Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/11. அருளில்லாமல் ஆர்வமில்லை.

“அவனருளாலே அவன் தாள் வணங்கி”

  • ஆர்வம் எழ சக்தி, தெம்பு வேண்டும்
  • தெம்பு உடல் நலத்தாலிருப்பது போல் உள்ள உறுதியாலிருப்பது.
  • நம் கையிலில்லாதது அருளுக்குரியது.
  • அருள் காரணமின்றி செயல்படும்.
  • சூழல் தேவைப்படாமலும் அருளிருக்கும்.
  • நமக்கு அருள் தேவைப்படுவதை மனிதன் அறிவான்.
  • அருளுக்கு நாம் தேவைப்படலாம் எனத் தோன்றுவதில்லை.
  • கன்று பால் குடிக்க ஓடி வருகிறது.
  • மடி கனப்பதால் பசு கதறுகிறது.
  • கன்று தாயைத் தேடுவது போல் தாயும் கன்றைத் தேடுவது இயல்பு.
  • உலக சட்டத்தை இயக்க அருள் செயல்படுவதுண்டு.
  • தங்கையைக் கற்பழித்தவனைக் கொன்றவன், அவனுக்குப் பிறந்த குழந்தைக்குப் பெரும் சொத்து சம்பாதித்துக் கொடுத்தது கர்மவினை. எனினும் அதை நிறைவேற்றியது அருள்.
  • லிஸ்ஸிக்கு டார்சியை எந்தக் கர்மமும் பெற்றுத் தரவில்லை. அது முழு அருளின் செயல்.
  • அருள் சூழலிலிருந்தால் ஆத்மாவில் ஆர்வம் எழுகிறது. அது இல்லாமல் ஆர்வம் எழுவதில்லை.
  • ஆன்மீகச் சட்டப்படி சீதையை இராவணன் தூக்கிப் போனதும், சிகண்டி பீஷ்மரைக் கொன்றதும், திரௌபதியின் மானம் பங்கப்பட்டதும், நாட்டிலேயே அளவுகடந்த இலஞ்சம் ஹைகோர்ட் நீதிபதி வாங்கியதும், அவரை எதிர்த்து பார்லிமெண்டில் ஒரு வோட்டும் போடாததும் அருளின் செயல் எனில் அதை அறிவது
    • அனைத்தையும் அறிவதாகும். அதாவது பிரம்மத்தை அறிவதாகும்.
    • அறிவு என்பது அருளை அறிவதாகும்.
    • ஆர்வமே அருளுக்கு அடிப்படையெனில் ஆர்வம் எழுவதை அறிவது அருளை அறிவதாகும்.
    • அனைத்தும் கைவிட்டபின் கைவிடாத அருளின் செயலை அறியும் அறிவு உண்டா?
    • அது அறிவா ஞானமா?
    • கைவிட முடியாதது அருள் எனில் ஏன் கைவிட முடியாது என்பது கேள்வி.
    • கேள்வி எழுந்தால் அருள் செயல்படாது. கேள்வி எழுந்ததும் செயல்பட மறுக்காத அருள் பேரருளாகும்.
    • அருளே முடிவானதெனில் பேரருள் எப்படி வேறுபடும்?
    • பகவான் இறைவனைக் கேட்டுப் பெற்ற வரம் அருளானால், அது தன்னை நிறைவேற்ற ஏன் நிபந்தனை விதிக்க வேண்டும்?
    • அருளை அறிவது ஆண்டவனை அறிவது.
    • அருள் ஆனந்த பிரம்மம்.

************

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆயிரம் ஆண்டுகட்கும் இலட்சக்கணக்கான உள்ளங்களை ஊடுருவும் கல்வியைக் கதை அளிக்கவல்லது.
 



book | by Dr. Radut