Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 188: As he moved in this ether of ambiguous life.

இங்கும் அங்குமென இல்லாத ஆகாயத்தினூடே நகர்ந்து

  • தனக்கே தான் ஒரு புதிரானதைக் கண்டு
  • பிரம்மச் சின்னமாக உலகைக் கண்டு, அவற்றின் அர்த்தத்தைத் தேடி
  • பிறப்பு இறப்பு எனும் நீரோடைகளைத் தாவிக் கடந்து
  • ஆத்ம மாற்றமெனும் மாறும் எல்லைகளைக் கடந்து
  • ஆத்ம சிருஷ்டிப் பாதையில் ஆடும் வேட்டையை மேற்கொண்டு
  • வாழ்வின் வலிய, மென்மையாக பாதைகளைக் கண்டு
  • முத்திரையிட்டு மூடிக் காக்கும் பிரம்மாண்டமான ஆனந்தத்தைத் தொடர்ந்து
  • ஆபத்து நிறைந்த விளையாட்டை முடிவில்லாமல் ஏற்று
  • இப்பெருவழிகளில் எந்த இலட்சியமும் காணாமல்
  • அனைத்தின் அகன்ற மூலத்தை இங்கு கண்டெடுத்து
  • பெரிய மூலத்தைப் பிறிதொரு இடத்தில் நாடி
  • பூமியின் வரிவடிவங்களினின்று அவள் விலகும் பொழுது
  • பிரம்மம் பதட்டமாய் ஈர்த்ததையறிந்து
  • சுதந்திரமான சிந்தனையின் உயர்ந்த சந்தர்ப்பம்
  • அற்புதத்தைக் கண்டெடுக்க அவள் முனைந்தெழுந்தாள்
  • அற்ப கவலைகள் அர்த்தமிழந்து விலகி விடுதலையளித்து
  • ஆசையும் நம்பிக்கையும் வலுவாக உருவகமாகி
  • இது பெரு நாடகம், உலகைக் கடந்த உன்னதம்
  • நிரந்தரமாக சுழன்று நெடுதூரத்து ஜோதியை நாடி
  • சுட்டிக் காட்டியவை வெளிப்பட்டவற்றைவிட பெரியன
  • பார்வையுடன் கலந்து, விருப்பத்தால் விளங்கி
  • செயல்படும் சந்தோஷத்தில் காரியத்தை இழந்து
  • பிரம்மத்தின் பொருளையிழக்கும்வரை மாறி
  • மின்னும் பூஜ்யமெனும் மாயையென மாறி
  • மந்திரசக்தி பொருந்திய மாய வில்லென
  • பார்வையை விட்டகலும் இலக்கை உற்று நோக்கி
  • அருகிலிருந்தால் தொலைவில் தோன்றி
  • மிளிரும் பாத்திரங்களை மிடுக்காக உருவாக்கும்
  • மந்திரச் சுவடியின் மாய இரகஸ்யம் போல்
  • அவளுடைய சூட்சும சிக்கலான மாயத் திட்டங்களைச் சோதித்து
  • நிரடான அவள் மறைவான தோற்றங்கள் தரும் அடையாளம்
  • பாலைவன மணலென பரவும் காலத்தில் வரைந்த
  • அவள் பெறாத சாதனைகளின் ஆரம்ப அடிகள்
  • அவள் கரிய செயல்களில் கண்டு கொள்ள முயலும் குறி

************

ஜீவிய மணி

பிறர் நம் மீது பிரியமானால் எரிச்சல் வரும் சுபாவமும் உண்டு.

அது தனித்து விலகி தான் செய்வதை எவரும் காணாமல்

அனுபவிக்க விரும்பும் மனநிலை.

***********



book | by Dr. Radut