Skip to Content

13.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 தம்பி - அஜெண்டாவில் அன்னை என்ன சொல்கிறார்?

அண்ணன் - யோகம் என்பது மேலே போவது, பூரண யோகம் மேலும், கீழும் போவதன்றோ?

தம்பி - வாழ்வை ஏற்பதைத் தானே கீழே போவது என்று கூறுகிறீர்கள்.

அண்ணன் - ஆமாம். இதுவரை செய்த யோகமெல்லாம் மேல் மனத்தின் யோகம். பூரண யோகத்தை மேல் மனத்தினின்று செய்ய முடியாது. உள்ளே போய் செய்ய வேண்டும். உள்ளே (subliminal) அடி மனம் போவதை descent கீழே போவது என்கிறார். இதுவரை யோகம் அகந்தையின் சாதனை, இனி அகந்தையை அழிப்பதே சாதனை.

தம்பி - கீழே போவது என்றால்

1. வாழ்வை ஏற்பது,

2. அகந்தையை அழிப்பது,

3. அடிமனத்தை அடைவது,

4. திருவுரு மாற்றம் செய்வது என்று கூறலாமா?

 அண்ணன் - அது சரி. நடைமுறையைக் கூறினால்தான் புரியும். ஒரு யோகி மோட்சமடைந்தால் அவருக்கோ, அவர் வாழ்வுக்கோ, உலகத்திற்கோ என்ன பலன்?

 

தம்பி - அப்படியானால் பல ராமானுஜங்கள் இருப்பார்களா?

அண்ணன் - இருக்கிறார்கள், நாம் கண்டுபிடிக்க முடியும். நம்பிக்கை வேண்டும். மேதையாக உருவாகக் கூடியவர்கள் ஆயிரமாயிரம் பேர் நாட்டிலிருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தம்பி - அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

அண்ணன் - அதை நம்மால் கண்டு பிடிக்க வழியுண்டு. நாட்டில் அது போன்ற நம்பிக்கையேயில்லையே. மேல்நாட்டு திறமை, பழக்கம் ஆகியவை 400 அல்லது 500 வருஷத்தில் ஏற்பட்டது. நமக்கு அது தேவை. அதை உடனே பெற முடியாது. ஆனால் அவசியமாகப் பெற வேண்டும். 50 ஆண்டு சுதந்திரத்தில் நாம் அதைப் பெற்றிருக்கலாம். பெறவில்லை. நம் நாட்டு ஆன்மீகம் அவர்கள் திறமையை விட உயர்ந்தது. அது அவர்கட்குத் தேவை. எளிதில் பெற முடியாது.

தம்பி - வேறு வழியில்லையா?

அண்ணன் - அவர்கள் திறமையின் பெருமையும், அவசியமும், அது ஏற்பட்ட வகையும் நாமறிந்து, ஆழ்ந்து அதை விரும்பினால் பெற வழியுண்டு.

தம்பி - என்ன வழி?

அண்ணன் - நாம் எப்படி நம் ஆன்மீகத்தையும், பண்பையும் பெற்றோமோ அதுபோல் மேல் நாட்டுத் திறமையை நாட வேண்டும். உலகம் பலவற்றை நாடுகிறது. ஆன்மீகம், தத்துவம், ஞானம், விஞ்ஞானம், பண்பு, மானம், சூட்சுமம், தொழில் நுணுக்கம் போன்ற பலவற்றை நாடுகிறது. ஒவ்வொன்றையும் ஓர் இடத்தில் வளர்க்கிறது. நேரம் வந்தபொழுது எல்லாம் ஒன்று சேர வேண்டும். அனைவரும் அனைத்தையும் பெறவேண்டும்.

தம்பி - மனித யத்தனத்தால் இது முடியுமா?

அண்ணன் - தெய்வம் இதைப் பூர்த்தி செய்யக் காத்திருக்கிறது. மனிதன் தன் முயற்சியைப் பூர்த்தி செய்துவிட்டால், மீதியைத் தெய்வம் க்ஷணத்தில் பூர்த்தி செய்யும். நம் ஆன்மீக உயர்வை நாம் முதலில் உணர வேண்டும்.

தம்பி - அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டால்தான் நாம் அதைப் பாராட்டுவோம்.

அண்ணன் - சீனுவாச இராமானுஜம், வால்மீகி, வசிஷ்டர், சி.வி.ராமன், காந்திஜி, நேரு, பாரதி, ஸ்ரீ அரவிந்தர், திலகர், பரமஹம்சர், வள்ளலார் போன்றவர் ஒருவர் இருந்தால் என்ன அர்த்தம்? மார்க்கெட்டில் ஒரு மாம்பழம் வந்தால் சீசன் வந்துவிட்டது எனப் பொருள். ஒரு பழத்தின் பின்னால் ஓராயிரம், ஒரு லட்சம் இருக்கிறது எனப் பொருள்.

தம்பி - 100 ராமானுஜம் இருப்பார்களா?

அண்ணன் - நாமறிந்த பெரியவர்களில் எத்தனை பேர் சிறுவயதில் பெரிய ஆத்மா எனத் தம்மை அறிவார்கள். ஆத்மா பெரியதாக இருந்தால் மட்டும் போதாது. அது மலர நாடு அவர்கட்குச் சந்தர்ப்பம் தர வேண்டும். ராமானுஜம் இன்ஸ்டிடூட் என்று ஒன்றுள்ளது. ராமானுஜத்தின் பரம்பரையை அவர்கள் தேடினால் 100 பேர் அல்ல 1000 பேர் கிடைப்பார்கள். அவர்கள் அனைவரும் நாட்டின் சொத்து. அவர்கள் மேதா விலாசம் வெளிவர துணை செய்யவேண்டும்.

தம்பி - எப்படிக் கண்டுபிடிப்பது?

அண்ணன் - அறிவைக் கருதாமல், ஆன்மாவின் சின்னங்களைத் தேடினால் தெரியும். அன்னையிடம் அதற்கு வழியுண்டு. மேல் நாட்டு முறைகள் சிறப்பாகிவிட்டதால், அதன் மூலமும் காண முடியும். முயற்சி எழுந்தால் வழிகள் உள்ளன. ஆன்மீக விழிப்பு ஏற்பட்டுவிட்டால், மேதா விலாசத்திற்குரிய genius பல ஆயிரம் பேரை நாம் காண முடியும் என்பது என் அபிப்பிராயம்.Life Divine ஐப் புரிந்து கொண்டால் மேதாவிலாசம் வரும். நாடு ஆன்மீக சித்திக்குத் தயாராக இருக்கும்பொழுது மேதாவிலாசம் அடுத்தது தானே. இது சிறியது என்பதால் எளிதாகப் பெறலாம்.

தம்பி - அது நடக்கும் என்பதற்கு அறிகுறிகள் உண்டா?

அண்ணன் - மடையனை மேதையாகத் திருவுருமாற்றும் திறனுடையது அருள். பாஸ் செய்ய முடியாதவன் பாஸ் செய்தால் அது பிரார்த்தனை பலித்ததாகும். அவன் முதல் மார்க் வாங்கினால் அது திருவுருமாற்றம். ஆயிரம் ஏழைகள் உழைத்து ஏழ்மையைப் போக்குவது கடினம். அவர்கள் பெரும் பணம் சம்பாதிப்பது திருவுருமாற்றம். அன்னையின் வாழ்வில் நடந்தவை அனைத்தும் திருவுருமாற்றம். நமக்குத் தெரிந்தவை கொஞ்சம். Industry உலகத் தொழில் சரித்திரத்தில் அதிகபட்சக் கடன்பட்ட கம்பெனி தேறுமா? தேறுவது ஆச்சரியம். அருளின் கடைக்கண் பார்வை என்ன செய்தது? கடனுக்குச் சமமான இருப்பு சேர்ந்தது. அது திருவுருமாற்றம். ஒரு வகையில் அன்னையிடம் பெற்றனவெல்லாம் திருவுருமாற்றமே. நாடு அதை உணருமா? அயோக்கியன் மாறுவது இல்லை. மாறினால் ஆச்சரியம். அயோக்கியனுக்கு நாணயஸ்தன் என விருது படைப்பது போன்றது திருவுருமாற்றம்.

நாட்டில் ஆயிரமாயிரம் மேதைகளின் வித்துண்டு.

அருள், மடையனையும் மேதையாக மாற்றும்.

நாடு தன் சிறப்பான ஸ்ரீ அரவிந்தத்தை அறிந்து போற்ற வேண்டும்.

200 வருஷத்திற்கு நாகரீகமேயில்லாத நாட்டில் இன்று அனைவரும் காரில் போவதைக் காண்கிறோம். இது மனித முயற்சி. அருள் இந்தியாவை மேதைகள் ஆக்கும் என நம்பக் கூடாதா?

- இந்தியா ரிஷிகள் வாழ்ந்த நாடு.

- இந்தியா மேதைகள் வாழுமிடம் என ஆகும் என்பதே ஸ்ரீ அரவிந்தம் தரும் இலட்சியம்.

- வறுமை ஒழிப்பு என்பதில்லை. நாடு சீக்கிரம் செல்வம் கொழிக்கும்.

நாடு தயார். மனிதன் தயாரா என்பதே கேள்வி.

பொய்யை விட்டு நாடு மெய்யை ஏற்குமா?

மெய்யை மட்டும் கைக் கொள்ளுமா?

அது நடந்தால் மீதி அனைத்தும் தானே வரும்.

 தம்பி - 2000 A.D. க்கு உரிய இலட்சியம் இது. தேசீய சர்க்கார் அமைத்து, அவசரச் சட்டம் (administrative emergency) போட்டு, பெருஞ்செல்வம் உற்பத்தி செய்து, அருளை நம்பி, சத்தியமாகச் செயல்பட்டால் இந்தியா மேதைகள் நாடாகும் என்பதில் ஐயமில்லை.

 

 

அண்ணன் - நாம் பேசக்கூடாது. நாமே அதைச் செய்ய முன்வர வேண்டும். நீ என்ன செய்வாய், நான் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். உலகுக்குச் சொல்வது அப்புறம்.

தம்பி - நாம் சொல்வது பெரிய விஷயம். பலர் ஏன் அன்னையிடம் வந்தோம் என வருத்தப்படுகின்றனர்.

அண்ணன் - விஷயம் என வந்துவிட்டால், அதுதான் முதற் கேள்வி. ஏன் அன்னை என்றும் போலிருக்கக்கூடாதா என மனம் நினைக்கிறது. அதற்கு விலக்கானவரை நான் அறியேன்.

தம்பி - காரியம் ஜெயிக்கிறது என அன்னையிடம் வந்தவர்கள் தான் அப்படிப் பேசுவார்கள்.

அண்ணன் - பொதுவாக நீ சொல்வது உண்மை. ஆனால் மனிதனுக்குச் சுபாவம் என்று ஒன்றுண்டு. முதலில் அன்னை நம் சுபாவத்தையொட்டிச் செயல்படுகிறார்கள். அடுத்த கட்டத்தில் சுபாவத்தை மாற்றாமல் பலனிருக்காது. அந்த நேரம் அன்னை வேண்டாம் என்று கூறாதவரில்லை.

தம்பி - நிலைமை எக்கச்சக்கமாக தர்மசங்கடமாக வரும்பொழுது மனிதன் அன்னை வேண்டாம் என்பதைப் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் எப்படியும் போகமுடியாது. அதாவது அன்னையை ஏற்கவும் முடியாது. ஏற்காமலிருக்கவும் முடியாது.

அண்ணன் - நாம் அன்னையை மையமாக வைத்துப் பேசுவதால் அன்னை வேண்டாம் என்கிறார்கள். இதுதான் வாழ்வின் இரகஸ்யம். குடும்பம் பிளவுபடுவது இதனால்தான். கணவன் மனைவி சண்டை இதனால்தான். மனிதன் விரக்தியடைவதே இதனால்தான்.

தம்பி - நீங்கள் சொல்வது ‘எனக்கு ஆதாயம் மட்டும் வேண்டும்’ என்று ஆரம்பித்து கடமையைச் செய்ய வேண்டி வரும்பொழுது மனிதன் கசங்குவதைக் கூறுகிறீர்கள்.

அண்ணன் - இங்கு பாரத்தை அன்னைமேல் போட்டுப் பேசுகிறார்கள். தம் கடமையைத் தாம் ஏற்க மறுப்பவர் நிலையிது. வெளிநாட்டில் போய் எவ்வளவு நாள் வசதியாகத் தங்கினாலும், வயதாக ஆக தாய் நாட்டை உடல் நினைத்து ஏங்கும். அதுபோல் மனிதன் தான் விட்டு விலகி வந்த வாழ்வை நாடி ஏங்குகிறான். அன்னை மீது வெறுப்பு வருகிறது.

தம்பி - நம்மால் நியாயமாக வாழ முடியவில்லை. யாரையாவது குறை கூறுகிறோம். பக்தர்கள் ஒரு நேரம் அன்னையைக் குறை கூறுகிறார்கள். நாம் பிறரைச் சொல்லக்கூடாது. நம் வீடு அப்படித் தானேயிருக்கிறது. அன்னையிடம் வருமுன் நாம் எங்கிருந்தோம்? மாதம் 250/- செலவு செய்தோம். இன்று 25,000/- போதவில்லை, யாராவது நம் வீட்டில் இவையெல்லாம் அன்னையால் வந்தது என தானே ஏற்பார்களா? நம் வீட்டில் ஒருவர் கூட அதை ஏற்கமாட்டார்கள். மேலும் அன்னையை ஏற்காவிட்டால், உள்ளதும் போய்விடும் என்றால், ஏற்கமுடியாமல் திட்டுவார்கள். ஆரம்பத்தில் மனிதர்களைத் திட்டுவார்கள், முடிவில் அன்னையைத் திட்டுவார்கள்.

அண்ணன் - அன்னை இவற்றையெல்லாம் சொல்லியிருக்கிறார்களா?

தம்பி - நேரடியாகச் சொல்லவில்லை.

அண்ணன் - நேரடியாகவும் சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் எழுத்தில் - அச்சில் - இருக்கிறது. நாம் படிப்பதில்லை. படித்தால் அதைப் பொருட்படுத்துவதில்லை.

தம்பி - இனி முடியாது என்ற நேரமாவது அன்னையை நம்ப வேண்டும்.

அண்ணன் - அதைச் செய்தால் கஷ்டம் விலகும். முடியும் என்ற நேரம் அன்னையை நம்பினால் அதிர்ஷ்டம் வரும்.

தம்பி - யாருக்கும் அதிர்ஷ்டம் தேவையில்லை. அவர்களை மாறச் சொல்லக்கூடாது. அதுதான் முக்கியம். நாம் மாறிக் கொள்ளலாம். பிறருக்குச் சொல்லமுடியாது. மனிதன் தானுள்ள வாழ்வை ஆழ்ந்து அனுபவித்து ரசிக்கிறான். அதை விட்டு மாறி உயர்ந்ததை ஏற்க மனிதன் முன் வருவதில்லை. இறைவன் மனிதனைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதை விரும்பி அன்னையை நாடுபவர்கட்கு யோகத்தில் திருவுருமாற்றமும், வாழ்வில் அதிர்ஷ்டமும் உண்டு. ஏராளமான பேர் அன்னையை நாடி வந்து பல்வேறு பலன் பெற்றுள்ளனர். யோகத்திற்காக எவரும் அவரை நாடி வரவில்லை. வாழ்விலும் திருவுருமாற்றத்தை எவரும் நாடியதாக இதுவரை நான் கேள்விப்படவில்லை.

பணம் எப்படி உற்பத்தியாகிறது ?

தம்பி - பணம் என்பதைப் பற்றி மேலும் பேச விரும்புகிறேன். ஆதியிலிருந்து புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அண்ணன் - உழைப்பால் பணம் உற்பத்தியாகிறது. அதேபோல் ஒத்துழைப்பாலும், அறிவாலும் பணம் ஏற்படுகிறது.

தம்பி - அறிவால் உழைப்பு அதிகம் சம்பாதிக்கும் என்று கொள்ளலாம். ஒரு வீட்டில் அனைவரும் ஒத்துழைத்தால் சண்டை போடுவதைவிட அதிகம் சம்பாதிக்கலாம்.

அண்ணன் - இதுவரை புரிந்தால் போதும். ஆனால் உழைப்பு சம்பாதிப்பதைப்போல் அறிவு மட்டும் பணம் ஈட்டும். அதேபோல் ஒத்துழைப்பு மட்டும் பணம் சம்பாதிக்கும் என்பது சட்டம்.

தம்பி - அறிவு சம்பாதிக்கும் எனப் புரியும். ஒத்துழைப்பு மட்டும் எப்படிச் சம்பாதிக்க முடியும்?

அண்ணன் - நிலம் கரம்பாக இருக்கிறது. அண்ணன், தம்பி சண்டை போட்டுக் கொண்டு நிலத்தை கரம்பாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைப்பால் விளைச்சல் எழும். சட்டம் புரியாவிட்டாலும், ஏற்றுக் கொள்ள முடியுமா?

தம்பி - பலர் ஒத்துழைத்தால் பணம் எழும் எனத் தெரிகிறது. சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அண்ணன் - நிலத்தில் பணம் உற்பத்தியாகிறது. பாக்டரியில் பணம் வருகிறது. அதேபோல் நிலமும், பாக்டரியுமில்லாமல் service sectorஇல் டெய்லர், எலக்ட்ரீஷியன், ஆசிரியர், வக்கீல் போன்றவர் சேவையால் பணம் உற்பத்தியாகிறது. அடுத்த கட்டத்தில் மனத்தின் அறிவால், திறனால் பணம் உற்பத்தியாகும். அதற்கும் அடுத்தது ஆன்மா. ஆன்மாவால் எதையும் உற்பத்தி செய்ய முடியும். பணத்தை அதனால் ஏராளமாக உற்பத்தி செய்ய முடியும்.

 தம்பி - அறிவு, அதாவது மனம் தீவிரமாகச் செயல்பட்டால் நிலம் அதிக உற்பத்தி செய்யும், பாக்டரி அதிக உற்பத்தி செய்யும், சர்வீஸ் அதிகமாக உற்பத்தி செய்யும் என்பது சரி. மனம் மட்டுமே பணத்தை உற்பத்தி செய்யுமா?

தம்பி - இவையெல்லாம் எனக்குத் தெரியும். இந்தக் கோணத்தில் நான் சிந்தித்தில்லை. பாங்க் பணம் தரும்பொழுது மனிதனை நம்பித் தருவதில்லை. சொத்தை நம்பித் தருகிறது. சொத்தை மட்டும் நம்பும் பாங்க் மனிதனை மட்டும் நம்பி வற்புறுத்தி பணம் கொடுத்ததை நாமறிவோம். வட்டிக்குக் கொடுப்பவர்களும் சொத்தேயில்லாத நாணயஸ்தனுக்கு ஏராளமான பணம் கொடுத்ததை நாம் அறிவோம்.

பிறர் ஒருவன் நாணயத்தை நம்புவதால் பணம் உற்பத்தியாகிறது. நாமே நம் மனத்தின் infinite அளவுகடந்த சக்தியை நம்பினால், உலகில் எதையும் சாதிக்கலாம். அதைக் கருதும்பொழுது பணம் சிறியது. அதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யலாம் என்பதை நாம் பலர் வாழ்விலும் பார்க்கிறோம்.

அண்ணன் - அந்த உண்மையை மனம் ஏற்கவேண்டும். சூட்சுமம் அங்குள்ளது. வினோபா கொள்ளைக்காரனை போலீஸில் சரணடையச் சொன்னார். ஏது அவருக்கு அந்த சக்தி? அது அவருடைய மனத்திண்மை. ஆன்மீக சக்தி.

தம்பி - அன்பர்கள் அடாவடிக்காரன் பணிந்து போவதைக் காண்கிறார்கள்.அடாவடிக்காரனிடம் கொடுத்த 1000ரூபாய் திரும்பி வந்தால், அந்த அன்பரால் பல ஆயிரம் உற்பத்தி செய்ய முடியும். கேட்கும் பணம் வசூலாகாத நிலையில் கேளாமல் 1000ரூபாய், 10000ரூபாய், லட்ச ரூபாய் வருகிறது எனில் அந்த அன்பர் மனம் பல கோடிகளை உற்பத்தி செய்யவல்லது. அன்னை மனதில் குடி கொண்டிருந்தால், அம்மனம் ஏராளமாக எதையும் உற்பத்தி செய்யும். ஏராளமான பணத்தை உற்பத்தி செய்யும்.

அண்ணன் - இது இல்லாமல் நான் சொல்வது நடக்காது. இது இருந்தால் மேற்சொன்ன நிபந்தனைகள், முறைகள் செயல்படும்.

தம்பி - பணத்தை உற்பத்தி செய்யும் சூட்சுமம் இங்கிருந்தால், பணத்தை ஒடுக்கும் சூட்சுமம், நம் கெட்ட குணத்திலிருக்கிறது. பிறருக்கு வருவது பொறுக்கவில்லை என்றால், நமக்கு வருவது தடைபடும்.

அண்ணன் - சூட்சுமத்தின் நல்லதைப் பெறுவது கடினமன்று. சூட்சுமத்தின் கெட்ட பகுதியை விலக்குவது கடினம்.

தம்பி - நல்லவனுக்கு இது பலிக்கும். நல்லவனாக இருப்பது கடினம். நம் கெட்ட குணம் வெளிப்பட்டால், அன்னை வருவது தடையாகும். பணவரவு நிற்கும்.

அண்ணன் - மனிதனுக்கு இது கடுமையான நிபந்தனை. மாற முயல்பவன் மாறிவிடுவான். அன்பர்கள் பெரும் பணத்தை தங்கள் வாழ்வில் உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மை.

தம்பி - ஓஹோ, அதனால்தான் நமக்கு விவரம் தெரியாத நேரம் ஏராளமாகப் பணம் வருகிறது.

அண்ணன் - விவரம் தெரியாதபொழுது, நம் குணம் எழுந்து செயல்படுவதில்லை. விவரம்  தெரிந்தவுடன் பணம் நின்றுவிடுகிறது. இதையே யோக பாஷையில் சொல்ல வேண்டும்.

நாம் நாலு பேர் போலிருக்கிறோம் (We are a social being).

நாலு பேர் சாதாரண மனிதர்கள்.

சாதாரண மனிதனுக்கு, அனைவருக்கும் நடப்பது நடக்கும். சம்பளம் வரும்.

அவன் அன்னையை அறிகிறான், நம்புகிறான்.

ஆன்மீக, அருளின் சூழல் அவனுள் வருகிறது. விவரம் எதுவும் தெரியாததால் ஏராளமாகப் பணம் வருகிறது. ஆயிரம் நல்லவை நடக்கின்றன.

 • இதை மனிதன் கவனிக்கிறான். அவன் மனம் பட்டவுடன் நல்லது நின்றுவிடுகிறது.

நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்தானே எனில், அவனுக்குள்ளது நடக்கிறது.

அன்னையை அறிந்தவன் சாதாரண மனிதனில்லை. அவன் உயர்ந்தவன்.

தான் உயர்ந்தவன் எனத் தெரிந்ததும், அவன் உயர்வைக் காப்பாற்றலாம்.

அல்லது மற்றவர்கள் போலிருக்கலாம்.

உயர்வைக் காப்பாற்ற தான் அறிந்த உயர்வைக் கருதி நாலு பேர் போலிருக்கக்கூடாது என முடிவு செய்யவேண்டும் (cease to be a social being and become a psychological being).

இதைச் செய்பவன் அன்னை அன்பன். அவனுடைய பண வரவு வளர ஆரம்பித்தால் நிற்காது.

நாலு பேர்போல் இருக்க விரும்புபவனை நாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.

சமூகம் நம்பாததை, பின்பற்றாததை, நல்லது என அறிவதால், அன்னைக்குரியது என அறிவதால் பின்பற்ற, ஏற்று நடக்க மனம் உறுதி பெற வேண்டும்.

அப்படி முக்கியமாக மனிதன் விட வேண்டியவை,

- சிறுதெய்வ வழிபாடு, சடங்குகள்,

- விசேஷங்களில் ஆர்வம்,

- சின்ன புத்தி, மட்டமான குணங்கள்.

அப்படி முக்கியமாக மனிதன் ஏற்க வேண்டியவை,

- பிறர் வாழ்வு மலர்வதில் மனம் மலர வேண்டும்.

- பொய் சொல்லக்கூடாது.

- பரந்த மனப்பான்மை வேண்டும். அடக்கம் அதிகமாக தேவை.

இந்த லட்சணத்துடன் ஓர் அன்பர் இருந்தால் அவர் செய்வன அனைத்தும் பலிக்கும். அவருக்கும் பணம், அருள், ஏராளமாகப் பெருகும்.

இந்த அடிப்படைகளிலிருந்தால் பணத்தின் வரலாறு தெரியுமானால் அது பெருகும். பெருகிக் கொண்டேயிருக்கும்.

பணத்தின் வரலாறு தெரியுமுன் பணம் குவியும்.

பணத்தின் வரலாற்றை எந்த பொருளாதார புத்தகத்திலும் படித்துக் கொள்ளலாம்.

இம்முறையால் நிம்மதி, சந்தோஷம், வெற்றி ஆகியவற்றைப் பெருவாரியாகப் பெறலாம்.

 

தொடரும்...

 

****

 

 

 

அண்ணன் - நிலம் மட்டுமே பணத்தை உற்பத்தி செய்வதைப்போல் மனம் மட்டும் பணம் உற்பத்தி செய்யும் திறனுடையது. அதை ஏற்பது நல்லது. அது முடியாவிட்டால், மனத்தின் அறிவு பணம் உற்பத்தியாகுமிடத்தில் அதிகம் உற்பத்தி செய்ய உதவும் என ஏற்றாலும் போதும்.

தம்பி - நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் சற்று விளக்கமாகச் சொன்னால் தேவலை.

அண்ணன் - பணம் என்பது நம்பிக்கையால் எழுவது. நம்பிக்கை பணம்.

தம்பி - சரி.

அண்ணன் - மார்க்கெட்டுக்குக் கம்பனி மீது நம்பிக்கையிருந்தால் கம்பனிக்கு மேலும் பணம் வருகிறது.

தம்பி - கம்பனியும், மார்க்கெட்டும் இல்லாமலே பணம் வரும் என்று கூறுகிறீர்களே.

அண்ணன் - எல்லாக் கோவில் ஸ்தல புராணங்களிலும் வில்வமரத்து இலையைப் பவுனாகப் பறித்தார்கள் என்பதுண்டு. சாமியார்கள் கையை நீட்டினால் லிங்கம் வருகிறது. அதுபோல் பணமும் வரும். அவற்றையெல்லாம் நான் கூறவில்லை.

தம்பி - அதை விடுங்கள். உலகத்தை மனம் உற்பத்தி செய்தது. ஆதியில் பணத்தை மனம் உற்பத்தி செய்தது. அதனால் இன்று மனத்தால் பணம் உற்பத்தி செய்ய முடியும் என நம்பலாம். ஒரு கருவி இடையேயில்லாமல் எப்படி உற்பத்தி செய்வது?

அண்ணன் - கருவி மூலம் மனம் - அறிவு - அதிகமாகப் பணம் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆரம்பிப்போம். தவணை முறை வந்த பிறகு பணம் பெருகியது.

தம்பி - 10 மடங்கு பெருகியது. கடன், அடைமானம் இல்லையென்றால் பணம் சுருங்கும்.

அண்ணன் - தவணை முறை, கடன், ஈடு, கைமாற்று இல்லையென்றால் குடும்பம் நடக்காது. 1/100 பாகம் கூடப் பணப்புழக்கமிருக்காது. அதாவது கடன், தவணை, அடைமானம் பணத்தை 100 மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

தம்பி - அது சரி. இதை ஏற்றுக் கொள்ளலாம்.

அண்ணன் - மேலும் பணம் உற்பத்தி செய்யும் சாதனங்கள் நம்மிடம் இன்றுள்ளதைப்போல் 1000 மடங்குள்ளது என்பதை உலகம் அறியாது. மேல் நாடுகளில் பணம் நகரும் வேகம் 3 என்றால் இந்தியாவில் என்கிறார்கள். கம்ப்யூட்டர் வந்த பின் 3 மேலும் அதிகரித்துவிட்டது. இந்தியாவில் இன்றுள்ள பணம் மேல் நாட்டு வேகத்தில் நடமாடினால், இருமடங்காகும் அன்றோ?

தம்பி -ஆமாம், ஆச்சரியமாக இருக்கிறதே. நம்ப முடியவில்லையே. யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே, வியாபாரிக்கு முதல் 6 மாதம் ஒரு முறை புரண்டு வருவது 3 மாதம் ஒரு முறை புரண்டால் இலாபம் 2 மடங்கு என்றாகுமன்றோ?

அண்ணன் - இதுபோல் பணத்தை அதிகரிக்க 10 முதல் 20 வழிகள் உண்டு. நாம் மேல் நாட்டார் பழக்கத்தில் எதை எதைப் பின்பற்ற முடியுமோ அவற்றையெல்லாம் பின்பற்றினால் மட்டும் நம் பணம் 3 or 5 மடங்கு அதிகரிக்கும்.

தம்பி - புதியதாகப் பணம் உற்பத்தியாகுமா? உள்ளது அதிகமாகப் பயன்படுமா?

அண்ணன் - உள்ளது 5 மடங்கு பயன்படும். இரண்டும் ஒன்றுதானே?

தம்பி - குடும்பத்தில் உதாரணம் சொன்னால் புரியும்.

அண்ணன் - அது முடியாது. தவணை முறையால் அதிகப் பொருளை வாங்குவதைத்தான் சொல்ல முடியும். மாதம் 5000ரூபாய் மளிகை, ஷாப் சாமான் வாங்கும் குடும்பம் 1. விரயத்தை விலக்கி 2. இருப்பதையே வாங்குவதைத் தவிர்த்து 3. தேவையில்லாததை வாங்குவதை விலக்கி, திட்டமிட்டுச் செலவு செய்தால் நாளாவட்டத்தில் 5000 குறைந்து 4500 ஆகவும், 4000மாகவும் ஆவதைக் காணலாம். அதாவது 500 அல்லது 1000 ரூபாயை உற்பத்தி’ செய்ததாகும். இதன் விளைவாகப் புதிய பணவரவு ஏற்படும். குடும்பம் சிறிய இடம். அதன் மூலம் பணம் உற்பத்தி செய்வதை விளக்குவது கடினம்.

தம்பி - புதியதாகப் பணம் எப்படி உற்பத்தியாகும் என்று சொல்ல முடியுமா?

அண்ணன் - மனத்தின் திறனை 5 or 10 மடங்கு அதிகப்படுத்த முடியுமன்றோ? அப்படிச் செய்தால் 5 or10 மடங்கு உற்பத்தி செய்யும் திறனை மனம் பெறுமன்றோ?

தம்பி - அது சரி. உத்தியோகம் செய்பவனுக்கு யாரும் 5 அல்லது 10 மடங்கு சம்பளம் தரப்போவதில்லை.

அண்ணன் - மனத்தின் திறன் எவ்ளவு உயர்கிறதோ அதற்குரிய வாய்ப்பை அன்னை கொடுத்துவிடுவார். அன்னையைப் போல சமூகமும் கொடுக்கவல்லது. தன் திறன் உயர்ந்தால் மனமே நேரே பெறவல்லது.

தம்பி - 100 மடங்கு, 1000 மடங்கு போகட்டும். மனத்தின் திறமையை 10 மடங்கு உயர்த்தலாம். அது வருமானத்தை 10 மடங்கு உயர்த்தும். 10 மடங்கு மனம் உயர்ந்தால் அன்னை அதைப்போல 10 மடங்கு பலன் தருவார். பணம் ஈட்டும் திறனை 10 மடங்கு அல்லது 50 மடங்கு உயர்த்த வழி சொல்லுங்கள்.

அண்ணன் - உலகில் சாதித்தது அனைத்தும் மனமே. புத்தர் உலகை வென்றது மனத்தின் திறத்தால்.

1. பணம் பெருகும் வழிகளை அனைத்தும் அறிய வேண்டும்.

2. அவற்றைப் பூரணமாகப் பின்பற்ற வேண்டும்.

3. அன்னையை நம்ப வேண்டும்.

4. மனம் தூய்மையாக இருக்க வேண்டும். இதுவரை செய்தால் 100 மடங்கு பெருகும். 10 மடங்கு நிச்சயம்.

பெரும் பணம்

தம்பி - பணம் பெருகும் வழிகளைச் சொல்லுங்கள்.

அண்ணன் - 5000ரூபாய் கடைச் சாமான்கள் வாங்கும் வீட்டில் திட்டமிட்டு அதை 4000மாக மாற்ற வேண்டும். அது முடியாது என்றால் அக்கறையில்லை எனப் பொருள். அவர்களுக்கு இது பலிக்காது. நாம் கொடுக்க வேண்டியதை உடனே கொடுத்துவிட வேண்டும். பணத்திற்குக் கவனம் தேவை. எல்லாக் காரியங்களையும் பண நோக்கத்தில் கணக்கிட வேண்டும். இவையெல்லாம் சாதாரண நல்ல முறைகள். பணவரவு இரட்டிக்க உதவும். அது நம்பிக்கையை வளர்க்கும். உண்மையான சக்தி மனத்திலிருக்கிறது. Mind is infinite.மனம் அனந்தமானது, அளவுகடந்து சாதிக்கவல்லது. உலகத்தில் நடந்த அற்புதங்களெல்லாம் மனம் சாதித்தவை. பெரிய மதங்கள், சாம்ராஜ்யங்கள், விஞ்ஞானக் கருத்துகள் அனைத்தும் மனத்தில் உற்பத்தியானவை. பணத்தை ஆதியில் உற்பத்தி செய்ததும் மனமே. மனத்தின் அளவுகடந்த சக்தியை நம்புவதில் நான் சொல்லும் சூட்சுமம் உண்டு.

அவர் ஆன்மா ஜீவனிலிருந்து பிரிந்து ஆண்டவனை அடைகிறது.

உலகுக்கு அவர் ஓர் உதாரணம்.

அதற்கு மேல் கூற பலன் எதுவுமில்லை. அதே சமயம் பூரணயோகி மோட்சத் தகுதி பெற்றால் அவர் அகந்தை அழியும். உள்ளே செல்வார். உலகத்துடன் தொடர்பு கொள்வார். அவருடன் தொடர்பு கொள்பவரெல்லாம் அவர் பெற்றதைப் பெற முடியும். மேலும் அவர் வாழ்விலிருந்தால், அவர் செய்யும் காரியங்கள் உலகில் பரவும். வேலையில்லாதவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், அவன் போன்ற பலருக்கும் - அநேகமாக அனைவருக்கும் - வேலை தானே கிடைக்கும். உலகம் தானே அவர் மாறுவது போல் மாறும்.

விழிப்புற்ற ஆன்மா இனி உலகிலிருக்க சட்டமில்லை என்பது மரபு.

விழிப்புற்ற ஆன்மா உலகுக்கு வந்து மனத்திலும், உணர்விலும், உடலிலும் சேவை செய்யும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

தம்பி - நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பது அதுதானோ?

அண்ணன் - இதுவரை அது சொல்லாகவே இருந்தது, ஸ்ரீ அரவிந்தம் அதைச் செயல்படுத்தியது. யோகம் எனில் ஆன்மா ஆண்டவனை அடைவது. ஆண்டவனிடமிருந்து ஆன்மா எதுவும் பெறுவதில்லை. அது பெறுவது விடுதலை.

தம்பி - என்ன பெற முடியும்?

அண்ணன் - ஆன்மாவின் 12 அம்சங்களையும் உயர்ந்த நிலையில் பெறலாம். ஆன்மாவின் மௌனம் பெரியது. அதே மௌனம் ஆண்டவனின் மௌனமானால் முடிவானதன்றோ?

மரபில் ஆன்மா ஆண்டவனிடமிருந்து அதுபோல் எதையும் பெறுவதாகத் தெரியவில்லை.

அன்னை ஆன்மா அதுபோல் ஆண்டவனிடமிருந்து அனைத்தையும் பெறுகிறது.

அது ஆன்மாவுடன் நிற்கவில்லை.

மனத்திற்கும் வருகிறது. உடல்வரைக்கும் வருகிறது.

இதற்கடுத்த நிலையை அன்னை விவரிப்பது அற்புதங்களின் சிகரம்.

        நாம் பெறும் பரிசுகள், விருதுகள், பட்டங்கள் ஸ்தாபனங்கள் மூலமாக, நம் அந்தஸ்திற்காக, நம் செல்வம் அல்லது செல்வாக்கு அல்லது படிப்புக்காகப் பெறுகிறோம். இவையின்றி பெறுவது இயலாத காரியம். இராதாகிருஷ்ணன் தாம் பெற்ற படிப்புக்காக ஜனாதிபதி ஆனார். அதே இராதாகிருஷ்ணனுக்கு அதே அறிவிருந்தாலும், அப்பட்டங்களில்லாவிட்டால் ஜனாதிபதி பதவி வந்திருக்காது. எவரும் அவரைக் கண்டு கொள்ளப்போவதில்லை. அவர் பெற்றதைப் பட்டம் மூலம் பெற்றார். பெர்னாட்ஷா பெற்ற நோபெல் பரிசு பட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டதில்லை. அறிவுக்காகக் கொடுக்கப்பட்டது. அது உயர்வு.

       அன்னையின் உடல் இறைவனிடமிருந்து ஆன்மா மூலம், சைத்தியப் புருஷன் மூலம் பெற ஆரம்பித்தது, முடிவில் நேரடியாகவே பெற்றது என்கிறார் அன்னை. இது யோக மரபில் இல்லாத சித்தி. யோக மரபில் எந்தக் கரணமும் எதையும் பெறுவதில்லை. அன்னை பெறுகிறார். இடையே ஆன்மாவுமில்லாமல் நேரடியாகப் பெறுகிறார்.

தம்பி - அன்னை விஷயம் பெரியது. நமக்குப் புரியாது.

அண்ணன் - மாணவன் புத்தகத்திலுள்ள அறிவை ஆசிரியர் மூலம் பெறுகிறான். அடுத்த நிலையில் நேரே புத்தகத்திலிருந்து பெறுகிறான். புத்தகமும் இல்லாமல் நேரே பெற முடிந்தால் அவன் மேதையாகிறான். சாவித்திரி ஆங்கிலப் பேராசிரியர்கட்குப் புரிவதில்லை. சரியாக ஆங்கிலம் தெரியாத பெண் பிரார்த்தனை செய்தபின் படித்தால் புரிகிறது என்றார். இவரால் படிக்கவே முடியாது. பல பக்கங்கள் படித்தார். புரிந்தது. இது படிப்பேயில்லாதவனுக்கு ஞானம் நேரடியாக வருவது.

தம்பி - இதுபோன்று ஏராளமானவை பக்தர்கட்கு நடக்கின்றனவே. நாம் அதை அருள் எனப் பொதுவாக அறிகிறோம். என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்வதில்லை. அன்னை இறைவனிடமிருந்து நேராகப் பெற்றால், நாம் அன்னையிடமிருந்து நேராகப் பெறுகிறோம். இந்த விளக்கமும் போதாது.

அண்ணன் - விளக்கம் எப்பொழுதும் போதாது. பக்குவம் வந்தால் பிறகு போதும். இந்தியருடலில் ஒளியிருக்கிறது என்று அன்னை கூறுவதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்.

தம்பி - ஒளியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம்.

அண்ணன் - நாட்டில் ஏராளமான மேதைகள் ஒளிந்திருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தம்பி - இந்தியாவிலா? சீனுவாச இராமானுஜம் போலவா?

அண்ணன் - அவர் எப்படி வந்தார்? அதன் ஆரம்பம் என்ன? அது போல் மேல்நாட்டில் மேதைகள் - கணிதம், விஞ்ஞானம் போன்றவற்றில் - பிறந்திருக்கின்றனரா? ரெய்மன் என்ற ஜெர்மானிய கணித நிபுணர் அவர் போன்றவர். ஜெர்மனி தத்துவம் பிறந்த நாடு. இந்தியா ஆன்மீகம் பிறந்த நாடு. ஒளி உடலிலிருக்கிறது எனில், ஆன்மீகம் மனத்துள் மேதைமையாக மக்களிடையே ஒளிந்துள்ளது எனப் பொருள்.book | by Dr. Radut