Skip to Content

05.Agenda

 Agenda  - Vol I-  P.33

To live in the truth one should rise above affirmation and negation.

Tolerance is full of superiority. Truth is not successive but simultaneous.

       உண்மை என்பது என்ன என்றால் கண்ணால் கண்டதை உண்மை எனலாம். அதை ஆங்கிலத்தில் truth என்று கூறமாட்டார்கள். புலன் கண்ட உண்மை அது. தத்ரூபமான பொம்மை சற்று தூரத்தில் நிஜ உருவமாகத் தெரிகிறது. நாம் பார்ப்பது fact. அது பொம்மை என்பது truth. தகப்பனார் கூறும் பொய்யை மகன் நம்பினால், அடிப்படையில் அது பொய், மகனுக்கு அது தகப்பனார் கூறிய மெய் என்றால் it is a vital fact. அது தகப்பனாரின் உண்மை அதாவது தகப்பனார் கூறிய பொய்.

       அப்படியானால் சத்தியம் என்பது எது?

       கடைசிவரை ஆராய்ச்சியில் உண்மையாக இருப்பதே சத்தியம். ஒருவர் M.A.. பாஸ் செய்ததாக சொல்கிறார். அவர் குரலில் பொய் தெரிகிறது. சிலர் நம்புகிறார்கள், சிலர் நம்பவில்லை. சர்ட்டிபிகேட்டை ஏற்கிறார்கள். ஒருவர் மனம் ஏற்க மறுக்கிறது. கொஞ்ச நாள் கழித்து அது பொய் சர்ட்டிபிகேட் எனத் தெரிகிறது. அப்பொழுது நம்ப மறுத்தவரை அனைவரும், “எப்படி நீங்கள் மட்டும் கண்டு கொண்டீர்கள்?” என்கிறார்கள். வந்தவர் சொல்வதையோ, அவர் சர்ட்டிபிகேட்டையோ நம்ப மறுத்தவர் மனத்திலுள்ள சத்தியம் ஏற்க மறுக்கிறது. மனத்தில் பொய்யுள்ளவர்கள் பிறர் பொய்யை ஏற்பார்கள். நாம் மனத்தில் வாழ்கிறோம். அடுத்த நிலை சத்திய ஜீவியம். சித் அடுத்தது. சத் முடிவானது. சத்தியம் சத் என்பதில் உள்ளது. எவருடைய மனம் சத் என்பதின் சத்தியத்திலுள்ளதோ அவர் உண்மையானவர்.

சத் என்பதன் புற உருவம் சத்தியம்.

சத் காலத்தைக் கடந்தது என்பதால் நிகழ்ச்சிகள் இங்கு தொடராக இருக்காது. ஒரே சமயத்தில் நிகழ்வதாக இருக்கும்.

பிறர் குறையைப் பெருந்தன்மையாகப் பொறுத்துக் கொள்வது உலகில் உயர்ந்தது என்றாலும், யோகத்திற்கு அதுவும் அகந்தையின் செயல்.

Affirmation எனில் உண்டு எனப் பொருள், negation எனில் இல்லை எனப் பொருள். இவையிரண்டும் சிருஷ்டிக்குரியவை. சத்தியம் சிருஷ்டியைக் கடந்தது.

       புதியதாக ஒன்று வந்தால் நம்மவர் இரு கட்சியாகப் பிரிந்து ஒன்று ஏற்கும், அடுத்தது மறுக்கும். இருவரும் சத்தியத்தைச் சார்ந்தவரில்லை. ஏற்பும், மறுப்புமற்றது சத்தியம். புதியதாக வந்ததைக் கேட்டு ஆர்வமாக ஏற்காமல், வேகமாக எதிர்க்காமல் நடுவுநிலையிருக்க மனம் நிதானமாக இருக்கவேண்டும்.


நிதானமானவர் சத்தியத்திற்குரியவர்.

நிதானம் மனத்திற்கில்லை.

நிதானம் பெற மனத்தைக் கடந்தவராக இருக்கவேண்டும்.

வாழ்வில் சத்தியத்தைக் கடைப்பிடிக்க நடுநிலையுள்ள நிதானம் தேவை.

 

****

 

 



book | by Dr. Radut