Skip to Content

12.எதிரியை நம்புவது மனிதச் சுபாவம்

எதிரியை நம்புவது மனிதச் சுபாவம்

அத்துடன் நல்லவரை நம்பாததும் மனிதச் சுபாவம். அன்னைக்குப் பிரார்த்தனை செய்து பலிப்பதைக் காண்பவர் அன்னையை நம்பாமல், டாக்டரையோ, பணம் கொடுத்தவரையோ நம்புவது நம் பழக்கம். ஏதோ ஒரு காரணத்தால் அன்னையை விட்டு நம் மனம் விலகுவதும், அவரை நம் வாழ்விலிருந்து விலக்குவதும் நம் பழக்கம்.

*தாம் திவாலானபின் தம்பி குடும்பத்தைக் காப்பாற்றி, தம் கடமைகளை - படிப்பு, திருமணம் - பெரிய அளவில் நிறைவேற்றியபின் தம்பியை அளவுகடந்து கொடுமைப்படுத்தியவர் ஓர் அன்பர். அன்னை தம்பிமூலம் வருவதை மனம் வெறுத்து ஒதுக்குகிறது.

*நம் எதிரிகளை விருந்தாக வீட்டிற்கு வரவேற்கிறோம் என்பது சாவித்திரியில் ஒரு வரி.

இங்கிலாந்தில் மந்திரி ஒருவர் மனைவி அவருடைய முக்கிய தஸ்தாவேஜைத் திருடி எதிரிநாட்டு ஒற்றனிடம் கொடுத்து, திருமணத்தின்முன் அவனுக்கு எழுதிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டாள். பிரதமர் கலங்கிவிட்டார். எப்படியாவது இழந்ததைப் பெறவேண்டும் என முயல, வழி தெரியவில்லை. ஷெர்லக் ஹோம்ஸ் உதவி பலித்தது. தஸ்தாவேஜை ஹோம்ஸ் மந்திரியிடம் கொடுத்தபொழுது, அவர் மனைவியை நோக்கி ஓடி, 'கிடைத்துவிட்டது' எனக் கூறுகிறார். மந்திரியோ, பிரதமரோ ஷெர்லக் ஹோம்ஸ் பக்கம் திரும்பவில்லை. பீஸ் தர முன்வரவில்லை. Thank You எனவும் கூறவில்லை. திருடியவளைத் தேடி மனம் ஓடுகிறது.

நம் பிரார்த்தனைகள் பலித்து பாரம் இறங்கியபின் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்த்தால்,

*அன்னை நினைவு வாராது.

*வரவேண்டியவர் எவர் நினைவும் வாராது.

*வரவேண்டாதவர் நினைவு வரும், அவரைத் தேடிப் போவோம். அவர் நமக்குப் பொதுவாக எதிரியாக இருப்பார் என்று தெரியவரும்.

****


 



book | by Dr. Radut