Skip to Content

09.வாழ்வில் சிருஷ்டியின் இரகஸ்யம்

 

       எந்த மனிதனும் அடுத்தவரை ஓரளவு நம்பி வாழ்கிறான். அந்த நம்பிக்கை அடிப்படையானது. அது குடும்பம், நட்பை நம்புவதாகும். தூரப் போனால் ஊர், சட்டத்தை நம்புவதாகும். நெருங்கி வந்தால், பெற்றோர், கணவன், மனைவி, மக்களை நம்பும் நம்பிக்கையாகும். எவர் வாழ்விலும் இந்த நம்பிக்கைகளில் உண்மையில்லை என்ற நேரம் எழுவதுண்டு. நம்பிக்கை போனபின் மனிதன் அழிவான். பிள்ளைகளை நம்பிய தாயார் நம்ப முடியாது என்று கண்ட நேரம் மகனுடைய அலட்சியத்திற்கும், மருமகளுடைய கொடுமைக்கும் ஆளாவாள். அந்த நேரம் உன்னை நம்பி நானில்லை. என்னால் முடியும், என்னாலும் வாழ முடியும் என்ற பக்திபூர்வமான நம்பிக்கை அல்லது தன்னம்பிக்கை எழுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் அழிக்கப்படுவதில்லை. கொடுமைக்கு ஆளாவது இல்லை. உள்ளிருந்து தெம்பு எழும். நிலைமை மாறும். அவர்கள் எண்ணம் நிறைவேறும். அவர்களை அசைக்க முடியாது. அது நம்பிக்கை. தன்னம்பிக்கையாகவோ, தெய்வ நம்பிக்கையாகவோ இருக்கும். அது அன்னை மீதுள்ள நம்பிக்கையானால் அதற்கு அழிவில்லை. தோல்வியில்லை. அப்படி உள்ளே எழுவது உள்ளுறை தெய்வம். அதைத் தொடர்ந்தால் ஜீவாத்மா, பரமாத்மா, That, சைத்திய புருஷனைக் காணும் பாதை அது.

       • ஊரும், உலகமும், உற்றாரும், உரியவரும் கைவிடும் நேரம் மனிதன் நிலை குலைந்து புறச்சூழலுக்குக் கட்டுப்பட்டு அடங்கினால், அவன் கொடுமைக்குட்பட்டு அழிகிறான்.

       • அனைவரும் கைவிட்ட நேரம் இதுவே முடிவன்று என்ற தெளிவுள்ளவனுக்கு அவன் ஆத்மா வெளிவந்து நிலைமையை தலைகீழே மாற்றும். அது அன்பருக்கு அன்னை வாழ்வில் வெளிப்படுவதாகும்.

       அப்படி நிலைமை சமாளிக்கப்பட்ட நேரம் பிரச்சினையான விஷயங்கள் தீர்வதும், புதிய காரியங்கள் உற்பத்தியாவதும் உண்டு. தங்கள் வாழ்வை அவர்கள் இன்று நினைவுபடுத்திப் பார்த்தால், நடந்த விஷயங்கள் எப்படி உருவாயின என்றால், அவை மறந்திருக்காது. அது நடந்து முடிந்த பாதை கீழ்க்கண்டவாறு இருக்கும்.

 

மனம் நிலை குலையாமல் தெளிந்த பின் தெம்பு பிறக்கும்

Being

சத் புருஷன்.

பிறகு அந்தத் தெம்பு என்ன என்றுதெளிவுபடும்.

Consciousness

தன்னையறிவார்.

தெளிவைச் செயல்படுத்த உணர்வு துடிக்கும்.

Ananda

காரியம் செய்ய ஆர்வம் எழும்.

எப்படிச் செய்வது, எதைச் செய்வதுஎன்ற தெளிவு விவரமான தெளிவாக எழும்.

Supermind

ஒரு முடிவு பிறக்கும்.

அது அறிவாகவும், உறுதியாவும் பிரியும்.

knowledge, will of mind

தெளிவு, உறுதியாகும்.

அறிவு உறுதியைத் தெளிவுபடுத்த சக்தி எழும்.

knowledge releases energy from will (Life)

உறுதி தெளிவால் உற்சாகப் படும்.

தெளிவு மறைந்து உறுதி செயல் ஆகும்.

knowledge disappears to create matter

அறிவு மறைந்து காரியம் பூர்த்தியாகும்.

 

        அப்படி முன்னுக்கு வந்தவர்களைக் கேட்டால், இன்று என் சொத்து உங்களுக்குத் தெரிகிறது. இதற்கு நான் பட்டபாடு யாருக்குத் தெரியும் என்பார்கள். அது பெரிய பாடு. It is the process of creation. இதுவே உலகம் சிருஷ்டிக்கப்பட்ட முறை. ஸ்ரீ அரவிந்தம் கூறுவது. ரிஷிகள் அறியாதது. பொறுப்பு இல்லாத கணவன் 32 வயதில் பெண்ணுக்குத் திருமணம் செய்ய தன்னால் முடியாது என்ற பின் மனைவி அதை முடித்தாள் என்றால், அவள் சென்றது மேற்சொன்ன பாதையாகும். இது அன்றாடம் நம் வாழ்வில் நடப்பது. அழிபவர்கள் ஏராளம். அழிய மறுப்பவர்களும் ஏராளம். சொந்தத் தெம்பால் அவர்கள் தங்கள் உலகத்தை சிருஷ்டித்தவர்கள். அவர்கள் உலகத்திற்கு அவர்களே பிரம்மம். தாங்கள் செய்ததை விவரமாக அறிந்தால் அவர்களுக்கு இதுதான் சிருஷ்டியின் இரகஸ்யம் எனப் புரிந்தால், அவர்களால் அவர்கள் வாழ்வில் எதையும் சிருஷ்டிக்க முடியும். தங்கள் அதிர்ஷ்டத்தைத் தாங்களே நிர்ணயம் செய்து பூர்த்தி செய்யும் திறன் அவர்கட்குண்டு.

நிலைமை மோசமாகி நம்ப வேண்டியவர் கைவிட்ட பின் எழுவது தெய்வம்.

அப்படி எழும் தெய்வம் நம் மனநிலைக்குரிய தெய்வமாக இருக்கும்.

எளியவனுக்கு வாழ்வு பிரச்சினை.

அதைச் சாதிக்க முயன்றால் வாழ்வுக்குரிய தெய்வம் ஆவேசமாக எழும். காரியத்தைச் சாதிக்கும். It is vital power solving the problems.

டாக்டர் கைவிட்ட பின் உடல் சாக மறுத்தால் உடன் சக்தி எழுந்து வியாதியைக் குணப்படுத்தும். It is the force in the body expressing physical energy.

என்ன நடந்தது, ஏன் என்னை அண்ணன் கைவிட்டு விட்டான் என யோசனை செய்து அதனால் எழும் சக்தி மனத்திற்குரியது. It is the force of mind.

மனத்தின் சக்தி தவறும் நேரம் நம்பிக்கை தவறவில்லை என்றால் சாட்சிப் புருஷன் வெளிப்படுவான். தொடர்ந்தால் ஜீவாத்மாவும், பரமாத்மாவும், பிரம்மமும் வெளிப்படும்.

       தவத்தால் இதுபோல் சத் புருஷனை அடைவதையும், சத், சக்தி என்றறிவதையும், சத்திலிருந்து சித் என்ற சக்தி எழுவதையும், அது ஆனந்தமாக அடுத்த கட்டத்தில் மாறுவதும் Life Divine இல் 9, 10, 11, 12 அத்தியாயங்கள். பரவலான சக்தியைக் குறிப்பிட்ட நிகழ்ச்சியாக மாற்றுவது Maya மாயை என்பது. அந்த சிருஷ்டியின் பொறுப்பை ஏற்பது சத்திய ஜீவியம். சத்திய ஜீவியம் உலகை சிருஷ்டிக்க காலம், இடத்தை சிருஷ்டித்தது, செயல்களைக் காலத்தால், இடத்தில் நிகழ வைக்கிறது. காலத்தால் ஏற்பட்ட நிகழ்ச்சி இடத்தில் வெளிப்படும் சட்டம் causality காரணம் காரியமாவது.

       ஆண்டவனுடைய சிருஷ்டி அவனுள்ளே உற்பத்தியாகிறது. உள்ளே சிருஷ்டிக்கப்பட்ட உலகை எடுத்து வெளியே கொண்டு வந்து ஆண்டவன் முன் இரண்டாம் பேர்வழியாக நிறுத்தும்பொழுது, அதைக் காண, அவற்றிடையே -ஆண்டவனுக்கும் சிருஷ்டிக்கும் இடையே - மனம் உற்பத்தியாகிறது. மனம் சிருஷ்டியைக் காண்கிறது. திரும்பிப் பார்த்தால் ஆண்டவனைக் காணலாம். ஒரு சமயத்தில் மனத்தால் ஒன்றையே ஆண்டவனை, அல்லது சிருஷ்டியை மட்டும் காண முடியும். இரண்டையும் ஒரே சமயத்தில் மனத்தால் காண முடியாது. சத்திய ஜீவியத்தால் காண முடியும்.

       மனம் என்பது அறிவு, உறுதி என்று இரு பிரிவுகளாலானது. அறிவு உறுதி மேல் செயல்பட்டால், உறுதிக்கு உற்சாகம் எழும். அறிவு தன்னை உறுதியில் முழுவதும் இழந்துவிட்டால் உற்சாகம் காரியமாக முடியும்.

        • இதற்கு மேல் அநியாயமில்லை என்று வந்த பின் அழியாத நம்பிக்கை நிலைமை மாறும் புதுச் செயலை ஏற்படுத்துவது ஆண்டவன் செயல், அன்னை செயல்

        • அதன் பிறகு அறிவும் தெளிவும் உறுதியைத் தயார் செய்து காரியத்தைப் பூர்த்தி செய்வது நம் வாழ்வுக்கு சிருஷ்டி போன்றது.

       • கணவனுக்கு வேலையில்லை என்பதால் கொடுமைக்கு ஆளானவள் நம்பிக்கை அழியாதபொழுது வேலை கிடைப்பது அன்னை செயல். இதுபோன்ற செயலைப் பார்க்காத அன்பரில்லை.

       • அதிலிருந்து, கொடுமையிலிருந்து விடுதலை பெற்ற விவரம் சிருஷ்டிக்குரிய முறை.

       • சொந்த அனுபவத்தில் அம்முறையைக் காண்பது to know it consciously சிருஷ்டியின் முறையை அறிவது.

       • அதை Life Divineஇல் படிப்பது தத்துவம்.

       • வாழ்வில் பார்ப்பது அனுபவம்.

       • தத்துவத்தை அனுபவத்தில் காண்பது சிருஷ்டி. அதுவே முதல் 28 அத்தியாயத்திற்குரிய கருத்து.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

நாம் கேட்பதை, தாங்கள் மகிழ்ந்தபொழுது தெய்வங்கள் நமக்கு வரமாக அளிக்கின்றன. பிரம்மம் தன்னிடமிருந்து எதையும் மனிதன் தன் திறமையால் பெறுவதை அனுமதிக்கிறது. அன்னை நம்மால் பெற்றுக் கொள்ள முடிந்த அத்தனையையும் நமக்களிக்க ஆர்வமாக இருக்கின்றார்.

 

 

  • கேட்பதைக் கொடுக்கும் தெய்வம்.

  • எதைப் பெறவும் அனுமதிக்கும் பிரம்மம்.

  • பெறும் அளவுக்கு தரும் அன்னை.

 book | by Dr. Radut