Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/23. ஜீவாத்மா தன்னை பரமாத்மாவின் அம்சமாக அறிவது ஐக்கியம்

  • ஒரு மனிதனுடைய ஆத்மா வழக்கில் ஜீவாத்மா எனப்படும்.
  • ஆத்மா, மனம், உயிர், உடல் சேர்ந்தது ஜீவன் (embodied being).
  • அந்த ஜீவனின் ஆத்மா ஜீவாத்மா.
  • மரபு ஜீவாத்ம சித்தி பெற்றவனை ஜீவன் முக்தன் என்றும், அவனுக்கு அடுத்தகட்ட முக்தி பரமாத்ம முக்தி எனவும் கூறுகிறது.
  • இம்முக்தியால் ஜீவாத்மா பரமாத்மாவில் கரைகிறது எனக் கூறுகிறது.
  • உலகில் பல லட்சம், பல கோடி ஜீவாத்மாக்கள் உள்ளன என்பது மரபு.
  • இது சாங்கியம். ஒரு பிரகிருதி, பல புருஷர்கள்.
  • பகவான் உலகில் உள்ளது ஒரே ஜீவாத்மா எனவும், மனம் அதை பிரித்துப் பலவாகக் காண்கிறது எனவும் கூறுகிறார்.
  • ஜீவாத்மா சிருஷ்டியுள் இன்று வரை ஜனிக்கவில்லை எனவும் கூறுகிறார்.
  • ஞானத்தின் நான்கு வகைகளில் ஐக்கியம் முடிவானது.
  • ஞானம் பிரம்மத்துடன் ஞானத்தால் ஐக்கியமாவது ஞான யோக மோட்சம்.
  • மோட்சம் அது போல் பகுதியானது, பிராணனும், உடலும் அடுத்த பகுதிகள்.
  • ஜீவாத்மாவின் பகுதிகள் மூன்று, மனோமய புருஷன், பிராணமய புருஷன், அன்னமய புருஷன்.
  • சைத்திய புருஷன் முழுமையானது, இவற்றிலிருந்து வேறுபட்டது.  
  • சைத்திய புருஷன் முழுமையானதானாலும், மனிதன் விருப்பப்பட்டால் பகுதியான மோட்சந்தரும்.
  • மோட்சம் பகுதி, முழுமை திருவுருமாற்றம்.
  • பகுதியால் முழுமையைத் தரமுடியாது. முழுமையால் பகுதியான மோட்சம் தர முடியும்.
  • ஞான யோகத்திற்கும் பூரண யோகத்திற்கும் உள்ள வித்தியாசம் மனத்திற்கும் சைத்திய புருஷனுக்கும் உள்ள வித்தியாசம்.
  • ஞான யோக மையம் மேல் மனம்.
  • பூரண யோக மையம் அடி மனம்.
  • அடி மனம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது.
  • மேல் மனம் செய்யும் யோகம் இருளை விலக்குகிறது.
  • இருள் பிரம்மாண்டமான சக்தி.
  • பரமாத்மாவை தூங்கும் ஆத்மா (குடூஞுஞுணீ குஞுடூஞூ) என உபநிஷதம் கூறுகிறது.
  • பாதாளத்தைக் கனவின் ஆத்மா (ஈணூஞுச்ட் குஞுடூஞூ) எனவும் கூறுகிறது.
  • மேல் மனத்தில் இவை சந்திக்க முடியாது.
  • அடி மனத்தில் சந்திக்கலாம்.
  • பாதாளம், ஜட இருள் பரிணாமத்தால் வளர்ந்தது.
  • பாதாளமும் பரமாத்மாவும் அடி மனத்தில் சந்திப்பது இருளை ஒளி திருவுருமாற்றுவது.
  • ஹட யோகம், கர்மயோகம், ஞான யோகம், ராஜ யோகம், தந்திர யோகங்கள் போன்றவை அனைத்தும் மேல் மனத்தில் அகந்தையின் யோக சாதனை.
  • பூரண யோகம் ஜீவாத்மா பரிணாமத்தால் பரமாத்மாவாகிறது என்கிறது.
  • பரமாத்மாவை பகவான் ஒளிமயமான அஞ்ஞானம் என்கிறார்.
  • தெய்வீக மனத்தைக் கடக்கும்வரை அஞ்ஞானம் தொடரும்.
  • அஞ்ஞானம் தொடரும்வரை திருவுருமாற்றமில்லை.
  • சத்திய ஜீவியத்துள் அஞ்ஞானமில்லை.
  • சத்திய ஜீவியம் மூன்றாகப் பிரிகிறது.
  • பரமாத்மா தூங்கும் ஆத்மாவானால், பரமாத்மாவை அடைவது மோட்சமானால் மோட்சம் பெரிய ஆன்மிக உறக்கமாகும்.
  • பரமாத்ம மோட்சம் முடிவான மோட்சமில்லை.
  • அதைக் கடந்த பிரம்மத்துள் மோட்சம் பெறும் நிலைகள் மூன்று.
  • நிர்விகல்ப சமாதியும் தூக்கத்துள் உறைவதாகும்.
  • அஞ்ஞானம் அழியும் கட்டங்கள்
    1. பாதாளமும், பரமாத்மாவும் இணைவது.
    2. முனிவர் மனத்திற்கு மௌனத்தால் உயர்வது. சிந்தனைக்குரிய அஞ்ஞானம் அழியும்.
    3. ரிஷி மனம் சென்று சொல்லழிந்து சொல்லால் ஏற்படும் அஞ்ஞானம் அழிவது.
    4. யோகி, தெய்வ நிலைகளின் நேரடி ஞானம், ஞானம் அனுமதிக்கும் அஞ்ஞானம் அழிவது.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிருஷ்டி என்பது பிரபஞ்சம். அதன் மையம் மனிதன். பிரம்மம் சிருஷ்டியைக் கடந்தது. மனிதன் ஆன்மிக முழுமை பெறும்பொழுது இந்த மூன்று அம்சங்களை அடைகிறான். தேர்தலில் தனி மனிதன் ஓட்டுப் போட வேண்டும் என்பது போல் மனிதன் மூலமே இறைவன் (உலகில்) பிரபஞ்சத்தில் செயல்பட முடியும். இறைவனையும் உலகையும் பிரித்தது மனம். எல்லாப் பிரச்சனைகளும் அதன் மூலம் வந்தவையே. இவற்றைச் சேர்க்கும் கடமையை இறைவன் மனிதனுக்கு அளித்துள்ளான். பாதாளத்தையும் பரமாத்மாவையும் இணைத்து மனிதன் தன் கடமையைப் பூர்த்தி செய்கிறான். சிருஷ்டிக்கு மனிதன் முக்கியம். அதனால் அவன் அஞ்ஞானத்திலிருந்து விடுபடுவது அவசியம்.

**********



book | by Dr. Radut