Skip to Content

11.ஆஸ்துமா

ஆஸ்துமா

       ஆஸ்துமாவுள்ளவர்க்கு எந்த வாசனையும் மூச்சுத் திணறும். சமையல் அறை தாளிப்பு, தட்டு நிறைய புஷ்பம், சிறுவர் போட்டுள்ள சென்ட், மகரந்த வாசனை போன்ற எதுவும் ஒத்து வாராது. சாம்பிராணி போடுமிடங்களுக்கு அவர்கள் பல மணி வரை வர முடியாது.

        அப்படிப்பட்ட பெண் மையத்திற்குச் சேவைக்கு வந்தார். மையத்தில் அடிக்கடி சாம்பிராணி போடுவது அவருக்குச் சரி வாராது. அந்த நேரம் வெளியில் போய்விடுவார் அல்லது ஒர் அறையில் போய்க் கதவைச் சாத்திக் கொள்வார்.

- அன்னையிடம் வந்தபின் ஓரளவு ஆஸ்துமா குணமாவதுண்டு. அத்துடன் நின்றுவிடும்.

- இப்பெண் அன்னை மூலம் தன் ஆஸ்துமா முழுவதையும் குணப்படுத்த முடியுமா எனக் கருதி, பிரார்த்தனையுடன், தான் விடும் மூச்சே அன்னை ஒளியாக இருக்கும்படி நினைத்துக்கொண்டார்.

- நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது, இப்பொழுது சாம்பிராணி பாதிப்பதில்லை.

       எந்தச் சாம்பிராணி அருகே வராமல் விரட்டியதோ, அதே சாம்பிராணியை மையத்தில் போடும் சேவையை அப்பெண்மணி இப்பொழுது செய்கிறார்.

****



book | by Dr. Radut