Skip to Content

15.மனம் என்ன செய்யும் - பொறாமை

மனம் என்ன செய்யும் - பொறாமை

       பொறாமை என்பது தீ. உடனே எரிக்கும். விளக்கம் தேவையில்லை. தேவையேயில்லை. வீடு வாங்க வேண்டுமென்று காலையில் ஆடிட்டரிடம் கூறினேன். மாலையில் அப்பணத்திற்கு ஆபத்து வந்துவிட்டது.

  1. என் நண்பர் அவரிடம் இருந்த இரண்டாம் காரை எனக்கு உபயோகத்திற்குக் கொடுத்ததை எனக்கு பொறாமையேயில்லை என்று கூறும் நண்பரிடம் கூறினேன். 15ஆம் நாள் நண்பரில்லை. நான் சொல்லிய பின் அவருடைய பொறாமை எனக்குத் தெரிந்தது.

  2. நாம் அனைவரும் இதுபோன்ற பல உதாரணங்களை அறிவோம், இதன் சாரத்தை நாம் அறிவோம்.
  3. யாரிடம் சொல்லிய விஷயம் கெட்டுப் போகிறதோ, அவருடைய பொறாமை தழலாக எரிகிறது.

பிறர் பொறாமையிலிருந்து தப்பலாம் - நிச்சயமாகத் தப்பலாம்

       தப்ப வழி தெரியவில்லை என்றால் கஷ்டம். நாமெல்லாம் அவ்வழியை அறிவோம். பொறாமைக்காரர்களிடம் விஷயத்தைச் சொல்லாவிட்டால், பொறாமை செயல்படாது. இதைவிடக் கடுமையானது அது நம் பொறாமை. நமக்கு நம் மீதுள்ள பொறாமை. பொறாமை எனக் கூறுவது பொருந்தாது. எல்லாம் நல்லபடியாக நடந்து வரும்பொழுது நாம் சந்தோஷப்பட்டால் காரியம் கெட்டுவிடுகிறது. எனக்கே பொறுக்கவில்லை என்கிறோம். இங்கு ஒரு பெரிய தத்துவம் உண்டு. இதிலிருந்து தப்புவது சிரமம். தப்ப வழி தெரிவது பெரியது. தெரிந்தால் எதையும் சாதிக்கலாம்

        நாமறிந்த சிறிய வாழ்வில் அன்னை பெரியதைத் தருகிறார். அன்னை தருவது நம் மனத்தில் பட்டால் கருகிவிடும். அது நம் மனத்தின் தன்மையன்று. மனத்தின் தன்மை. அதனால் நம்மையறியாமல் பெரிய காரியங்கள் நடந்தால் - மனத்திலிருந்து தப்பிவிட்டதால் -அவை கூடி வருகின்றன. அருள் அப்படிச் செயல்பட விரும்பினால் நமக்கு வரும் அதிர்ஷ்டத்தை நம் கண்ணில் படாமல் அன்னை முடிக்கிறார். இதை நாமே செய்ய வழியுண்டா? பெரியது வரும் நேரம், வந்தால் இது என் மனத்தில் படக்கூடாது என முடிவு செய்து, முடிவைச் சமர்ப்பணம் செய்தால், காரியம் முடியும்வரை அது நினைவு வாராது. ஓர் உதாரணம்.

  • எல்லாம் போனபின் எல்லாமிருப்பதுபோல் ஒரு பெரிய காரியம் கூடி வந்தது. ஆச்சரியம், என் உலகமே அதிர்ந்தது. நல்லபடியாக முடிய வேண்டும் என்றேன். 10 மடங்கு நல்லபடியாக முடிந்தது. ஆனால் அடுத்தாற்போல் அதே போன்ற மற்றொரு காரியம் முடியவேண்டும். எனக்கு வழி தெரியவில்லை. நம்பிக்கையில்லை. அன்னை என் கண்ணிலும், மனத்திலும் படாதபடி அதை முடித்த பொழுது, அதன் தரம் உயர்வாகவும், செலவு குறைவாகவும் முடித்தார். முடிந்தபிறகு பிறர் எடுத்துச் சொன்ன பிறகுதான் இது இவ்வளவு பெரியதாக முடிந்ததற்குக் காரணம், என் கண், என் மனத்திலிருந்து தப்பியதே காரணம் என அறிந்தேன்.”

    ****

 

 



book | by Dr. Radut