Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

நம்பிக்கை முக்கியம் - கட்டுப்பாடல்ல

Volume 11, page 99

  • கட்டுப்பாடு — எவருக்கும் அவசியம்.
  • குடும்பம், ஊர், உலகம் கட்டுப்பாட்டால் உயரும்.
  • கட்டுப்பாடு காலத்தால் கனிவது பண்பு.
  • பண்பு இனிமையாக வெளிப்படும்.
  • செயலில் பண்பு, பொறுமை, நிதானமாகும்.
  • செயலில் பொறுமை வர, மனத்தில் நிதானம் தேவை.
  • நிதானம் இயல்பாக நம்பிக்கையை எழுப்பும்.
  • மனம் பெறும் நிதானம் ஆத்மா அனுமதிக்கும் சுதந்திரம்.
  • சுதந்திரம் சுயமான தந்திரம்.
  • தந்திரம் செயலாற்றும் முறை, திறன்.
  • சுயமானது சுயமாகவே இருக்கும், செயல்படாது.
  • சுயம் அகம், திறனும் செயலும் புறம்.
  • சுதந்திரம், சுயதந்திரம் என்பது அகம் புறத்தில் செயல்படுவது.
  • அகம் புறத்தில் தடையின்றிச் செயல்படுவது சுதந்திரம்.
  • பொதுவாக நம்பிக்கைக்கு உறைவிடம் குடும்பம்.
  • மனிதன் பிறப்பால், இயல்பாக தன்னை மட்டும் நம்புவான்.
  • தன்னை முழுவதும் தெம்பாக, திறமையாக நம்ப உதவுவது குடும்பம்.
    குடும்பம் ஊரின் பகுதி, அதன் சிறு உலகம்.
    எந்த அளவுக்கு ஊர் ஒருவனை நம்புகிறதோ அந்த அளவுக்கு அவன் தலைவனாவான்.
  • ஊரின் நம்பிக்கை உலகின் நம்பிக்கையானால், தலைவர் பெரும் தலைவராவார்.
  • பெரும் தலைவரை உலகம் நம்ப அவருக்குச் சுயமாக தன்னை நம்பமுடியுமானால், அவர் அரசியல் வானில் அவதார புருஷராகிறார்.
  • மகாத்மா பெற்ற மகத்தான இடம் இது.
  • நாட்டின் நாடித் துடிப்பை அறிந்ததால் நாடு அவரை ஏற்றது.
  • தவம் மோட்சம் தருவது.
  • தவசிக்கு ஆத்மாவின் அந்தரங்கத் துடிப்பு தெரியும்
  • தவத்தைக் கடந்தது திருவுருமாற்றம்
  • திருவுருமாற்றம் என்பது மனிதன் பெறும் ஆத்ம விழிப்பு அவனை இயற்கையின் பிடியினின்று விடுவித்து அவன் எண்ணத்தால் செயலைப் பூர்த்தி செய்கிறது.
  • எண்ணம் செயலாக பூர்த்தி பெறுவது பண்பால்.
  • பண்பின் அடிப்படை கட்டுப்பாடு.
  • நம்பிக்கை பண்பின் கட்டுப்பாடு.
  • நம்பிக்கை முக்கியம், முக்கியமாக முக்கியம்.

*******

ஜீவிய மணி
 
நாமே முனைந்து அன்னை நினைவில்லாமல், சமர்ப்பணமில்லாமல் ஆரம்பிக்கும் காரியங்கள்
சற்றுச் சிரமம் தரும். முனைப்பு அதிகமானால் சிரமம் அதிகமாகும். நான் அன்னை பக்தன் என்பதால் உயர்ந்தவன் என்ற நினைப்போ, உலகம் தாழ்ந்தது என்ற அபிப்பிராயமோ இல்லாமல், நமக்கு அமைந்த கடமைகளை அன்னை நினைவோடும் ஆத்ம சமர்ப்பணத்தோடும் செய்தால் அம்மனநிலை அன்னைச் சூழலை நாம் போகும் இடம் எல்லாம் கொண்டு வரும். நம்மால் சமாளிக்க முடியாத சூழலை அன்னை தரவே மாட்டார். அன்னை நிரம்பிய சூழல் நமக்கு அமிர்தமாக இனிக்கும்.



book | by Dr. Radut