Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV                                                                       

கர்மயோகி

791) அறியாமை அறிவைவிடப் பெரியது.

சிருஷ்டியில் அறிவு ஆரம்பம். பல கட்டங்களைத் தாண்டி வந்து அறியாமையில் சிருஷ்டி முடிகிறது. முடிவான படிப்பு பெரிய படிப்பு என்பதுபோல், முடிவான பொருள் பெரிய பொருள்.

****

792) காலத்தைக் கடந்த அனந்தன் கருதுவதை எல்லாம் காலம் - முடிவற்ற காலம் - சிருஷ்டிக்கிறது.

காலம் சிறியது, முடிவடையக் கூடியது. காலத்தைக் கடந்த நிலை பெரியது, முடிவில்லாதது. மரணம் காலத்திற்குரியது. அமரத்துவம் காலத்தைக் கடந்த நிலைக்குரியது. காலம் அமரத்துவத்தைத் தரமுடியாது. என்றாலும் மரணத்தின்மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பு ஏற்படுவதால் வாழ்வு முடிவற்றதாகிறது. முடிவுள்ள வாழ்வை முடிவற்றதாக காலம் மரணம், பிறப்பு மூலம் சாதிக்கிறது.

****

793) ஜடத்திலிருந்து ஜீவியம் எழுகிறது.

இவ்வுண்மையை வேதாந்தமும், விஞ்ஞானமும் ஏற்கிறது.

****

794) சத்தியம் அசத்தில் உள்ளது.

அசத் சத்திற்கு நேர் எதிரானது. சத் அசத்திலிருந்து உற்பத்தியாகிறது எனவும் உபநிஷதம் கூறுகிறது. பிரம்மத்தின் இரு பகுதிகள் சத், அசத் என்பது. அசத்தை சத்திற்கு எதிரானது எனக் கொள்கிறோம். பிரம்மத்திலிருந்து சத் வெளிவந்தபின் மீதி அசத் எனவும் கொள்ளலாம். இப்படிப் பார்த்தால் அசத் சத்தைவிடப் பெரியது எனக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

****

795) ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவின் பகுதி. அது பரமாத்மாவின் பகுதி.

பிரபஞ்சம் தன்னை நேரடியாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் ஏராளமான ஜீவாத்மாக்களை உற்பத்தி செய்ததால், இது அதன் பகுதி. அனைத்தும் பரமாத்மாவின் பகுதிகளேயாகும்.

****

796) சச்சிதானந்தத்தின் பிரகிருதி சத்திய ஜீவியம்.

ஒன்றிலிருந்து மற்றது வெளிப்பட்டால், வெளிப்படுவது அதன் பிரகிருதி.

****

797) பரம்பொருளும் சிருஷ்டியும் ஒன்றில் மற்றதாக உறைகின்றன.

****

798) ஜீவியம் வளர்வதானால் உள் மனத்திலேயே வளரவேண்டும்.

****

799) ஆத்மா, ஜடத்தை ஆட்சி செய்கிறது.

****

800) மேற்சொன்ன கண்ணோட்டத்தில் சொந்த வாழ்வைப் பரிசீலனை செய்தல் நன்று.

சொஸ்த லிகிதம்.

ஒரு பத்திரம் எழுதினால் நாம் அதில் கையெழுத்திடுகிறோம். அத்துடன் யார் எழுதினாரோ அவரும் கையெழுத்திட்டு தாம் எழுதியதை உறுதிப்படுத்துவார். ஒருவர் தம் பத்திரத்தைத் தாமே எழுதுவதை சொஸ்த லிகிதம் என்பார்கள். மேற்சொன்ன கண்ணோட்டத்தில் ஒருவர் தம் வாழ்வைப் பரிசீலனை செய்யவேண்டும்.


 

முற்றும்.

****


 

ஜீவிய மணி

மடையனும் மகானும் தேடாத மனிதத் திறமை.


 


 



book | by Dr. Radut