Skip to Content

10. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

கர்மயோகி

The Life Divine

நூல் இரு பாகங்களாலானது.

முதற்பாகம் - சிருஷ்டி - 28 அத்தியாயம் (பரம்பொருள் பிரபஞ்சமாயிற்று).

இரண்டாம் பாகம் - பரிணாமம் - 28 அத்தியாயம் (அஞ்ஞானம் ஞானமாவது).

இதை இருபகுதிகளாகப் பிரித்துள்ளார்.

முதற்பகுதி - அனந்த ஜீவியம் உலகமாகும் 14 அத்தியாயம்.
இரண்டாம் பகுதி - ஞானம் பரிணாமத்தால் ஆன்மாவாவது 14 அத்தியாயம்.

நூலின் சுருக்கத்தை முதல் அத்தியாயத்திற்கு முன்பக்கத்திலும், இரண்டாம் புத்தகத்திற்கு முன் இரு பக்கங்களிலும் இரண்டாம் பகுதியின் 15 அத்தியாயத்திற்கு முன்பக்கத்திலும் எழுதுகிறார். அது,

பரம்பொருள் பிரபஞ்சமாயிற்று.
ஞானம் அஞ்ஞானத்திலிருந்து பரிணாமத்தால் எழுகிறது.
அனந்த ஜீவியம் உலகமாகியது.
ஞானத்திலிருந்து பரிணாமத்தால் ஆன்மா உருவாகிறது.

நூலின் முதற்பாகம்

பரம்பொருள் உலகமாக மாறியது.
பரம்பொருள் உலகை சிருஷ்டித்தாரெனில் உலகம் கடவுளினின்று பிரிந்து விடுகிறது.
ரிஷிகள் சத்திய ஜீவியத்தைக் காணாததற்கு இதுவே காரணம்.
பகவான் இதை மாற்றி பரம்பொருளே உலகமாயிற்று (மனிதனாயிற்று) என்பதால் மனிதனுக்கும் பரம்பொருளுக்கும் இடைவெளியில்லை என்கிறார்.

முதல் 28 அத்தியாயங்களையும் ஒவ்வொன்றையும் ஒரு வரியில் கீழே எழுதுகிறேன்.

  1. இறைவனை ஜோதி, சுதந்திரம், மரணமில்லா வாழ்வாக அடைய மனிதன் முனைகிறான்.
  2. ஜடம் ஆன்மாவுக்கு ஆடை என உபநிஷதம் கூறுகிறது.
  3. சன்னியாசி பிரம்மத்தின் வாயிலில் காலத்தைக் கடந்த பிரம்மத்தை அசைவற்ற, அமைதியான, சிதைவற்றதாகக் காண்கிறான்.
  4. உலகிலுள்ள அனைத்தும் பரம்பொருளே.
  5. சிருஷ்டி இழந்த ஒற்றுமையை மனிதன் மீண்டும் பெற பாதாளத்தையும் பரமாத்மாவையும் இணைப்பதே மனிதனுக்கு ஆன்மிகக் கடமை.
  6. மனிதனுக்கு மூன்று ஜீவிய நிலைகள் 1) மனிதன் 2) பிரபஞ்சம் 3) காலத்தைக் கடந்த பிரம்ம நிலை.
  7. அகந்தை எதிரெதிரான இரட்டைகளை (ஜோதி து இருள்) உற்பத்தி செய்கிறது.
  8. வேதாந்தம் 4 சூத்திரங்களாக பிரம்மத்தை வர்ணிக்கிறது.
  9. சத் புருஷன் ஜீவனும், ஜீவியமுமாகும்.
  10. சித் சக்தி; சக்தி ஜீவனுடையது.
  11. சச்சிதானந்தம் பொருட்களில் ஆனந்தத்தை வெளியிடுகிறது.
  12. ஆடுபவனும் அவனே. ஆட்டமும் அவனே. அரங்கமும் அவனே.
  13. மாயை எல்லாம் எல்லாமுமான பிரம்மத்தை பலவாக்கி ஒன்றினுள் அனைத்தும், அனைத்துள் ஒன்றுமாக (all is in each, each is in all) சிருஷ்டித்தது.
  14. சச்சிதானந்தத்திற்கும் மனத்திற்கும் இடையே சத்திய ஜீவியம் உள்ளது. இதுவே உலகைப் படைத்தது.
  15. சத்திய ஜீவியம் காலம், இடத்தை சிருஷ்டித்தது.
  16. சத்திய ஜீவியத்திற்குள்ள மூன்று நிலைகள், இறைவன் - ஜீவாத்மா - அகந்தை
  17. தெய்வீக ஆன்மா -- இதற்கு மூன்று சத்திய ஜீவிய நிலைகள் உள்ளன.
  18. சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரிந்த பொழுது இடையில் மனம் உண்டாயிற்று.
  19. மனம் வாழ்வை சிருஷ்டித்தது.
  20. வாழ்வு: மரணம் வாழ்வுக்கு நித்தியதத்துவம் அளிக்கிறது.
  21. ஆசை அன்பாகி ஆனந்தமாகிறது.
  22. சக்தியும் ஜீவியமும் பிரிந்தவை இணைய வேண்டும்
  23. சைத்திய புருஷனே நம் உண்மையான ஆத்மா.
    அகந்தையில்லை.
  24. ஜடம் - ஜடம் ஆனந்தமயமான ஜீவன்.
  25. ஜடம் என்று உலகில் இல்லை. மனிதன் ஏற்பதால் ஏற்பட்டது.
  26. சிருஷ்டியில் எட்டு தத்துவங்கள். ஒரு சமயம் ஒரு தத்துவம் மட்டும் செயல்படும்.
  27. சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம். ஜடம், வாழ்வு, சைத்திய புருஷன், மனமாக மாறின.
  28. சத்திய ஜீவியத்தை அடைய கீழே போய் அடி மனம் சேர்ந்து எழுந்து உயர்ந்து மேலே போக வேண்டும்.

இரண்டாம் புத்தகம்

(ஒரு வரியில் அத்தியாயக் கருத்து)

Book II Part I

அத்தியாயம்

  1. நாம் காணும் விபரமற்ற பொருட்கள் பிரபஞ்சத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.
    அதன் மூலம் பிரம்மம் - நிர்ணயத்தைக் கடந்தது.
  2. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா என்பவை மூன்று தனித்தனியானவையல்ல. மூன்றும் ஒன்றே.
  3. ஜீவாத்மாவே பரமாத்மா.
  4. தெய்வீகம், அதற்கெதிரானவை என காண்பவை அனைத்தும் தெய்வீக உருவமுடையனவே.
  5. பிரபஞ்சம் மாயை என்பது உண்மையல்ல. பாம்பும் பழுதும் இல்லாதவையல்ல.
  6. சத்தியமும் பிரபஞ்ச மாயையும் - மாயை என நாம் அறிவது அஞ்ஞானம்.
  7. ஞானம், அஞ்ஞானம் இருவேறு அல்ல. ஞானமே தன்னை அஞ்ஞானமானதாக மாற்றியமைத்துக் கொண்டுள்ளது.
  8. அறியாமை சுயஜீவியத்தில் சுய அனுபவம் பெற்றால்,
  9. அகந்தையாகிறது.
  10. ஞானம் நால்வகை.
    • நேரடியான ஐக்கியமான ஞானம்
    • நெருக்கமான நேரடி ஞானம்
    • பிரிந்தும் நேரடியான அடிமன ஞானம்
    • பிரிந்த நிலை மேல் மன ஞானம்
  11. எழுவகை அஞ்ஞானம்.
    • ஆதியின் அஞ்ஞானம்
    • பிரபஞ்ச அஞ்ஞானம்
    • அகந்தையின் அஞ்ஞானம்
    • காலத்தின் அஞ்ஞானம்
    • ஜீவனின் அஞ்ஞானம்
    • அமைப்பின் அஞ்ஞானம்
    • நடைமுறை அஞ்ஞானம்
  12. அஞ்ஞானத்தின் ஆதி - மனம் சத்திய ஜீவியத் தொடர்பை இழந்தால், அஞ்ஞானம் உற்பத்தியாகிறது.
  13. உயர்ந்த நிஷ்டை - அஞ்ஞானம் ஞானத்தைவிடப் பெரியது.
  14. வேறுபட்டது நாளடைவில் இருண்டு தீமையாகிறது.

    Part 2

  15. பரமாத்மாவோ, ஜீவாத்மாவோ முடிவல்ல - இரண்டையும் தன்னுட்கொண்ட பிரம்மமே முடிவு.
  16. முடிவான பிரம்மம் முதன்மையான வாழ்வில் தன்னை வெளிப்படுத்துவது அவசியம்.
  17. பாதாளமும் பரமாத்மாவும் மனிதனில் இணைகின்றன.
  18. இணைந்தவை எழுந்து உயர்ந்து திருவுருமாறி, பிரம்மத்துடன் ஐக்கியமாகின்றன.
  19. எழுவகை அஞ்ஞானம் திருவுருமாற்றத்தால் எழுவகை ஞானமாகிறது.
  20. வாழ்வின் முதல் இரகஸ்யம் பிறப்பு, இரண்டாம் இரகஸ்யம் மரணம்.
  21. மரணத்தால் பிரிந்த உயிர் மறுபிறப்புவரை சூட்சும உலகில் தங்கும்.
  22. பிறப்பைக் கடந்து, சிருஷ்டியைக் கடந்த நிலையில் பிரம்மத்தை அறிபவன் ஆத்மாவுக்கு மரணமில்லை.
  23. ஆத்மா, மனம், வாழ்வு திருவுருமாறும் பொழுது உடலும் உடன் போதுமான அளவு திருவுருமாறினால் மரணமும், மறுபிறப்பும் தவிர்க்கப்படும்.
  24. தன்னுயிரில் திருவுருமாறிய ஆத்மா பிரபஞ்சம் முழுவதும் வியாபித்தால் அவனால் அடுத்த ஆத்மாவுக்கு ஆன்மிக உதவி செய்ய முடியும்.
  25. அதைச் செய்ய மூன்று திருவுருமாற்றம் தேவை: அவை 1) சைத்திய திருவுருமாற்றம், 2) ஆன்மிகத் திருவுருமாற்றம் 3) சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்.
  26. மனிதன் சத்தியஜீவியத்தையடைய கீழே போய் அடிமனத்திலிருந்து உயர்ந்து செல்ல வேண்டும்.
  27. சத்திய ஜீவன் நாடுவது எதுவுமில்லை - இருப்பதே இலட்சியம்.
  28. மனிதன் மனமில்லை, சத்திய ஜீவியம் என்று புரிந்து அதை சித்திப்பதே யோகம்.

(தொடரும்)

**********

ஜீவிய மணி

ஜேன் பிங்கிலிமீது பிரியப்பட்டாள். பெண் பிரியப்பட்டாலும் ஆண் பேச்செடுத்து அவளைக் கேட்கும்வரை அவள் அவசரப்படக்கூடாது. அது எல்லா பெண்களும் செய்வது. பழக்கம் (feminine manners)பெண்களுக்குரிய நல்ல பழக்கம். நடத்தை (behaviour) அதைக் கடந்தது. “ஒரு பெண் தான் விரும்புபவனை நாடக்கூடாது. மனத்தாலும் நாடக்கூடாது. அவனே வந்து பேசி தன் விருப்பத்தைக் கூறும்வரை அவனுக்கு அவள் மனதில் இடமில்லை. அத்துடன் ஊரார் நான் பிங்கிலியை நாடுகிறேன் என்று பேசும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது” என அவள் நம்புகிறாள். அந்த நம்பிக்கைக்குப் பவர் உண்டு. அதன்படி மனத்தளவில் அவள் பிங்கிலிக்கோ, ஊராருக்கோ இடம் தரவில்லை.

நம்பிக்கை வலுவானது. அதன் பலம் பலனாக எழுந்தது.

*********



book | by Dr. Radut