்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது, மேலும் அதிகமாக முன்னேற முடியும் என நாமறிவோம்.

1940இல் உள்ள கிராமத்து வீடு இன்று டவுனில் உள்ள வீடாக மாறியதுபோல் அன்னையை அறிந்ததால் மட்டும் அன்பர்கள் வாழ்வு மாறுகிறது. அன்னையிடம் பலன் பெற மனம் மாறவேண்டும். ஒரு புதிய வீடு கட்டி அதில் இன்றைய அத்தனைப் புதிய சாதனங்களையும் பொருத்தியபின் அந்த வீட்டில் அவற்றில் ஒரு சிலவற்றைப் பயன்படுத்திவிட்டு மற்றதைத் தொடக்கூடாது என்ற முடிவுடன் இருப்பதைப்போல் நாம் வாழ்வை நடத்துகிறோம். ஒரு வீட்டில் ஒருவர் அன்னையை ஏற்று, மற்றவர் ஏற்க மறுத்தால் அவ்வீடு மேற்சொன்ன வீடாகும். அன்பர் அத்தனை விளக்குகள், fan, fridge போன்றவற்றின் சுவிட்சையும் on செய்து தயாராக வைத்தால், வீட்டிலுள்ளவர் மெயின் ஸ்விட்சை off செய்து வைக்கிறார்கள்.

மனம் மாறுவது மெயின் ஸ்விட்சை on செய்வதாகும்.

****


 


 


 



book | by Dr. Radut