Skip to Content

2. அடங்காப் பிடாரி, ஆர்ப்பாட்டக்காரி

அடங்காப் பிடாரி, ஆர்ப்பாட்டக்காரி

சிறிய திறமைக்குப் பெரிய வலிமை வந்தால் அடங்காது. பிடாரியாகும், ஆர்ப்பாட்டம் செய்யும். சிறிது பணமுள்ள கிராமத்து வாலிபர், பணம் தீரும்வரை ஆட்டம் ஆடுவர். ஆடி ஓய்ந்து விடுவர். ஊரிலும், ஜில்லாவிலும் பெரிய மனிதன் அடுத்த மாநிலத்தில் 100 ஆண்டுகட்குமுன் சம்பந்தம் செய்த அவள், அவனை நடுத்தெருவில் உட்கார வைத்துத் தலையில் மண்ணை வாரிப் போடுவாள். பதவியுள்ள இடத்திற்குப் பக்குவம் வருமுன் நடப்பவை. அன்னை பக்தர் அடங்காப் பிடாரி என்பதால் மட்டும் அன்னை அவரை விட்டு விலக மாட்டார். அதனால் பிடாரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த நிலையிலும் அன்னை அகல மாட்டார். நாமே அகன்றால்தான் உண்டு. அடங்காப்பிடாரிக்கும் ஆர்ப்பாட்டக்காரனுக்கும் அன்னை அளவு கடந்து அருள் பாலித்தது நான் அறிவேன். நல்லது நல்லதுதான், கெட்டது கெட்டதுதான். கெட்டதான பின்னும் அன்னை விலகாதது அருளின் பெருமை. கசாப்புக்கடைக்காரன், கள்ளுக்கடைக்காரன், திருடன், கடத்தல்காரனும் அன்னையின் குழந்தைகளே. ஹிட்லரை உலகை அழிக்க உதவிய தேவதை அன்னை, “அவனும் என் குழந்தையாயிற்றே. என்னையறியாமல் அவன் எப்படிச் செயல்பட முடியும்” என்றார். அன்னை விலக மாட்டார். செய்த காரியத்திற்குப் பலன் தவறாமல் உண்டு. நெருப்பைத் தொட்டு சுட்டால் அது தொட்டதின் பலன். அதனால் அன்னை விலகி விடுவாரா? நெருப்பால் சுட்டுக் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.

*******



book | by Dr. Radut