Skip to Content

11.சாவித்ரி

"சாவித்ரி"

P.38 One glance can separate the true and false.

பார்த்த மாத்திரம் பகட்டு விலகும்

. இருளில் விரைந்தெழும் தீவட்டி.

. மனத்திரையில் எழும் மக்களின் உரிமையை மடக்கவேண்டும்.

. திரையைச் சூழும் தெய்வத்தின் திருட்டு முத்திரைகள்.

. மாய ரூபத்தின் மறைந்த முகம்.

. எண்ணமும் வாழ்வும் எழிலாக எழுந்தன.

. மின்னலாக மிளிரும் உற்சாகம்.

. உயர்ந்த உச்சியின் விரைந்துவரும் தூதன்.

. சலனமற்ற மனத்தின் சப்தமற்ற பாதைகளில் நடந்து வந்தான்.

. மறைந்து நிற்கும் மகர இசையின் இனிய ஓசை.

. எண்ணக் கடலைக் கடந்து எழும் நாதம்.

. மந்திரக் குழலினின்று வரும் தங்கமயமான ஆனந்தம்.

. ஓளியின் ஆனந்தம் ஒளிந்திருந்து பிடித்துவிடும்.

. அழிவற்ற சொல்லின் ஆனந்தப் பூரிப்பு.

. எதுவுமில்லாத இதயத்தை எட்டியவரை நிரப்பியது.

. அனந்தனின் ஆனந்தம் அதிர்ந்து எழுந்தது.

. காலமெனும் கன்னியில் இளமையின் பூரிப்பு மலர்ந்தது.

. க்ஷண சந்திப்பு, பதிந்த பவளம்.

. சொல்லைக் கடந்த ஞானம் சொருகப்பட்ட சொரூபம்.

. ஆழத்தின் அமைதியில் அழுந்த நிலைத்தது.

சாவித்திரிக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பல. முதலில் அவள் மனம் அவள்முன் வந்து, "நானே உன் ஆத்மா'' என்று தன்னைப் பின்பற்றச் சொல்லிற்று. சாவித்திரி, "நீ என் ஆன்மா இல்லை, அதன் பகுதி'' என்கிறாள். அதேபோல் நான்கு அன்னைகள் உள்ளிருந்து எழுந்து அவளை அசைக்க முயல்கின்றன. அதன்பின் எமதர்மராஜா, மனிதர்கள் நினைவையெல்லாம் இறைவனின் ஆணையாக அவள் முன் வைக்கின்றான். அவள் அசையவில்லை. இருளான எமன் ஒளியாக மாறுகிறான். அதன்பின் இறைவன் அவள் முன் வந்து, "உனக்கும் சத்தியவானுக்கும் வேண்டியதைப் பெற்றுக்கொள்'' என்கிறார். "எனக்கு மட்டும் தேவையில்லை. மனித குலத்திற்கு வேண்டும்'' எனக் கேட்டுப் பெறுகிறாள். உள்ளிருந்து ஆன்மா என எழுவதும், கடவுளென வரும் காலனும், இறைவனும் சாவித்திரிக்கு ஆசை காட்டுகிறார்கள். அவள் அத்தனையையும் மீறி சாதனையைப் பூர்த்தி செய்கிறாள். மனிதன் முன் க்ஷணம் தவறாமல் எழுவது ஆசை. அதை விலக்க வேண்டியது அவன் கடமை. அது கடலலை என எழுந்தபடியிருக்கும். கடைசிவரை விலக்க வேண்டியது அதுவே. அது எழும் வகைகள் இந்தப் பக்கத்தில் விவரிக்கப்படுகின்றன.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

விழாக்களில் மகிழ்வது பொது மக்கள். சொந்த உணர்வில் திளைப்பது சாதாரண மனிதன். இறைவன் மீது எழும் உணர்வு,பக்தி. உணர்வு உயரும்பொழுது, ஞானத்தைப்போல் (intuition) சகஜ ஞானமாகிறது.

உணர்வு உயர்ந்து ஞானமாகிறது.


 


 


 


 


 



book | by Dr. Radut