Skip to Content

05.சாவித்ரி

"சாவித்ரி"

P.33 The weeping of Love, the quarrel of the Gods

அன்பின் அழுகுரல், தெய்வங்கள் போடும் சண்டை

நட்சத்திரங்களை சிருஷ்டிக்கும் சக்தி ஒரு மணி நெல் உற்பத்தி செய்யத் தேவைப்படுகிறது. நமக்கு நெல் மணி உணவின் ஒரு சிறுபகுதி. இறைவனுக்கு அது ஒரு லோகம். லோகங்களை ரூபமாக சிருஷ்டிக்கும் இறைவன் சக்தியால் படைக்கிறான். ஞானம் ஞானமாக இருந்தால் லீலையில்லை. ஞானம், அஞ்ஞானமானால் கண்மூடி விளையாடமுடியும். மூடிய கண் திறப்பது ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளிவருவது. நாம் சண்டையாகக் காண்பதும், அழுகுரலாகக் கேட்பதும் இறைவன் ஆனந்தமாக அனுபவிக்கும் லீலா வினோதங்கள்.
. உலகம் வாயடைத்து, நிதானம் மறைகிறது.

. பரமாத்மா சாந்தியில் மூழ்கிய லோகம்.

. சூன்யத்தில் வானம் வளைந்து விலகுகிறது.

. எல்லையற்ற அனந்தம் மனத்திரை முன் மறையவில்லை.

. எண்ணத்தின் ஜோதியைக் கடந்த ஆன்மா.

. பதைக்கும் உள்ளத்தைத் தீண்டும் பரமனின் ஞானம்.

. சிந்தனை பரந்து செயலிழந்தது.

. எண்ணம் குரலிழந்து மடிந்தது.

. புதியதை ஜொலிக்கச் செய்யும் புதுமை.

. பிரம்மத்தின் அலை கடந்த தருணம்.

. பெருமுயற்சியின் சிறுபலன்.

. பெரும் பிரபஞ்சம் சிறு செயலாகும்.

. அறிய முடியாத அனந்தனின் அம்சம் பிரபஞ்சத்தையே மாற்றும்.

. நேரம் இறைவனின் எழுத்தில் கீரல்களாகும்.

. கருத்தைக் கடந்த காலம் கணத்துள் புதையும்.

. சென்றதையும், வருவதையும், உள்ளத்தில் உட்கொண்டது.

. சென்ற யுகத்தின் கதையை இன்று நடிப்பவர்.

. விண்டுரைக்க முடியாத விண்ணவரின் நேரத்துள் உறையும் அமைதி.

. அவசரத்தின் அலங்கோலம்.

. அலையென அலையும் மனத்தின் அலைகள்.

. அழியும் குமிழியில் அகப்படாதவன்.

. ஆத்மா பெற்ற அரசனின் விடுதலை.

. சுயம்பிரகாசமான சத்தியத்தின் உருவம்.

. நெடுநாளைய இன்பத்தை நெரிக்கும் நெருடல்.

. புண்ணியத்திற்குத் தோல்வி தரும் தலைவிதி.

. உடலின் காம இச்சை அனலாய் எரியும் வேதனை.

. இயற்கையின் பசிக்கு இரையான வருத்தம்.

. மண்ணிலிருந்து எழுந்த மனித உருவம்.

. சகதியில் உற்பத்தியான சகல சக்திகள்.

. காமவெறியின் கடும் வேதனை.

. காலத்தின் பிரவாகம் கக்கும் கர்மம்.

****

 



book | by Dr. Radut