Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

Censor - எச்சரிக்கை.

  • ஓடும் எண்ணங்களை தியானத்தில் நிறுத்தலாம். மற்ற நேரங்களில் நிறுத்த முடியாது. நிறுத்த முயன்றால் எண்ணம் பீறிட்டெழும். இது எண்ணமாகவோ, எதிர்ப்பாகவோ, குறையாகவோ, நிறையாகவோ, குறைவின் நிறைவு, நிறைவின் குறைவாகவோ எழும்.
  • இதை பகவான் எச்சரிக்கை என்கிறார்.
  • மௌனம் நிலைக்க எச்சரிக்கை அழிய வேண்டும்.
  • திருடனைப் பிடிக்கப் போனால் அவன் ஓடுவான். பிடிபடும் திருடனும் உண்டு.
  • திருட்டுப் பொருளுடன் அவனை முதலாளியிடம் நிறுத்தினால் அடி விழும்.
  • அடி விழாமல் விடுதலையும் கிடைக்கும்.
  • மன்னித்துப் போ! என முதலாளி கூறியபின் 3 மணி அங்கேயிருந்த திருடனைக் கண்டு வியந்து “ஏன் நிற்கிறாய்?” எனக் கேட்ட முதலாளிக்கு அவன் திருட்டுப் பொருளை சுட்டிக் காட்டினான். அதைக் கொடுத்தால் போவேன் என்பது பொருள். இது எச்சரிக்கை.
  • நம் மனத்தில் திருடு உள்ளவரை திருடன் வரத் தவற மாட்டான் எனக் காட்டும் எச்சரிக்கையிது.
  • எண்ணமே எச்சரிக்கையானால் மௌனம் அருகில் வந்ததைக் காட்டும்.
  • திருடன் வருகிறான் எனில் வருமானம் அதிகரிப்பதைக் காட்டுகிறது.
  • மௌனம் வந்ததை எச்சரிக்கை அழிவது காட்டும்.
  • பூரண யோகம் அகந்தை அழியும் யோகம்.
  • இதன் கருவி சமர்ப்பணம்.
  • சமர்ப்பணம் பெரு அளவில் பலிக்கும்பொழுது ஒரு சமயம் பலிக்காவிட்டால் அன்பர் “என் சமர்ப்பணம் தவறாது” என அகந்தையை வெளிப்படுத்துவார்.
  • தன் அகந்தை அழிந்தபின் பிறர் அகந்தைக்கு உதவினால் அகந்தை அங்கு அழியாமலிருக்கும். பிரபஞ்ச அகந்தைக்கு உதவுவதும் சரிவராது.
  • பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்திலும் அகந்தை பர்சனாலிட்டி மூலம் வரும்.
  • அதையும் எச்சரிக்கை காட்டும்.
  • நீக்ரோ அடிமையொழிய வேண்டும் என்ற பொழுது அவனை மனிதனாகச் சமமாக நடத்த வேண்டும் என நினைத்தால் சட்டம் வந்த பிறகும் சமத்துவம் வராது. அது செய்தவரின் அகந்தை கடைசி கட்டத்தில் — பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்தில் — உயிரோடு இருப்பதைக் காட்டும். இதைக் காட்டுவது எச்சரிக்கை.
  • கொடுப்பவர் கொடுத்ததை மறப்பது அழகு என்பது அகந்தை அழிவதைக் குறிக்கும்.
  • வலது கை கொடுப்பதை இடது கை அறியாது எனவும் இதைக் கூறுவர்.
  • வாசுகி கடைசிவரை சும்மா இருந்தவர் மனம் உயிர் பிரியும் நேரம் “ஏன்” என நினைத்ததும் வள்ளுவர் கூறிய பதிலும் அகந்தை அழிய மறுக்கும் தன்மையைக் காட்டும்.
  • அன்னை இச்சக்திகளை gentleman என்பார்.
  • “நான் அவர்களை வரவேற்பேன்” என்கிறார்.
  • வரவேற்கும் மனநிலை அகந்தை எல்லா நிலைகளிலும் அழிந்த மன நிலை.
  • கரோலின் பெம்பெர்லியில் விக்காம் பெயரைக் கிளப்பியது எலிசபெத் மனத்தில் அவனிருப்பதைக் காட்டுகிறது. அதையும் Life Response என்போம்.

***********



book | by Dr. Radut