Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

128. விரயம் வருமானம் - ஆலை அழுக்கு

  • சர்க்கரை ஆலைகளின் கரும்பு சக்கை அழுக்காக வெளிவரும். இது ஆயிரக்கணக்கான டன்களாக வருஷாவருஷம் வரும். கொட்டி வைக்க இடமில்லை. பிரச்சனை.
  • இது நிலத்திற்கு சிறந்த உரம் எனக் கண்டுபிடித்த பொழுது, அது பெரும் வருமானமாயிற்று.
  • வாழ்வில் விரயமில்லை என்ற தத்துவம் இதன் மூலம் ஓர் அம்சத்தில் வெளிவருகிறது.
  • அன்னையே முன்நின்று சொத்து கைமாறிய பொழுது, பணம் போட்ட முதலாளி பேங்கில் பணம் பெறும் உரிமையை எதிரிக்குத் தரவில்லை. சமர்ப்பணத்தால் எதிரியான அன்பர் பெற்ற பொழுது அன்பர் உரிமையால் பெறுவதைப்போல் இருமடங்கு திரும்பிக் கேட்கும் உரிமையின்றிப் பெற்றார்.
  • விரயம் வினோதமான பெரும் இலாபம்.
  • தீண்டாமை இந்தியாவில் மட்டும் காணப்படுகிறது என்று உலகம் கூறுகிறது.
  • நம் நாட்டில் ஜாதிக்குப் புறம்பானவன் என்பதுபோல் எல்லா நாடுகளிலும் சமூக அந்தஸ்திற்குப் புறம்பானவர்கள் பாதி மக்கட்தொகை. ஆனால் தீட்டு என்பதில்லை.
  • ஐரோப்பாவில் அதிகமான இந்நிலை (serfdom) அமெரிக்காவில் மிகக் குறைவு.
  • ஐரோப்பிய “தீண்டாமை” அமெரிக்க சம உரிமையானது, அமெரிக்கா இன்று பெற்ற செல்வத்திற்கு முதற்காரணம்.
  • பகவான் புதுவைக்கு வந்தபொழுது 16% தீண்டாதவர். தற்சமயம் 25%.
  • தீண்டாமை உலகில் இல்லை எனினும் அதன் அடிப்படை இல்லாத இடமில்லை.
  • 4 வர்ணங்களைக் கண்ட இந்திய சமூகம் ஆன்மிகத்தில் சச்சிதானந்தத்தைக் கண்டது.
  • பகவான் கூறும் பெரிய உண்மையான சச்சிதானந்தத்தில் இது பகுதி.
  • சமூகத்தை துறப்பது இந்திய ஆன்மிக மரபு.
  • வர்ணாசிரமம் ஏற்பட்ட பொழுது இந்தியர் சமூகத்தை முழுமையாக அறிந்ததாக நினைத்தனர்.
  • விரயமில்லை என்ற பகவான் தத்துவம் நாம் ‘விரயம்’ எனக் கூறுவதை சமூகத்தின் உயர்ந்த பகுதியாகக் கருதுகிறது.
  • சமூகத்தின் முழுமை மனிதன் ஏற்படுத்திய எல்லைக்குள்ளில்லை. வர்ணாசிரம தர்மம் எல்லையை ஏற்படுத்தினால் ‘சமூகம்’ எல்லைக்கு வெளியே இன்று 25% வளர்ந்துள்ளது.
  • அமெரிக்கா எல்லைக்கு வெளியே வளர்ந்து உலகை ஆள்கிறது.
  • இந்தியாவில் S.C. எனப்படுபவரிலிருந்து மனிதகுல மாணிக்கங்கள் எழுந்து உலகையாளும் என்று தத்துவம் சுட்டிக் காட்டுகிறது.
  • வரும் தலைமுறைகள் பரம்பரையை அழித்து புதிய தலைமையை ஏற்படுத்துவதும் அந்தச் சமூகம்.
  • விரயத்தைத் தவிர்த்து செயல்பட செயல் சிறப்பாக, செம்மையாக இருக்க வேண்டும்.
  • ஷெர்லக்ஹோம்ஸ் கதைகளில் சிக்கல்கள் அவிழ்வது இதுபோன்ற ‘விரயம்’ என்ற அம்சத்தால் என்பதைக் காட்டுவதால் அவை நேரடி ஞானம் எழும் கதைகளாம்.
  • இராமாயணத்தில் பொய்மான் தெரியாததும், பாரதத்தில் துரியோதனன் பரமாத்மாவுக்குக் கட்டுப்படாததும் மனிதன் தேடும் “தீர்வு விரயத்திலிருப்பதைக் காட்டுகிறது.”
  • உலகப் போருக்குப்பின் ‘விரயமான’ அமெரிக்கா உலகை ஆள்வது அந்த அம்சம்.
  • நாம் உலகத்தின் சிறப்பை விரயம் எனக் கூறுகிறோம்.

**********



book | by Dr. Radut