Skip to Content

11.சாவித்ரி

 “சாவித்ரி”

P. 19. At the unseen's knock upon her hidden gates

           மறைபொருளான கதவில் கண்ணுக்குத் தெரியாமல் தட்டுவது

       உலகில் ஒரு சிறு வேதனையுமில்லை. ஒரு க்ஷணம் கூட மனிதன் துன்பம் அனுபவிக்கத் தேவையில்லை என்ற ஸ்ரீ அரவிந்தம், அத்துன்பங்கள் உற்பத்தியான வகையை விளக்கி, அதிலிருந்து சாவித்ரி உலகைக் காப்பாற்றும் முறையை மனிதனுக்குரிய சொல்,தெய்வத்திற்குரிய மந்திரம், யோகிக்குரிய தந்திரம், கவிக்குரிய உருவகம், திருஷ்டியுள்ளவர் காணும் அற்புதம், எதுவும் அறியாதவர்க்குரிய குருட்டுப் பார்வை ஆகிய பல வழிகளில் செய்யுளாக வகுத்தது சாவித்ரி. அவற்றுள் உள்ள சில சொற்றொடர்களைக் கீழேயும், முதன்மையானதைத் தலைப்பாகவும் இங்குக் காண்கிறோம்.                                                 

        வலியிலிருந்து விடுபட மனிதனுக்குக் கதவுண்டு.

        கதவைத் தட்டி எழுப்பும் அருள் உண்டு.

        கதவு மறைந்துள்ளது.

        தட்டும் குரல் காதுக்கோ, கண்ணுக்கோப் புலப்படாது.

       புலனுக்குப் புலப்படாதது, தேடும் மனிதனுக்குத் தென்படும் என்ற சட்டம் வாழ்வுக்கும், யோகத்திற்கும் உண்டு என்று தெரிவிக்கும் வரி முதலில் கூறியது.
 

இறவாத இலட்சியங்களை மரணத்தில் தேடுபவள்.

உலகத்தை வாழ்வில் நிர்ணயிப்பவள்.

அவள் பேச வேண்டிய சொல், செய்ய வேண்டிய செயலுண்டு.

வலி போக வேண்டும் எனும் வலிமையற்ற மனித இதயமன்று.

இறைவனின் ஊற்றுகளை இதமாக இதயத்தில் கண்டவள்.

ஜோதிமயமான புத்தகத்தை மூட சம்மதிக்காதவள்.

பிரபஞ்ச சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்ற தனி மனுஷி.

மின்னல் தாக்கினால் மிளிர்ந்த வலிமை.

இருளின் தேவதைகளை மறுப்பின்றி ஏற்பவர்.

கடந்த காலச் சட்டத்தைப் பணிந்து ஏற்கும் பாங்கு.

மனம் மகிழ்ந்து பணிகிறது.

விதியின் வேதனைக்கு திறந்து காட்டிய நெஞ்சம்.

காலத்தின் கதிக்கும் வணங்காத முடி.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சரணாகதியே பகவான் கண்டுபிடித்த பெரிய சூட்சுமம்.

சிருஷ்டியிலும், மனித வாழ்விலும் தன்னையே முதன்மையாகக் கருதுவதே வழக்கம். இயலாமை வந்த பின் மனிதன் சரணடைகிறான். குழவிப் பருவத்திலும், தன் வலிமையை இழந்த நேரத்திலும் தவிர மனிதன் தன்னையே முதன்மையாகக் கருதுகிறான்.

சரணாகதி சர்வேஸ்வரனுடைய சூட்சுமம்.

 

 

 



book | by Dr. Radut