Skip to Content

08.கன்ஸல்ட்டன்ஸி

  3 மணிக்கு மதிய உணவு”

       ஜான் கம்பெனி முதலாளி. வேலை அதிகம். ஆனால் சாப்பாடு நேரம் தவறுவதில்லை. புதிய மானேஜ்மெண்ட் முறைகளைக் கற்க ஆரம்பித்தார். அவை நாட்டில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

வாடிக்கைக்காரர்களை மறுத்துப் பேசக் கூடாது!

அவர்கள் அபத்தமாகப் பேசினாலும், அதனுள் உள்ள இம்மியளவு உண்மையை எடுத்துக் காட்டிப் பாராட்ட வேண்டும்!

$10க்கு வாங்குபவரிடமும், $1000க்கு வாங்குபவரிடம் காண்பிக்கும் கவனம் வேண்டும்.

வருகின்ற வாடிக்கைக்காரர்களைக் கடையில் உள்ள அத்தனை பேரும் அவரவர் சந்திக்கும்பொழுது பெரிய வரவேற்பு அளிக்க வேண்டும்.

       பட்டியல் நீண்டது. இவையெல்லாம் அவர்கள் நாட்டில் உண்டு என்றாலும் சற்று அதிகப்படியாகப் பின்பற்ற வேண்டும் எனில் கஷ்டமாக இருப்பதுடன், மனம் கசந்து போகும். ஏர்ஹோஸ்டஸ் சில கம்பெனிகளில் உள்ளே வரும் பயணிகள் ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகை செய்ய வேண்டும். விமானத்தை விட்டு இறங்கும் பொழுதும் மீண்டும் புன்னகை, மனத்திலில்லாத புன்னகையை வரவழைத்துச் சிரிக்க வேண்டும் என்பது தண்டனை. 300 முறை செய்வது கொடுமை. இவர்கள் வீட்டில் சிரிப்பதே இல்லையாம். இவர்கட்கெல்லாம் சிரிப்பின் மீதே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. வாய் வலிக்கிறதாம்!

       ஜீவனற்ற இனிமை வாடிக்கைக்காரர்கட்குப் பிடிக்கிறது. வியாபாரம் அதிகமாகிறது. விற்பவருக்கு உள்ளே உயிர் போகும். எல்லா இடங்கள்போல அன்னை இங்கும் மாறிச் செயல்படுகிறார். ஜான் கடையில் $500,000 முதல் $750,000 மாதத்தில் விற்கும். அதிகபட்சம் சில நாட்களில் 40 அல்லது 60 ஆயிரம் விற்கும். குறைந்தபட்சம் 1 ஆயிரமும் விற்பனை இருப்பதுண்டு. கடையில் 50, 60 பேர் வாடிக்கைக்காரர்கள் வந்தால் 10 அல்லது 15 பேரே வாங்குவார்கள். $1000 சேல்ஸ் பெரியது. ஒருவர் 5000 அல்லது 8000த்திற்கு வாங்கினால் அது விசேஷம். ஜான் அன்று காலையில் புதியதாய் கற்றுக் கொண்டது,

       “எவ்வளவு நேரம் வாடிக்கைக்காரர் இருக்கிறார் - 1 மணி, 2 மணியும் இருப்பார்கள் - எவ்வளவுக்கு வாங்குகிறார், வாங்கவில்லையா என்பவற்றைப் பொருட்படுத்தாமல், வந்தவர் மனம் இனிக்க வேண்டும், அவருக்குத் தேவையானது இருக்கவேண்டும், அவரைச் சந்தோஷப்படுத்துவதே என் சந்தோஷம். வியாபாரம் மறந்துவிட வேண்டும்.”

       இது அன்னை முறை. ஜான் ஏற்றுக் கொண்டதன் பலன் அன்று 1 மணி சாப்பாடு 3 மணியாயிற்று. கையில் toast டோஸ்ட்டை எடுத்து வாயில் வைத்தார். ஒரு வாடிக்கைக்காரர் “ஜானைப் பார்க்கவேண்டும் என்கிறார்” என்று செய்தி. உடனே அவரைக் கவனிக்க வேண்டும். சாப்பாட்டை நினைக்கக் கூடாது என்றால் பசிக்கிறது. சாப்பாடு ஆறிப் போனால் சாப்பிட முடியாது. அவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றால் 3 மணிக்குச் சாப்பாட்டைவிட்டு இவரைக் கவனிக்கப் போனால் எப்பொழுது சாப்பிடுவது? அதையும் பொருட்படுத்தவில்லை என்றால் அதை எப்படிச் சந்தோஷமாகச் செய்வது? ஜான் ஒரு நிமிஷம் எழுந்து நின்றார், “சாப்பாடு முக்கியமில்லை. வாடிக்கைக்காரர் முக்கியம். அதைவிட சந்தோஷம் முக்கியம்” என்று நினைத்தார். மனம் மலர்ந்தது, போனார், வந்தவரை சந்தித்தார். 1 மணி நேரத்திற்கு மேல் அவர் T.V., speaker என பல பொருள்களைப் பார்வையிட்டார். வாங்கினார்.

       • அவர் அன்று $ 100,000க்கு வாங்கினார்.

 

****

 

 



book | by Dr. Radut