Skip to Content

04.பகவானுடைய இதர நூல்கள்

 ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்”

        'மாலை நேர உரையாடல்களில்’ ஸ்ரீ அரவிந்தர் தாம் சோம்பேறி என்று கூறுகிறார். பொதுவாக, காவியத்தில் நாட்டமிருப்பதால், பரீட்சை சமயத்தில்தான் படிப்பது வழக்கம் என்கிறார்.ஸ்காலர்ஷிப்புக்காக ஸ்ரீ அரவிந்தர் எழுதிய கட்டுரைகளைக் கண்ட ஆஸ்கார் பிரௌன் என்ற ஆசிரியர் அது போன்ற அற்புதமான கட்டுரைகளைத் தாம் கண்டதில்லை என்றார். அதன் பிறகு ஆங்கிலப் பண்பு பற்றிப் பேச்சு திரும்பியது. அது பிரெஞ்சுப் பண்பையும் தொட்டது. அது சமயம் பகவான் ஸ்ரீ அரவிந்தரும், மற்றுமுள்ளவர்களும் கூறிய கருத்துகள் :

 

  • அந்த நாளில் இந்தியர்களைப் பற்றிய தப்பு அபிப்பிராயம் இங்கிலாந்தில் இருந்ததா?
  • ஆங்கிலேயருக்கும், இந்தியருக்கும் எவரும் வித்தியாசம் பாராட்டுவதில்லை.
  • தாழ்ந்த மக்கள் 'கருப்பன், கருப்பன்' என்று ஓலமிடுவார்கள்.  
  • அது இந்தியாவில் வசித்த ஆங்கிலேயர் (Anglo-Indians)கொண்டு வந்த பழக்கம்.
  • அது ஜனநாயகத்தின் விளைவு எனக் கருதுகிறேன்.
  •  பண்பான ஆங்கிலேயரிடம் அது காணப்படாது.
  •  எங்களை அவர்கள் சமமாக நடத்தினர்
  •  ஆனால் பிரான்சில் அப்பாகுபாடு கண்ணில் படாது
  •  ஒரு பாரிஸ் ஹோட்டல் மானேஜரை 10 அமெரிக்கர்கள் சேர்ந்து அங்குத் தங்கியிருந்த நீக்ரோக்களை வெளியில் அனுப்பச் சொன்னார்கள்.
  • பேப்பரில் அச்செய்தியை நீங்கள் படித்தீர்களா என எனக்குத் தெரியாது
  •  பிரான்சில் நீக்ரோ கவர்னர்கள், ஆபீசர்கள் உண்டு
  •  டாக்ஸி-டிரைவர்களாகவும் - நீக்ரோக்கள் - வேலை செய்கின்றனர்
  •  செனகலீஸ் பார்லிமெண்ட் மெம்பர் கவர்னர்களை நியமிப்பது வழக்கம்
  •  பாண்டியில் ஏன் இந்திய உறுப்பினரை நியமிக்கவில்லை எனத் தெரியவில்லை
  •  ஆங்கிலேயருக்குச் சுதந்திர உணர்வும், common sense பொதுவான நல்ல குணமும் உண்டு. 
  •   சுதந்திரம் என்றால் பெருந்தன்மையைக் குறிப்பிடவில்லை. மனதில் சுதந்திர உணர்வும் நேர்மை மனப்பான்மையும் உண்டு.
  • இவற்றாலும், சேவா உணர்வாலும் அமெரிக்காவிலும், பிரான்சிலும் உள்ள குழப்பம் இங்கிலாந்திலில்லை
  •  ஆங்கிலேயர் பத்திரிகைகளிலும், நேராகவும் ஒருவரை அடுத்தவர் தீவிரமாகக் குறை சொல்வார்கள். அது அவர்கள் நட்பைப் பாதிக்காது
  •  Brailsford எப்படி Chamberlainஐத் தாக்கினார் என்று பார்க்கிறோம். அது அவர்கள் நட்பையும், உறவையும் பாதிப்பதில்லை.
  • அது போலியன்று, உண்மை. இங்கிலாந்தில் உண்மையான பேச்சு சுதந்திரம் உண்டு.
  • விவேகானந்தர் ஆங்கிலேயருடன் உறவாடி நட்புக் கொள்வது சிரமம், ஆனால் ஒரு முறை நட்பைப் பாராட்டினால் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று கூறியது உண்மை.

    ****

       

       



book | by Dr. Radut