Skip to Content

07.லைப் டிவைன் -கருத்து

 லைப் டிவைன் -கருத்து”

 

P.12 . It is the highest knowledge. But not the final one.

உயர்ந்த ஞானமுண்டு; அதுவே முடிவான பிரம்ம ஞானமில்லை.

இதை விளக்குமுன் இதுபோன்ற பல உண்மைகளைக் கூறலாம்.

சுப்ரீம் கோர்ட் முடிவான கோர்ட் என்பது உண்மை. ஆனாலும் அதுவே முடிவன்று. பார்லிமெண்ட் அதைக் கடந்த அதிகாரமுள்ளது.

Ph.D. முடிவான பட்டம். பெரிய படிப்பு. அதைக் கடந்து படிப்புண்டு. பட்டங்களும் - D.Sc.,D.Litt., LL.D. - உண்டு.

நாட்டில் அரசன் வைத்ததே சட்டம் என்பது உண்மை. அவனும் தர்மத்திற்குக் கட்டுப்பட வேண்டும்.

பிரதம மந்திரியே தலைவர். அவரைக் கடந்து ஜனாதிபதி உள்ளார்.

ஜாதகம் கூறிவிட்டது. இனி மறுபேச்சில்லை. அருள் ஜாதகத்தைக் கடந்தது.

போரில் இராணுவமே கடைசி கட்ட அதிகாரமுள்ளது. ஆனால் இராணுவம் மந்திரி சபைக்குட்பட்டது.

இராணுவம் தோற்றால் அதுவே முடிவு. சர்ச்சில் தன் தைரியத்தால் தோற்ற இராணுவத்தை மீண்டும் போரிடச் செய்து வெற்றி பெற்றார்.

பகவான் எழுதிய நூல்களில் தலை சிறந்தது Life Divine. சாவித்திரி அதையும் கடந்தது.

வாழ்க்கையில் பணம் பேசும். பணத்தைக் கடந்து நியாயம் பேசும் நேரங்களை நாம் கண்டோம். எலக்ஷனில் பணத்தைக் கடந்து பல விஷயங்கள் பேசுகின்றன. அதில் ஜாதி ஒன்று.

குடும்பத்திற்குத் தலைவன் கணவன். அவன் மனைவிக்குட்பட்ட நேரம் உண்டு.

       இந்தப் பக்கத்தில் ஆன்மீக உண்மையை எடுத்துக் கூறும் பொழுது பெரிய ஞானத்தை எடுத்து பகவான் விளக்குகிறார். ஆனால் அதுவே முடிவானதில்லை எனவும் கூறுகிறார். இதை விளக்க பல பக்கங்கள் எழுத வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சுருக்கமாகக் கூறலாம்.

பிரம்மம் அனந்தம் என்பதால் அதை அறிய முயலும் ஞானமும் அனந்தமானது என்றாகுமன்றோ?

அதனால் எந்த நிலை ஞானமும் முடிவானதெனக் கூறிவிட முடியாதன்றோ?

.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

  ஒரு ஜென்மத்தில் அறிந்து பெற்ற விவேகம், சாதாரண மனிதனுக்குப் பழமொழியாகக் கேட்கிறது 

 இது சூத்திரம்போல், விவேகத்தின் வெளியுறையாக, வழக்குச் சொல்லாக மாறுகிறது. விவேகி, தன் முழு முயற்சியால் அறிவில்லாதவனுக்கோ, மற்ற எவருக்கோ இதற்கு மேல் சொல்ல முடியாது.

 

விவேகம் என்ற முழு மனிதனின் ஓர் ஆடை பழமொழி.

 

 



book | by Dr. Radut