Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 176: Leaped out from a chance tension of the soul

ஆத்மாவின் துடிப்பான படபடப்பு துள்ளியெழும் வாய்ப்பு

  • பிரம்ம வண்ணம் வாழ்வை அலங்கரிக்கும்
  • ஞானத்தின் பெருமையும், ஆத்ம ஞான திருஷ்டியும்
  • அன்பின் இதயம் ஆர்வத்தின் வேகத்தால் தீவிரம் பெற்று
  • உடலின் உருவமற்ற இரகஸ்யத்தின் உத்தம குரு
  • கண்காணாத ஆத்மப் போர்வையுள் அடைக்கலம் புகுந்து
  • உணர்வை அதன் எல்லையை மீறும்படி நிர்ப்பந்திக்கும் மனஉறுதி
  • புலனுக்குப் புலப்படாத ஒளியும், சந்தோஷமும்
  • சொல்லொணா அமைதியுள் அடியெடுத்து வைத்தன
  • மூடியிட்ட ஆசையின் இனிமையை அரைகுறையாக ஆட்கொண்டது
  • புதிரான ஆனந்த நெஞ்சம் புகலிடம் தேடியது
  • திரையிட்ட சத்தியம் சிருஷ்டிக்குப் பகுதியாக உட்பட்டது
  • ரூபலோகத்தின் உண்மையுணர்வை கடைக்கண்ணால் கண்டது
  • எண்ணம் திருஷ்டியாகி ஒளி பெருகியது
  • இதய ஞானம் தழலாய் எழுந்து தாங்கிப் பிடித்தது
  • ஆன்மாவின் விழிப்பான ஆகாயத்துள் பிடிபட்டது
  • பிரபஞ்ச பிரம்மம் சின்னமாகச் சிறந்தது
  • இந்த லோகம் பெருநம்பிக்கையை நம்முள் எழுப்புகிறது
  • அதன் சக்திகள் வானிலிருந்து புவியில் இறங்கி வந்தன
  • அதன் அடையாளம் நம் வாழ்வின்மீது தம் முத்திரையைப் பதித்தன
  • நம் தலைவிதிக்கு அவை ராஜ நடையைத் தருகின்றன
  • வாழ்வின் பெரு அலைகளுக்கு அதன் தவறான அசைவுகள் ஆதரவு தருகின்றன
  • நாம் தேடுவன அனைத்தும் அங்கு முன்கூட்டி அமைந்துள்ளன
  • நாமறியாதவை, நாம் தேடாதவை அனைத்தும்
  • மனித இதயம் உரிமையாகப் பெற்றவை
  • காலத்தைக் கடந்தவன் காலத்தில் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறான்
  • நாள் எனும் புதிருள் நலமாகக் கரைந்துறையும்
  • திறந்த அனந்தனின் பிரம்மத்தின் காலம்
  • முடிவற்ற வாய்ப்பு மலைமுடியையெட்டும்
  • படியில்லாத ஏணியின் கனவு முயன்று மலையேறுகிறது
  • ஜீவனின் விழிப்பான சமாதியில் என்றென்றும்
  • அவ்வேணியில் ஏறுபவரெல்லாம் தெரியாத இலக்கை நாடுகின்றனர்
  • நிரந்தரமான நிலையற்ற சக்தி முயன்று
  • திரும்பும் நிலையற்ற யாத்திரை
  • அப்பாலை நாடும் இயற்கையின் புனித யாத்திரை

*************

ஸ்ரீ அரவிந்த சுடர்

எவ்வழி எச்சக்திகளால் ஜீவியம் பரமாத்மாவாயிற்று என அறிவது Supreme Discovery மாபெரும் வெற்றி என பகவான் குறிப்பிடுவது.

*********



book | by Dr. Radut