Skip to Content

14.மனம் என்ன செய்யும்

மனம் என்ன செய்யும்

  • நல்லபடியாக positive இருந்தால் எதையும் சாதிக்கும்.
  • தவறாக இருந்தால் negative எதையும் சீக்கிரம் அழிக்கும்.

       - இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படுவது அதிர்ஷ்டம் என்ற வீட்டில் பெரிய மாப்பிள்ளையை என் மனம் புள்ளியாகப் போட்டது, போட்ட புள்ளி நிறைவேறியது.

       - தகப்பன் தெருவில் வளையல் விற்பவர், தாயார் கொல்லையில் களை எடுப்பவர். என் படிப்பு 5 வகுப்பு. மாமன் உதவியால் வித்வான் படித்து 1945இல் ரூ.25க்கு வேலைக்குப் போனேன். 1950இல் B.A, படிக்க முடிவு செய்தேன். 53இல் B.A., 57இல் B.T.,  60இல் M.A. படித்தேன். தமிழ்ப் பண்டிதராக இருந்து தலைமையாசிரியரானேன். நான் நினைத்ததை என் மனம் சாதித்தது.

       - SSLC, 1000 ரூபாய்க்கு உட்பட்ட சம்பளமும் M.A யாகவும், 5000ரூபாய் சம்பளமாகவுமென உறுதியால் மாறியது.

       மனம் சாதிக்கும் என்பதற்கு எவர்க்கும் ஆயிரம் உதாரணங்கள் உண்டு. அத்துடன் அவர்கள் மனம் வேறொன்றையும் அறியும். "மாப்பிள்ளை பெரியதுதான். இன்று கிடைத்துவிட்டது. நடுவில் பட்டபாடு அதிகம். பாடு எனில் சும்மாயில்லை. கிடைக்கும் என்ற பிறகு என் மனம் செய்த கிராக்கியை நான் அறிவேன். என்னமோ நடந்துவிட்டது இன்று. நடக்காமல் போயிருந்தால் ஆச்சரியமில்லை. எனக்கே பொறுக்கவில்லை போலும். ஏதோ அதிர்ஷ்டமிருந்தது. நல்லபடியாக முடிந்துவிட்டது என்பது ஓர் அனுபவம். நான் B.A., படிக்கவேண்டும் என்று சொல்வதைக் கேட்டு சிரிக்காதவரில்லை. அதனால் கைவிட்டேன். பேர் உதவி வந்தது. உதவியை நான் பெற அதிகாரம் செலுத்தினேன். இரண்டு முறை பெயிலானேன். வெட்கத்தை விட்டு அதிகாரம் செய்ததை மாற்றிக் கெஞ்சினேன். எப்படியோ முடிந்தது. எதற்கும் சுழி வேண்டாமா? காலம், நேரம் வரவேண்டாமா? “எனக்கு முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் ஏராளம். என் முகம் விகாரமானது. அதை மறைக்க நான் அன்பாகப் பேசுவேன். என் அன்பை ஏற்றவர் என்னை அழகு என்றனர். என் மனம் அனைவரையும் வெறுத்தது. எதுவுமே பிடிக்கவில்லை. எவரையும் எளிமையாகத் துரோகம் செய்வேன். துரோகம் கைமேல் பலன் தரும். ஆதாயமிருந்தால் அன்பாகப் பழகுவேன். இல்லை என்றால் திரும்பிப் பார்க்கமாட்டேன். என் வாழ்வில் எனக்கு யார் மேலும் பிரியம் ஏற்பட்டதேயில்லை. யாரை நினைத்தாலும் வெறுப்பாக இருக்கிறது. மனம் அசுர வேகத்தில் செயல்பட்டது. எனக்கு வாழ்வில் எப்பொழுதும் பிரச்சினைகளேயில்லை. பணம் ஏராளம். பிரச்சினைகளேயில்லை என்றால் எனக்கு வாழ்வே 1 நாள் கூட இருந்ததில்லை. என் காலமும் முடிந்துவிட்டது.”

contd....

 

 



book | by Dr. Radut