Skip to Content

10.வாழ்வின் மறுமொழி

 Life response

அவன் குறையுள்ளவன்”

       வருஷத்தில் கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஹாலிவுட் டைரக்டர் கருமி. தம்முடன் சாப்பிட ஒரு சிறுவனை ஒரு நாள் அழைத்திருந்தார். அவன் சாப்பிட ஆரம்பிக்கு முன். “நிறைய சாப்பிடாதே”. நான் அதிக பில் கொடுக்க வேண்டி வரும் என்றார்! கருமியின் விருந்துபசாரம் இது.

       40 வயதில் மனைவி அவரை விட்டுப் போய்விட்டாள். சில வருஷங்கள் கழித்து குழந்தைகள் படிப்பை முடித்துவிட்டு அவரை விட்டுப் போய்விட்டனர். தம் 40ஆம் வயதில் அன்னையை அறிந்தார். கடந்த 15, 17 வருஷங்களாக ஆண்டுக்கு ஒரு முறை ஆசிரமம் வந்து தங்குவார். தாம் சம்பாதித்த பணத்தை எல்லாம் தாம் இப்பொழுது எடுக்க முடியாத நிதியில் போட்டுவிட்டு, கடந்த 10 வருஷமாக வேலையை விட்டுவிட்டு, புதிய பெண்களுடன் - 2 வருஷத்திற்கு ஒருவராக - வாழ்ந்து வருகிறார். பெருஞ்செல்வம் நிதியிலுள்ளது. அவர் 15 ஆண்டுகளாக ஆசிரமம் வருவதில் அவர் பெற்றதாக அறிபவை பல,

1. அவர் படித்த அமெரிக்க M.A. பட்டத்தில் அறியாத வாழ்வு ஞானம் Life Knowledge

2. இப்பொழுது ஹடயோக ஆசனங்கள் பயில்கிறார்.

3. எந்த வருமானமுமில்லாதபொழுது கவலையில்லாமல் வாழ்க்கை நடக்கிறது.

4. சேமிப்பு நிதியில் அவர் முதலீடு செய்த பணம் அவர் கற்பனையின் உச்சம் எதிர்பார்த்ததை விட இரு மடங்கு பெருகியது.

5. தகப்பனாருக்குப் பின் வர வேண்டிய தகப்பனார் சேமிப்பிலிருந்து ஒரு பகுதி இப்பொழுதே வந்தது.

       இவர் ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக் கொண்டவர். ஆனால் ஹடயோக ஆசனம் செய்கிறார்! அமெரிக்காவில் எந்த ஊரிலும் புதியதாக religious movement யோக சம்பந்தமான சிறு கூட்டங்களுண்டு. அதுபோல் பல ஆயிரம் உண்டு. அங்கு சில நூறு பேர் சேர்வார்கள். ஆரம்பித்தவர் தலைவராக இருப்பார். அந்தத் தலைமைப் பதவி, சில நூறு பேர் தம்மைத் தலைவராக குருவாக ஏற்பது பிறவியில் தலைவராகப் பிறந்தவர்க்கேயுண்டு. அதுபோன்ற ஒரு கூட்டத்தில் சேர்ந்தார். அன்னையிடமிருந்து தாம் பெற்ற ஞானம் பெரிதெனினும், அதை நடைமுறைப்படுத்தும் திறமை இவருக்கில்லை. கூட்டத் தலைவர் அது போன்ற கருத்துகளை கவனமாகக் கேட்பார். சிலவற்றை ஏற்பார். அதனால் அன்பருக்கு நிலை உயர்ந்தது. அத்துடன் ஆசையும் வளர்ந்தது. சொல்ல வெட்கம். தலைவர் உடல் நலம் குன்றுவதால், அவருக்குப் பின் தாமே தலைவராக வரவேண்டுமென்று ஆசை. இவருக்குப் பின் போட்டி பலமாக இருக்கும். அவருடன் நெடுநாளாக இருந்த பலர் விரும்பும் நிலை அது. இவர் சமீபத்தில் வந்தவர்.

       இந்த ஆண்டு சமாதிக்கு வந்தபொழுது 7 நாள் தினமும் 1 மணி நேரம் அந்த ஆசையைச் சமர்ப்பணம் செய்தார். முழுவதும் விலகியதாக உணர்ந்தார். திரும்பிப் போனார். ஒரு பெண் இவரை அணுகி, “தலைவருடன் பேசினேன். உங்களைச் சுற்றி ஒரு கறுப்புள்ளது என்றார்” என்று கூறினார். தாம் விலகியதாக நினைத்தது இன்னும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டார். மீண்டும் சமர்ப்பணத்தைத் தொடங்கினார். மனப்பாரம் குறைந்தது. ஒரு நாள் பாரம் விலகியது. தலைவர் உடல் நலம் மிகவும் குன்றிய நிலையில் இவருக்கு அழைப்பு வந்தது

       எனக்குப் பின் நீயே தலைவன். உன்னை நானே     நியமிக்கிறேன். இப்பொழுதே தலைமையை ஏற்று இயக்கத்தை நடத்து என்ற வேண்டுகோளை விடுத்தார்.

 

****

 

 



book | by Dr. Radut