Skip to Content

10.துணிக்கடை

துணிக்கடை

      அன்பர் தங்கை திருமணத்திற்காகச் சென்னை வந்து ஜவுளி வாங்கினார். தங்க மாளிகையில் நகை வாங்கிவிட்டு அருகிலுள்ள ரெடிமேட் கடையில் சில ரகங்களைப் பார்த்துவிட்டு வாங்காமல் வேறொரு கடையில் வேண்டியதை வாங்கினார்கள். பணம் கொடுக்கப் போனபொழுது பர்ஸ் காணோம் எனத் தெரிந்தது. அக்கடை வாசலில் அமர்ந்து அன்பர் அழுதுவிட்டார்.

       கணவனும், மனைவியும் அன்னையை நம்பும் அன்பர்கள். தம் தகப்பனார் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் சுமார் 25,000/- இருக்கும். மன வேதனையுடன் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். கடைக்காரரிடம் தங்கள் சொந்தக்காரர் வீட்டிற்குப் போய் பணம் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு நங்கநல்லூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.

       இரவு முழுவதும் மனம் பர்ஸ் மேலேயே இருந்தது. கிளம்பியதிலிருந்து பர்ஸ் எடுத்ததெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் அன்பர். ரெடிமேட் கடைக்கு மனம் வந்ததும் ஏதோ மனதில் தட்டுப்பட்டதுபோல வந்தது. போன் செய்து பார்க்கலாம் என போன் செய்தார்.

       அந்தக் கடையில் இரு சிப்பந்திகள் அன்னை அன்பர்கள்.

      அவர்கள் கடையில் ஒரு பர்ஸ் இருக்கிறது. நேரில் வாருங்கள் என்று கூறினார்கள். கடைக்குப் போனபொழுது சிப்பந்தி, "நீங்கள் ரெடிமேட் பார்க்கும்பொழுது பர்ஸை துணிக்கு அடியில் வைத்துவிட்டுப் போய்விட்டீர்கள். இரவு கடை மூடும்பொழுது துணிகளை அடுக்கினோம், அப்பொழுதுதான் கண்டுபிடித்தோம். பர்ஸைப் பிரித்தால் அன்னை பகவான் படம் கண்ணில் பட்டது. பர்ஸை பத்திரப்படுத்தி விட்டேன்''. பணம் அப்படியேயிருந்தது.

****

 



book | by Dr. Radut