Skip to Content

08.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

 

அண்ணன் - பெற்றோர் விவரம் தெரிந்தவர்கள். அதிகம் படித்தவர்கள். அன்பர்கள். ஏற்கனவே இப்பாதையில் செல்பவர்கள். அவர்களே இச்சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லிப் பார்.

தம்பி - முதல் சட்டத்தில் தோல்வி. அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு. இரண்டாம் சட்டம் இவர்கள் பின்பற்றுவதாக இருக்கும். சௌகரியத்தைத் தேடாதே. இவர்கள் சௌகரியத்தைத் தேடுவதில்லை என்றாலும் அன்னை கூறுவது உடலை விழிப்புறச் செய்வதற்கல்லவா? உடல் விழிப்புறும் அளவு சௌகரியத்தைத் தேடாமலிருக்க முடியுமா?

அண்ணன் - கடைசி 4 சட்டங்களை (உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசு முன்னும், செயல்படு முன்னும் சமர்ப்பணம் செய்) இவர்கள் குழந்தை விஷயத்தில் பின்பற்றினால் இந்த முயற்சியை ஆரம்பிக்கலாம். அதற்கு நல்ல பலனிருக்கும். சௌகரியத்தைத் தேடாதே எனில் பொதுவாக அசௌகரியத்தைத் தேடு என நினைப்பார்கள். இங்கு விசேஷம் என்னவென்றால் உடலை அதன் பழக்கப்படி அனுமதிக்காதே. முக்கிய உதாரணத்தைச் சொல்கிறேன். தியானம் செய்ய பூஜை அறையில் தரையில் உட்கார்ந்தால் தியானம் வரும். 4 பேர் நாற்காலியில் உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டுமானால், “ஏன் பூஜை அறையில் தரையில் உட்காருவோமே” என்று நினைக்கிறோம்.

தம்பி - தரையில் உட்கார்ந்து தியானம் செய்வதுதான் தியானம்.

அண்ணன் - கவனிக்க வேண்டியது என்ன? இது ஒரு பழக்கம். நாம் பழக்கத்தைப் புனிதமாக்கிவிட்டோம். எனக்குப் பழக்கப்படிச் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்வதை நாம் தரையில் உட்கார்ந்தால் தியானம் வருகிறது என்கிறோம்.

தம்பி - சூட்சுமம் தான் முக்கியம். பழக்கத்தின் பேரால் நடக்காதே. வேலைக்குரியவற்றை ஏற்றுக்கொள் என்பதே கரு அல்லவா? இப்படிப் பார்த்தால் காபி சாப்பிடுவது பழக்கம், வேண்டியவரைப் பார்த்துச் சிரிப்பது பழக்கம், ஏன் தியானமே ஒரு பழக்கம் என்பதால் தான் அன்னைக்குத் தியானம் பிடிக்கவில்லை.

அண்ணன் - எந்தச் சட்டத்திலும் சட்டத்தைவிட அதனுள் கருவான நுணுக்கம், சூட்சுமத்தைத் தெரிந்து பின்பற்ற வேண்டும். பணம் வசூல் செய்யாமலிருப்பது அன்னை சட்டம். அதுவே நம் சுபாவத்திற்கு வசூல் பிடிக்கவில்லை என்றால், வசூல் செய்யாதது சுபாவத்தைப் பின்பற்றுவதாகும்.

தம்பி - அப்படிப்பட்டவர் வசூலுக்குப் போக வேண்டுமா?

அண்ணன் - அப்படியில்லை. நாம் எதைப் பின்பற்றுகிறோம்? சுபாவத்தைச் சௌகரியமாகப் பின்பற்றினால் அது தவறு.

தம்பி - அடுத்த சட்டம் அதைவிடக் கடினம். “பிடிக்கும் என்பதால் செய்வதைவிட, உனக்கு அமைந்த கடமைகளை விருப்பமாகச் செய்”. இதைப் பின்பற்ற நாம் தலைகீழாக மாறவேண்டும்.

அண்ணன் - நமக்குப் பிடித்த வேலைகள் சமயத்தில் அன்னைச் சட்டமாக இருக்கும். நாம் நமக்குப் பிடித்தது என்பதால் செய்துவிட்டு “Mother's Grace” அருள் என்போம்.

தம்பி - நாலு பேரோடு சுமுகமாகப் பழகுபவருக்கு ரிஸப்ஷன் வேலை கொடுத்தால் அருள் என்று சொல்கிறோம். அதையும், நமக்குப் பிடிக்கிறது என்று செய்வதைவிட இந்த வேலையில் அன்னையை வெளிப்படுத்த - சமர்ப்பணம் செய்ய - முயலவேண்டும். அடுத்த சட்டம் “பிறரைக் குறை கூறாதே”. இப்பெற்றோர்கள் ஏற்கனவே இப்படித்தானிருக்கிறார்கள். அடுத்தது “ஒவ்வொரு நிமிஷமும் முன்னேற முயலவேண்டும்” இதுவும் இவர்கள் பின்பற்றும் சட்டம்.

அண்ணன் - அது சரி. அதாவது இப்போதைக்குச் சரி. இந்தச் சட்டம் ஏன் ஏற்பட்டது? பழக்கம் ஏற்படக்கூடாது என்று இது கூறுகிறது. இவர்கள் பள்ளியில் உயர்ந்த முறையைப் பின்பற்றிப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது நாளாவட்டத்தில் பழக்கமாகும். அது கூடாது. பிறகு பார்க்கலாம். அடுத்த சட்டம் இவர்களுக்குத் தெரியாது. “புறநிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்”.

தம்பி - அதை ஏற்றுக் கொண்டால், நமக்குப் பயித்தியம் பிடித்துவிடும். இவர்கள் பள்ளியிலிருந்து 7,8 குழந்தைகளை எடுத்துக் கொண்டு போன பெற்றோர்கள், இவர்களைக் குறை கூறினர். நம் சட்டப்படி, நம் மீது பிறர் குறை கூறினால், நமக்குப் பிறர் மீது குறையிருக்கிறது எனப் பொருள் என எடுத்துக் கொள்ளவேண்டும். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இது பெரிய சட்டம்.

அண்ணன் - மற்ற 4 சட்டங்களும் சமர்ப்பணம். அதை மேற்கொண்டால் அது யோகம். முதலில் குழந்தையைச் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்தால் பெரும் பலன் தெரியும். பிறகு எல்லாவற்றையும் சரி செய்யலாம்.

தம்பி - T.V. வியாபாரி கடையை மூடவேண்டும் என்றாரே. அவர் பிழைத்துக் கொண்டார். அவர் இப்பொழுது அன்னையைக் கடைக்கு அனுப்புகிறார். வியாபாரம் 15% அதிகமாயிருக்கிறது என்றார்.

அண்ணன் - அவர் 15%க்குச் சந்தோஷப்படுகிறார். அதைக் காப்பாற்றுவது கடினம். அதைச் செய்துவிட்டு நம்மைக் கூப்பிட்டால் மீதி 85%ஐயும் அதிகப்படுத்திக் கொடுக்கலாம்.

தம்பி - இப்பெற்றோர் அன்னையை அனுப்புவதை ஏற்றுக் கொண்டால், என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - அது உயர்ந்த முறை. 15% இல்லை, 15 மடங்கு பலன் தரும் முறை. இப்பெற்றோர் மிகவும் உயர்ந்த பழக்கங்களுடையவர்கள். Typical Indians. நம் நாட்டுக் கலாச்சாரம் அறிந்தவர்கள். இவர்களுக்கு அன்னையை அனுப்பும் முறை ஏராளமாகப் பயன்படும். ஆனால் இவர்களுக்கு அன்னை என்றால் என்ன? She is a consciousness. அன்னை என்பது ஜீவியம் என்று புரிந்தால், அதை மனதால் ஏற்றுக்கொண்டால், இவர்கட்கு முறையே தேவையில்லை.

தம்பி - குழந்தை பிரபலம் அடைவது அப்புறமிருக்கட்டும். அற்புதமாகக் குழந்தை மாறிவிடும். அமைதியும், ஆனந்தமும் ஊற்றெழும் குழந்தையாகிவிடும். அன்னையை அதுபோல் ஏற்பார்களா? குழந்தை அன்னையை ஏற்குமா என்பதே முக்கியம். குழந்தைக்காக எதுவும் செய்யக்கூடிய பெற்றோர் என்பதால், அவர்கள் ஏற்கலாம்.

அண்ணன் - மனிதத் தன்மை அரிது. மனிதத் தன்மையைத் தெய்வத் தன்மையாக ஏற்கும் யோகம் இது. குழந்தை மேலுள்ள பாசம், அன்பாக மாறினால், அதனுள் எல்லாம் அடக்கம்.

தம்பி - அது ஏற்பட நம்முள் அன்பு (divine love) உற்பத்தியாக வேண்டுமே. அன்பு என்றால் நம் குழந்தைக்கு மட்டுமல்லவே, அனைவருக்குமாயிற்றே. அது ஏசு, புத்தர் நிலையாயிற்றே.

அண்ணன் - அன்னை நம்மையெல்லாம் கடவுளாகச் சொல்கிறார். அதனால் அதை நம்மிடம் எதிர்பார்க்கிறார். அன்பர்கள் குறைந்தபட்சம் அன்பு செலுத்த வேண்டும்.

தம்பி - கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பின்பற்ற வழியுண்டா?

அண்ணன் - அன்னையை consciousness ஜீவியம் என அறிந்து ஏற்றுக்கொண்டால், நெஞ்சில் உள்ள பாசம் அன்பாக மாறும்.

தொடரும்... 

****

Comments

08.பிரார்த்தனை பலிக்க

08.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் 1 - line 3, சொல்lப் பார். - சொல்லிப் பார்

தம்பி 1 - தேடாமருக்க - தேடாமலிருக்க

அண்ணன் 2 - line 7 - 4பேர் நாற்காலி யில் - 4 பேர் நாற்காலியில்

அண்ணன் 7 - line 5பிரதிபக்கும் - பிரதிபலிக்கும்

தம்பி 7 - line 2 - பள்ளியிலி ருந்து - பள்ளியிலிருந்து

தம்பி 12 - line 1 -     -கேட்பதற்கு -  - கேட்பதற்கு

 



book | by Dr. Radut