Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

21(A). நம்மை யாரேனும் உதவி கேட்டால் நம் சக்திக்குட்பட்ட அளவுதான் உதவி செய்ய முன்வர வேண்டும்.

நம் சக்திக்கு மீறிய உதவியை ஒத்துக் கொண்டால் அது நமக்கே சிரமமாகி விடும்.

இக்கருத்து உலக வழக்குக்குட்பட்டது. அது அன்னைக்குப் பொருந்தும். நம் சக்திக்கு மீறிய உதவியைச் செய்ய முன்வருவது 1) அறிவீனமான நல்லெண்ணத்தால், 2) யோசனையற்ற நல்லெண்ணெத்தால், 3) பெருமைக்குச் செய்வது, 4) எதையும் நினைக்காமல் செய்வது (unconscious). எப்படிச் செய்தாலும் இரண்டு நடக்கும். 1) முடிவில் அன்பருக்குத் தொந்தரவு வராது, நல்லதே வரும், 2) செய்த காரியம் திரும்ப வரும்,

காரியம் சக்தியுள்ளது என்றாலும் சமர்ப்பணம் அதைக் கடந்த நிலையில் அதையும் தவிர்க்கும்.

நம்மால் பிறருக்கு அறியாமல் தொந்தரவு வந்தால் அந்த தொந்தரவு நமக்கு பிறகு வரும். நமக்கு வேண்டுமென்றே தொந்தரவு செய்து நாம் அதிலிருந்து விலகியிருந்து அல்லது தெரியாமலிருந்தாலும் பிறகு நமக்கு வராமலிருக்காது. (Sincerity) உண்மை தெரியாத சிரமத்தையும் தவிர்க்கும். திருவுருமாறி நல்லது செய்யும். நல்லது கெட்டதை விலக்கி யோகப் பலன் தரும். அன்பர் சமர்ப்பணம் மூன்று அல்லது பல்வேறு நிலைகளிலிருக்கும். பலன் சமர்ப்பணத்திற்குத் தகுந்தாற் போலெழும். அவை

  1. பிரச்சினை தீர சமர்ப்பணம் செய்தால் பிரச்சினை தீரும்.
  2. பிரச்சினையை வாய்ப்பாக மாற்ற சமர்ப்பணம் செய்தால் வாய்ப்பு வரும்.
  3. பிரச்சினை வாய்ப்பு என்ற செயல் நிலைகளைக் கடந்த முழு சமர்ப்பணமானால் பலன் செயலாக எழாது. ஜீவியமாக அதே க்ஷணம் எழும். 

உதவி என்பது ஒரு செயல். அதைச் செய்யும் மனப்பான்மையுண்டு. மனப்பான்மை செய்பவருக்குண்டு, பெறுபவருக்குண்டு, அந்த நிகழ்ச்சிக்குண்டு, காலம், இடத்திற்குண்டு. சட்டங்கள் ஏராளம். சட்டங்களைக் கடந்த நிலைகளும் உண்டு. இன்னும் சட்டமே செயல்படாது (unconscious stage of darkness) இருண்ட கண் மூடிய நிலையுண்டு. கீழ்க்கண்டவை இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருந்தும்.

  • சட்டம் (substance) பொருளால் நிர்ணயிக்கப்படும்.
  • மனநிலையால் (3 நிலையில் - மேலே, கீழே, இடையே) நிர்ணயிக்கப்படும்.
  • எதிரெதிரான நிலைகளால் எதிரெதிரான சட்டம் செயல்படும்.
  • எந்த நிலையிலும் சட்டம் செயல்படுவதை (Sincerity) உண்மை நிர்ணயிக்கும்.
  • தவறு செய்யலாம், வேண்டுமென்று செய்யலாம், அறியாமல் செய்யலாம், செய்தவற்றை சமர்ப்பணத்தால் நிவர்த்தி செய்யலாம். செய்த பலனை அனுபவிக்கலாம், பலன் எழுந்தபின் பலனை எப்படியும் மாற்றலாம். 

ஒரு கட்டத்தில் எல்லாம் அன்பர் கையில் உள்ளது.
அடுத்த கட்டத்தில் எல்லாம் அன்னை கையில் உள்ளது.
அதையும் கடந்த காலத்தின் கையிலும், அதைக் கடந்த (transcendental plane) பிரம்மத்தின் கையிலும் உண்டு.

பகவான் கடந்த நிகழ்ச்சிகளை மாற்றலாம் எனவும் கூறியுள்ளார்.
செயலுக்கு மனிதன் கட்டுப்பட்ட நிலையுண்டு.
மனிதனுக்குச் செயல் கட்டுப்பட்ட நேரம் உண்டு.
எதிர்பார்த்து எதிராக நடப்பதுண்டு.
எது நடந்தாலும் அதையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.
இவை அனைத்தையும் உதாரணம் மூலம் விளக்கலாம்
எல்லா உதாரணங்களையும் Pride and Prejudice மூலம் தரலாம்
உதாரணமின்றி வெறும் தத்துவமாகக் கூறலாம்
தத்துவத்தை உதாரணம் மூலமும் உதாரணத்தை தத்துவ மூலமும் கூறலாம்.
எதையும் செய்து விட்டு நாமறியாத நிலையில் பராமுகமாக இருக்கலாம்.
இவற்றிற்கு ஜட உலகப் பலன் வேறு.
இதே நிகழ்ச்சிகட்கு சூட்சும உலகப் பலன் மாறி வரும்
சத்திய ஜீவிய உலகின் பலன் அறிவைக் கடந்தது.
பலன் வந்தபின் எந்த சட்டம் எப்படிச் செயல்பட்டது என ஆராயலாம்.
அடிப்படையில் மனமும், ஆன்மாவும், அதனடியில் பிரம்மமும் (Self)) அன்னைக்குக் கட்டுப்பட்டிருப்பது அன்பராலும் முடியும், யோகம் செய்யும் சாதகராலும் முடியும்.
எது எவரையும் முழுவதும் அழித்து விடுமோ அதனுள் நுழைந்து அடிபடாமல் வர முடியும்.

பின் வரும் பலன் கர்மத்தை மாற்றுவது, அறியாமையை விலக்குவது, அறியாமையை அறிவாக மாற்றிச் செயல்பட்டு, பலன் தருவது, horizontal பக்கவாட்டில் அகன்று உலகுக்குப் பலன் தருவது, உயர்ந்து ஜீவியத்தில் பலன் எழுப்புவது (consciousness result), செய்த காரியத்தால் ஜீவியத்தை உற்பத்தி செய்வது, (creative consciousness) சிருஷ்டித் திறனுள்ள ஜீவியத்தை உற்பத்தி செய்வது, இவை அனைத்தும் நாமறிந்தும், நாமறியாமலும், அன்னையறிந்தும், அன்னையே அறியாமலும் பலன்களை எழுப்புவதும், பலனேயில்லாமல் பலனைக் கடந்த லோகத்தை அடைவதும் நடக்கின்றன.

  • தியோன் மின்னலைத் திசை திருப்பினார்.
  • அவர் மனைவி செருப்பை வந்து காலில் மாட்டிக் கொள்ள உத்தரவிட்டார்.
  • பகவானுடன் பழகியவர் ஆங்கிலப் பெரு எழுத்தாளர்களை விடச் சிறந்த ஆங்கிலம் எழுதினார்கள். அந்தச் சிறப்பை எவரும் அறியவில்லை. எழுதியவர்களே அறியவில்லை.
  • பிரெஞ்சும், ஸ்பானிஷும் உலக மொழியாகி விட்ட நிலையில் பகவான் ஆங்கிலத்தில் எழுதியதால்,
    • இன்று ஆங்கிலம் உலக மொழியாகி வருகிறது.
    • இந்தியாவில் ஆங்கிலம் பொது மொழியாகி வருகிறது.
    • அவர் எழுதிய ஆங்கிலத்தின் சிறப்பை 90 ஆண்டுகளாக ஆங்கிலப் பேராசிரியர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை.
    • காவியமே உலகில் அழிந்தபின் தனக்குத் தாய் மொழியாக இல்லாத ஆங்கிலத்தில் பகவான் பெருங்காவியம் 24,000 அடிகளில் எழுதினார். இன்று வரை உலகம் அறிந்தும் அதன் சிறப்பை அறியாமலிருக்கிறது.

(தொடரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜடமும் ஆன்மாவும் சக்தியாக பிரபஞ்ச ஜீவியத்தில் இணைந்தபின் மேலும் உயர்ந்து பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்ம ஜீவியத்தில் ஆன்மாவாக இணைகின்றன. ஜடம் ஆன்மாவாகி, ஆன்மாவுடன் இணைந்து எங்கும் நிறை பரம்பொருளாகிறது. எங்கும் நிறை பரம்பொருள் சத்தியம். எனவே உலகம் சத்தியத்தாலானது.

சத்தியத்தாலான உலகம் சத்தியம்.

*********



book | by Dr. Radut