Skip to Content

06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்

"அன்பர் உரை"

சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்

(சென்னை மாம்பலம் தியான மையத்தில் 24.4.2002 அன்று திருமதி விஜயா நாராயணன் நிகழ்த்திய உரை)

  • குறைந்த முயற்சியில் அதிகப் பலன் தருவது சிறந்த முறை.
  • எதையும் செய்யாமல் எல்லாவற்றையும் பெறுவது சரணாகதி.
  • இது உண்மையானால், இதன் தத்துவம் என்ன? இங்கு வெளிப்படும் சக்தி எது?
  • எதுவுமேயில்லாமல் எல்லாமாக இருக்கும் பிரம்மதத்துவம் இது.
  • இதன் சக்தி சலனத்தின் சக்தி. அது முழுமையான சலனம்.
  • முழுச் சலனத்திற்கு முழு சக்தியுண்டு. நம் இலக்கை முழுமையாகப் பெறும் சக்தி அது.
  • முழுமையாகத் தன்னையழித்து, முழுமையாகக் குறிக்கோளை ஏற்பது அது.
  • குழந்தை தாயாரை நம்புவதும், நாம் சமூகத்தை ஏற்பதும் அது போன்றதே.
  • நாமுள்ள இடத்தில் நாம் பகுதியான முன்னேற்றம் பெறுகிறோம். சொந்த முயற்சிக்குப் பலன் பகுதி.
  • அடுத்த கட்டம் போக முயல்பவர் சொந்த முயற்சியால் போக முடியாது. அடுத்த கட்டம் உதவாமல் அதைச் சாதிக்க முடியாது.
  • முடிவான கட்டத்தையடைய நம் முயற்சியில் நம்பிக்கையைக் குறைத்து அக்கட்டத்தின் உதவியைப் பெறுதல் அவசியம்.
  • அதுபோல் மனிதன் எல்லாக் கட்டங்களையும் கடந்து செல்லலாம். சத் புருஷனையும் அதுபோல் கடக்கலாம். இதைச் சாதிக்க தன் முயற்சியில் நம்பிக்கையை முழுவதும் இழந்து, மேல்நிலை தடையின்றி நம்மில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
  • யோகம் அதைச் சரணாகதி என்று கூறும். முழுப்பலனுக்கு முழுச்சரணாகதி தேவை.
  • பிரம்மத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பதே தத்துவம். எதுவுமேயில்லாதவன் எல்லாமாக மாறுவது பலன்.
  • புதியதைக் கற்க முனையவேண்டும். முழுவதும் கற்றுக் கொண்டால் அது தானே செயல்படும். இது ஆழ்மனச் செயல்.
  • மனம் திறமையால் நிறைந்த நேரம் ஆழ்மனம் செயல்படும். இது சரணாகதி போன்றது. மனம் ஆழ்மனத்திற்கு தன்னையறியாமல் செய்யும் சரணாகதியிது.
  • நாம் வளர்ந்து சமூகத்தை ஏற்கும்பொழுது முயன்று அத்துடன் சேருகிறோம். நாளானால் சமூகத்துடன் இசைவாக இணைகிறோம். இதுவும் மனிதன் சமூகத்திற்குச் சரணடைவதாகும்.
  • சமூகம் நம் தலைவன். நாளடைவில் நாம் கற்றதை (automatic) இயல்பாக்குவது சமூகத்தின் ஆழ்ந்த உணர்ச்சி. அதேபோல் பரமாத்மா இடைவிடாது நமக்குத் தெய்வீக வாழ்வை சூசகமாக அறிவிக்கிறார். ஆன்ம விழிப்புள்ளவன் தன்னையறியாமல் சூசகமாக அறிவதற்குப் பதிலாக, பரமாத்மா கூறுவதைத் தெளிவாக முழுமையாக அறிய முயல்கிறான். இதுவும் மெதுவாக நடப்பது. இதற்குப் பதிலாக பரமாத்மாவே நம் வாழ்வை ஏற்று இயல்பாக நடத்தும்படி நாம் சரணாகதியை மேற்கொள்ள வேண்டும்.
  • முனைந்து கற்பது காலத்திற்குரியது. சரணாகதி அதைத் துரிதப்படுத்தும், நாம் எந்த அளவு பரமனை அறிகிறோமோ, அந்த அளவு வேகம் அதிகமாகும். இது காலத்தைக் கடக்கும். சரணாகதி பூரணமடைய நாம் அடுத்த மூன்றாம் கட்டத்தை அடைய வேண்டும். அங்கு காரியம் க்ஷணத்தில் முடியும்.
  • சரணாகதியை யோகத் தத்துவப்படி அறிய வேண்டும். எல்லா யோகத் தத்துவப்படியும் அறிதல் சிறப்பு. அவை,

- முரண்பாடு உடன்பாடு.

- ஜடமும், ஆன்மாவும் ஒன்றே.

- சத்தும், அசத்தும் சேர்ந்தது பிரம்மம்.

- பாதாளமும், பரமனும் பாமரனில் இணையும்.

- பிரபஞ்சமும், பிரம்மமும், மனிதனில் சேர்கின்றன.

- கண்டமான அகந்தை அகண்டத்தால் கிரகிக்கப்படுகிறது.

- அறிவு உணர்விலிருந்து விலகி ஞானமாகிறது.

- ஹிருதயச் சமுத்திரம் நம் வாழ்வை ஏற்கிறது.

- பிரகிருதி புருஷனின் சக்தி.

- ஆனந்தம் பொருள்களில் வெளிப்பட்டுப் பேரானந்தமாகிறது.

- உலகை உற்பத்தி செய்த மாயை தன்னை மறந்த ஆண்டவனுக்கு நினைவுபடுத்தி, அவன் தேடிய ஆனந்தம் தருகிறது.

- மனம் உடலுடன் கலந்ததிலிருந்து விழித்து, வாழ்விலிருந்து விடுபட்டு, தன்னிலிருந்தும் விடுபட்டு சத்திய ஜீவியத்தைக் காண்கிறது.

- அகந்தை கரைந்து சைத்தியப் புருஷனாகி, பிரபஞ்சம் முழுவதும் பரவி மீண்டும் சக்தியும் ஜீவியமும் சேர்கின்றன.

- ஜடம் சத்தின் ஆனந்தமான சச்சிதானந்தம்.

- ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து பிரம்மமாகின்றன.

- எழுவகை அஞ்ஞானம் கரைகின்றன.

- மேல்மனம் உள்மனம்வழி அடிமனத்தையடைகிறது.

- இலட்சியம் எல்லா நிலைகளையும் கடந்து இருப்பதில் முடிகிறது.

- மூன்று திருவுருமாற்றங்கள்.

- புறம் அகமாகிறது.

- திருவுருமாற்றம் உலகை பூலோகச் சுவர்க்கமாக்குகிறது.

- பிரம்மத்திற்கு அஞ்ஞானம் சலிப்பு தருகிறது.

  • இத்தனை முறைகளையும் ஒரே முறையில் காண்பது அம்முறையை முழுமையாக்கும். எந்த முறையிலும் சில தத்துவங்களே வெளிப்படும். எல்லாத் தத்துவங்களும் எல்லா முறைகளிலும் வெளிப்படாது. சரணாகதியினுள் எல்லாத் தத்துவங்களும், எல்லா முறைகளும் உள்ளன. சரணாகதிக்கு மட்டுமே இந்தத் தகுதியுண்டு. எனவே அது முறை மட்டுமன்று, மூலமுமாகும்.
  • சரணாகதி வாழ்வில் எங்கும் காணப்படுகிறது. ஆனால் எங்கும் முழுமையாக இல்லை.

- உடல் நம் வேலையை எடுத்து இயல்பாகச் செய்வது சரணாகதியாகும்.

- சமூகமே தன்னையறியாதது. மனிதன் சமூகத்திற்குள் அவனையறியாமல் கிரகிக்கப்படுகிறான். இதுவும் சரணாகதியே.

- இவற்றை ஆயிரமாயிரம் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

- பரமாத்மாவின் அந்தரங்க அழைப்பு இதைச் சேர்ந்ததே.

- பிரம்மம் வாழ்வில் தன்னையிழந்து, தேடிக் கண்டுபிடித்து ஆனந்தம் பெற முயல்வதற்கு மனிதன் இறைவனுக்கு விரும்பிச் சரணடைவது உதவும்.

சரணாகதியின் பல்வேறு நிலைகள் :

  • மனத்தில் எண்ணமாகவும், உயிரில் உணர்வாகவும், உடலில் உடலுணர்வாகவும் மனிதனிருக்கிறான்.
  • சரணாகதி பூர்த்தியாக மனம், உயிர், உடல் சரணடைய வேண்டும். ஆத்மாவும் சரணடைய வேண்டும்.
  • நம் கரணங்கள் சரணடையுமுன்னே, அவற்றின் செயல்கள் சரணடைய வேண்டும்.
  • அச்செயல்கள் அக்கரணங்களிலும், அவற்றின் சூட்சுமப் பகுதிகளிலும் உள்ளன.
  • எண்ணம் மனத்தின் செயல். சூட்சும மனத்தில் எண்ணம் impulse உந்துதலாகவுள்ளது.
  • அதேபோல் உயிரும், உடலும் செயல்படுகின்றன.
  • மனத்தின் எண்ணம், உயிரில் வேகமாகவும், உடலில் அசைவாகவும் எழும்.
  • சூட்சும உடல், சூட்சும உயிர், சூட்சும மனத்தில் எண்ணம் முன் கூட்டி எழும். எழுபவை உந்துதல்களாகும்.
  • எண்ணம் உலகத்திற்குரியது. வெளியிலிருந்து நம்முள் நுழைகின்றன.
  • பிரபஞ்சத்திலும் மனம் உண்டு. எண்ணம் அங்கெழுந்து மனத்தையடைகிறது.
  • மனத்திலுள்ளவை அனைத்தும் ஜீவனுக்குரியவை. ஜீவனின் 8 பகுதிகளும் - 4 கரணங்களும், அவற்றின் சூட்சுமப் பகுதிகளும் - பிரபஞ்சத்திலும் உண்டு. மனித நிலைக்கேற்ப அவை பிரபஞ்சத்தினின்று அவனை வந்தடைகின்றன. சமூகச் செய்திகள் நம் வீட்டிற்கு வருவது போன்ற செயல் அது.
  • உள்ளும் புறமும் நாம் பிரபஞ்சத்தை ஏற்குமிடத்தில் சரணாகதியை ஆரம்பிக்க வேண்டும். உள்ளுணர்வின் உந்துதல்கள், பிரபஞ்சத்தின் உந்துதல்கள் சந்திக்குமிடத்தில் அகமும், புறமும் ஒன்றாகும். அவை எல்லாச் சூட்சும லோகங்களிலும் பூர்த்தியாகி உந்துதல் எழாவிட்டால், மேல் மனத்திற்கு வாராவிட்டால் சரணாகதி பூர்த்தியாகும்.
  • இன்றுள்ள இடத்திலிருந்து இலட்சியத்தையடையும்வரை யாத்திரை மனித முயற்சி. அது மனிதத் திறமையின் முயற்சி. முயற்சியும், திறமையும் சரணாகதியால் அன்னையை அடைவது அருள், பேரருளாவதாகும்.

சரணாகதியின் சாதனை :

  • நாம் தேடாததைச் சாதிப்பதில்லை. நாம் அறியாததையும் அடைவதில்லை.
  • தெரிவது சாதனைக்கு உதவாது, தடையாகும். தேடுவது எதிர்ப்பாகும்.
  • சாதனைக்குத் தெரிவதும், தேடுவதும் அவசியம். அவை இரண்டும் தடை.
  • சாதனை என்பது தீவிரமான தெளிவான ஆர்வம். ஆனால் அது பற்றற்றதாகும்.
  • நாம் நாடுவதை நமக்கு உற்பத்தி செய்துவிட்டு பிரம்மம் அகலும். தான் குறையாமல் நமக்குத் தேவையான அனைத்தும் தருவது பிரம்மத்தின் தன்மை.
  • பிரம்மம் செய்வதைச் சரணாகதி செய்யும். அதனால்தான் பலன் அதிகம். பற்றற்று தீவிரமாக நாடுவது சரணாகதியின் நிபந்தனை.
  • மனத்தின் எண்ணத்திலாரம்பித்து 6 கட்டங்கள் தாண்டி உடலின் சூட்சும உந்துதல்வரை சரணாகதிக்குரிய சட்டம் இதுவே.
  • எண்ணம் முதல் (gross thought) உடலின் சூட்சும உந்துதல்வரை (subtle physical impulse) இந்த அளவுகோல் விரிந்து செயல்படும். இங்கெல்லாம் செயல்படுபவர்க்கு இதன் விபரம் தெளிவாகத் தெரியும்.
  • எதைச் சாதிக்க வேண்டுமோ அந்த எண்ணத்தைச் சமர்ப்பணம் செய். சமர்ப்பணம் உயர்ந்தால் சாதனை உயரும்.
  • அடுத்த அடுத்த கட்டங்கட்குப் போகலாம். சாதனையும் உடன் வரும். முடிவான நிலையில் மனத்தின் உந்துதல் மனத்தில் எழும்பொழுது அது காத தூரத்திலிருப்பது தெரியும். அது மனத்துள் நுழையும் முன் அதைத் தடுக்க வேண்டி சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • அலைகடல் போன்று அமைதி உள்ளே நுழையும். அது உள்ளிருந்தும் எழவல்லது. அதன்பின் சமர்ப்பணமில்லை. சாதிக்க வேண்டியது சாதனையைப் பற்றிச் செய்தி வருமுன் முடிந்துவிடும்.
  • சமர்ப்பணம், சரணாகதி பலிக்காதவருக்கு முயற்சி மலை ஏறுவதுபோல்.
  • முதல் தடையைக் கடந்தவருக்குச் சமர்ப்பணம், சரணாகதி தரும் வாய்ப்புகள் அனந்தம். இவை பெருஞ் சாதனைகள் ஆனாலும், முடிவான யோகமன்று.
  • தான் விரும்புவதை நாம் அறிவோம். பிறரைத் திருப்திப்படுத்த விரும்பலாம். நல்ல நேரம் மனம் தானே மலரும். எதுவானாலும், இவை சுபாவத்தின் ஒரு வெளிப்பாடு. அதைச் சமர்ப்பணம் செய்தால் ஒருவருக்கு அதைவிட உயர்ந்தது இல்லை.
  • இது பலிப்பது திருவுருமாற்றம்.
  • சுபாவத்தில் பலிப்பது அபிப்பிராயம், முடிவு ஆகியவற்றிற்கும் பலிக்கும்.
  • வசதியான வாழ்விற்கும், யோகச் சித்திக்கும் இடையில், மனம் நிறைந்த வளமான வாழ்வுண்டு. இது அர்த்த புஷ்டியானது, பெரியது. நான் கூறுபவை இவ்வாழ்வுக்குரியவை.
  • சரணாகதி, சமர்ப்பணம் பத்தவர்கள் உயர்ந்த மனவளத்தை நாடினால் என் கருத்துகள் பயன்படும்.
  • சந்தோஷம், சமர்ப்பணமானால் பெரியவை நடக்கும். அந்த சந்தோஷம் நாம் பெறும் சுறுசுறுப்பல்ல. பேரானந்தப் பெரு வெள்ளத்தின் ஆரம்பமான ஆன்மீக ஆனந்தமாகும் (felicity).
  • அடுத்த தாழ்ந்த கட்டத்தில் கவலை சமர்ப்பணமானால் குதூகலமாகும்.
  • சிறிதளவு இதேபோல் வலி ஆனந்தமாகும்.
  • சமர்ப்பணம் கனவிலும் பலித்து அதன் போக்கை மாற்றும்.
  • கதையின் போக்கும் அன்பர் சமர்ப்பணத்திற்கு இசைவது அனுபவம்.
  • சூட்சும லோகத்தில் காலத்தின் கதி பகுத்தறிவை ஏமாற்றும்.

குறைகளைச் சமர்ப்பணம் செய்வது :

  • குறை என்பது குணக்குறை. சுலபமாக அழியக்கூடியதில்லை. நிரந்தரமாக நீங்குவது எளிதன்று.
  • சமர்ப்பணம் பலிப்பவருக்கு, இதுவும் பலிக்கும்.
  • குறைகளின் பெயர் நீண்ட பட்டியல். பெருமை, அவசரம், பயம், பேராசை, குறுக்கே பேசுவதென ஆயிரம் உண்டு.
  • பெருமை, வீண் பெருமையைக் கருதுவோம். வீண்பெருமை தம் குறை என அறிந்து, சமர்ப்பணத்தால் அதை விலக்க ஒருவர் முயன்றால், கீழ்கண்டவை அவர் முன் படிப்படியாகத் தோன்றும்.

- விரும்பி முயலும் சொந்த எண்ணம்.

- நம்மை அறியாமல் பெருமையை நம்முள் நாடுபவை   நம்மை மீறி எழுவது.

- நாம் சும்மாயிருக்கும்பொழுது, பிறர் சொல்வதால் நாம் பழையபடி நடப்பது.

- எண்ணத்தின்பின் உணர்ச்சி உந்துவது.

- அதேபோல் உணர்ச்சியின் அடியில் உடல் தானே இயங்குவது.

- எண்ணமும், உணர்வும், உடலசைவுகளும் அடங்கியபின் சூட்சும மனத்தில் எண்ணம் உந்தும்.

- அதேபோல் உணர்விலும், உடலும் சூட்சுமத்தில் உந்துதல்கள் எழுவது.

  • நம்முள் இத்தனைக் கட்டங்களில் எழுவனவற்றைக் காண்பது முதலில் அவசியம்.
  • சமர்ப்பணத்தால் ஒவ்வொன்றாகக் களைவது அடுத்தது.
  • சிரமப்பட்டு அகத்தால் வென்றதை, அர்த்தமற்ற புறச்செயல் அழிப்பது மனித சுபாவம்.
  • இது நம் பங்கு. இதை நாமே செய்யவேண்டும். அன்னையிடம் இதையும் விட்டுவிட்டேன் என்று பேசக்கூடாது.
  • கடைசிக் கட்டம்வரை வெற்றிகரமாக வந்த ஒருவர் கடைசிக்கட்ட உந்துதலைக் காண்பார் - it is the subtle physical impulse.
  • இதுபோல் மனத்துள் தொலைதூரத்திலுள்ள உந்துதலைப் பொருட்படுத்தாததே வழக்கம். இந்த லேசான உந்துதலுக்கு முதற்கட்ட எண்ணத்தின் வலுவுண்டு.
  • இந்தக் கட்டத்திற்கு வந்தவர்க்கு இது தெரியும். அவரால் அதை மறுக்க முடியும். அடுத்த கட்டத்தில் சமர்ப்பணமும் செய்ய முடியும்.
  • அதைச் சமர்ப்பணம் செய்தால் அதுவே பெருமையின் முடிவு.தொலை தூரத்திலுள்ளவர்க்கு ஆள்மூலம் செய்தி அனுப்புவதை மாற்றி போனில் பேசுவது இந்தச் சமர்ப்பணம்.

சமர்ப்பணத்திற்குத் தேவையான தியானம் :

  • ஸ்ரீ அரவிந்தர் அதை all inclusive concentration ஜீவ நிஷ்டை என்கிறார்.
  • அதன் மையங்கள் இரண்டு. 1) தலைக்குமேல் 2) நெஞ்சுக்குப் பின்னால்.
  • நம் நிஷ்டைக்கு மனம், நெஞ்சு, மூலாதாரம் மையங்கள்.
  • ஒரு கரணத்தில் உள்ள நிஷ்டையிது.
  • இம்மூன்று கரணங்களிலும் நிஷ்டை எழுந்தால் மையம் நகர்ந்து நெஞ்சுக்குப் பின்னால் போகும்.
  • அதுவே ஸ்ரீ அரவிந்தருடைய இரகஸ்யம். அதை வெளிப்படையாக்கினார்.
  • இந்த முறையை ஏராளமான சிறுபகுதிகளாகப் பிரித்து முன்பக்கங்களில் எழுதி முடியாத காரியத்தை முடிக்க முயன்றேன்.
  • நெஞ்சுக்குப் பின்னால் நிஷ்டை என்பது ஆண்டவனை உணர்வால் ஏற்பதாகும். தலைக்கு மேல் தெரிவது ஆன்மீகம் அறிவதாகும்.
  • The Life Divine புரிவது அந்த அறிவு, அது மனம் விரிவடைவதாகும். தலையே பெரியதாவதுபோல் தெரியும்.
  • அன்னை முன் நிற்பதும், சமாதி தரிசனம் செய்வதும் நெஞ்சை அதுபோல் நிரப்பும். உயர்ந்த உணர்வெழுந்து உணர்வு செறிந்து பூரிக்கும்.
  • க்ஷணமானாலும், இந்த அனுபவம் ரிஷிகள் அறியாதது.
  • நந்தா இருமுறை 15 நாள் பிரதமரானார். 1½ வருஷம் வாடகை தரவில்லை என அவரை வீட்டைவிட்டுக் காலி செய்தனர். பிரதமராக உயர்வதும் வாடகை தாராது.
  • சாதனைக்கு முயற்சி தேவை. முயற்சி சாதனைக்குத் தடை என்பது முரணானது.
  • உடலாலானவன் உழைக்கிறான். உணர்வாலானவன், உற்சாகமாக உழைக்கிறான், அறிவாளி அறிவால் உழைக்கிறான். இது தவிர்க்க முடியாதது. அவசியம்.
  • முயற்சி அவசியம் என்பதும், முயற்சியை முழுவதும் செலவிட வேண்டும் என்பதும் அவசியம்.
  • திறமைசாலி சுறுசுறுப்பானால் அவன் சாதனை பலிக்கும். முயற்சியும், திறமையில்லாதவனுக்கில்லாத வாய்ப்பு இவனுக்குண்டு. அவனுக்குச் சரணாகதியுண்டு.
  • திறமையையும் சுறுசுறுப்பையும் சரணம் செய்தால் பலன் முன்னதாக வரும்.
  • வேலையின் பலனைச் சரணம் செய்யலாம். வேலையைச் சரண் செய்யலாம். திறமையைச் சரண் செய்யலாம். நோக்கத்தைச் சரண் செய்யலாம். அதேபோல் வேலையின் ஜீவியத்தைச் சரண் செய்யலாம். ஜீவன் அடுத்தது.
  • வேலையின் பலனை, வேலையிலிருந்து பிரிக்கத் தெரிய வேண்டும். அதேபோல் திறமையை வேலையிலிருந்து பிரிக்க முடிய வேண்டும். தொடர்ந்தால் வேலையின் ஜீவியத்தையும், ஜீவனையும் பிரித்துச் சரண் செய்ய முடியும்.
  • இதைச் செய்ய முடியுமானால் வேலை, உரிய நேரத்திற்குக் காத்திராமல், உடனே முடியும்.
  • ஒருவருக்கு 10 கட்ட உயர்வு காத்திருக்கும். ஒரு கட்டம் சமர்ப்பணத்தால் உடனே முடிந்தால் 30 ஆண்டில் முடிய வேண்டிய 10 கட்டங்களும் அதேபோல் முடிக்கலாம்.
  • 30,000 ஆண்டில் பிறக்க இருக்கும் சத்திய ஜீவன் 30 ஆண்டில் பிறப்பான் என பகவான் கூறுவது இம்முறை. ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தம் ஆகியவற்றை நாம் சரண் செய்யவேண்டும் என்கிறார்.
  • சரணாகதிக்கு இத்திறன் எப்படி வருகிறது? இதன் தத்துவம் என்ன?
  • ஜடத்திலிருந்து பிரம்மத்திற்குப் போகும்பொழுது ஒவ்வொரு குணமாக விலகி ரூபம், சக்தி, அறிவு, ஞானம் - முடிவில் பிரம்மம் எந்தக் குணமுமில்லாதது என்று அறிகிறோம்.
  • சரணாகதி ஒவ்வொரு திறமையாக விட்டுவிடுகிறது - வேலையின் பலன், வேலை, திறமை, நோக்கம், ஜீவியம் - முடிவில் பிரம்மம்போல் எதுவுமில்லாமலிருக்கிறது. சரணாகதி பிரம்மத்தைப் பின்பற்றுகிறது.
  • சரணாகதி என்ற முறையின் தத்துவம், பிரம்மத்தின் தத்துவம்.
  • சரணாகதியில் சமர்ப்பணம் முடிகிறது.
  • ண்ணத்திலாரம்பித்த சரணாகதி, உணர்ச்சியைக் கடந்து, உடல் உணர்வுக்குப் போய், சூட்சும உலகில் மீண்டும் எண்ணம், உணர்வு, உடலுணர்வைச் சரணம் செய்யும் பொழுது பூர்த்தியாகிறது.
  • எந்த விஷயத்திலாவது சரணாகதி இதுபோல் பூர்த்தியானால், அவருக்கு அடுத்தடுத்த கட்டங்களுண்டு

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

"நல்லாயிருக்கு'' என மனிதன் சொல்லும்பொழுது, அவன் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுகிறது எனப் பொருள். அதை அழிக்க அவன் வெட்கப்படுகிறான்.

உள்ளத்தைத் தொடுவது உயிருக்கு உயிரானது.

**** 

Comments

06.சரணாகதி என்ற முறையின்

06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்(Contd.)

Under the sub-heading - சமர்ப்பணத்திற்குத் தேவையான தியானம் :

Bullet Point No.18 - line 1, - வேலையிலி ருந்து - வேலையிலிருந்து

               do.             do. 2, - வேலையிலி ருந்து - வேலையிலிருந்து  

             do.   24 - line 2 - எதுவுமில்லாமலி ருக்கிறது.- 

                                      எதுவுமில்லாமலிருக்கிறது.               

                 do.    24 - line no.3 - after சரணாகதி -  

                                       பிரம்மத்தைப் பின்பற்றுகிறது. - to be joined.

                  do.    27 -  line 2, - after சரணம் செய்யும் -

                                      பொழுது பூர்த்தியாகிறது. - to be joined.

 

06.சரணாகதி என்ற முறையின்

06.சரணாகதி என்ற முறையின் தத்துவமும், நடைமுறையும்

Under the Bullet Point No. 20 -

7th point - அறிவு உணர்விலி ருந்து - அறிவு உணர்விலிருந்து  

12th point - கலந்ததிருந்து விழித்து, வாழ்விலி ருந்து -

                   கலந்ததிலிருந்து விழித்து, வாழ்விலிருந்து

22nd do.   - சலி ப்பு - சலிப்பு

Under the heading - சரணாகதியின் பல்வேறு நிலைகள் :

point no.9 - வெளியிலி ருந்து - வெளியிலிருந்து

Under the heading - சரணாகதியின் சாதனை :

Point no.8 - உடலி ன் - உடலின்

Point no.10 - line no.3 - தூரத்திலி ருப்பது - தூரத்திலிருப்பது 

Point no.12 -பலி க்காதவருக்கு - பலிக்காதவருக்கு  

do.    do. 14 - After line no.3 - extra space.

do.    do. 24 - குறைகளைச் சமர்ப்பணம் செய்வது : - to be separated

                       as a sub-heading.

Under the sub-heading  குறைகளைச் சமர்ப்பணம் செய்வது -

Bullet Point No.5 - முதலி ல் - முதலில்

Under the Bullet Point No. 13 - சமர்ப்பணத்திற்குத் தேவையான    தியானம் : - to be separated as a sub-heading.

Under the sub-heading - சமர்ப்பணத்திற்குத் தேவையான    தியானம் :

Bullet Point No.1 - concentrationஜீவ - concentration ஜீவ

     do.            12 - 1½வருஷம் - 1½ வருஷம்

     do.            16 -  பலி க்கும் - பலிக்கும்

     do.             16 - line no.3 - after சரணாகதியுண்டு, திறமையையும் etc.etc. to be joined.

 

 



book | by Dr. Radut