Skip to Content

11. அஜெண்டா

அஜெண்டா

நிர்வாணம்

  • புத்தர் நிர்வாணம் எய்தினார் எனப் படிக்கிறோம்.
  • தாகூர் மனத்தின் நிர்வாண சித்தி பெற்றவர் என அன்னை கூறினார்.
  • பொதுவாக நிர்வாணம் எனில் உடைமை, உரிமை, நம்பிக்கையை இழத்தல் எனப் பொருள்.
    திகம்பரர் என்றால் திக்கை அம்பரமாக உடையவர்.
    திசை உடையெனில் அது நிர்வாணம்.
    மைசூரில் நிர்வாண வழிபாடுள்ள இடம் உண்டு.
    அவர்கள் நிர்வாணமாகக் கூடி வழிபடுவார்கள்.
  • அஜெண்டாவில், அன்னை நிர்வாணம் என்பது எல்லா நிலைகட்கும் உண்டு, மனம், உயிர், உடல், சைத்தியப் புருஷனுக்குப் பின்னால் நிர்வாணம் உள்ளது என்கிறார்.
    மனத்திற்கும், சத்திய ஜீவியத்திற்கும் இடையில் நிர்வாணம் உள்ளது.
  • மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்றால் அங்கு மூன்று வாயில்கள் உள்ளன.
    1. மனோமயப் புருஷன்.
    2. நிர்வாணக் கதவு.
    3. சைத்திய வாயில்.
  • 10 ஆண்டுகள் முயன்று பகவான் இந்தச் சூட்சும வாயிலைக் கண்டு முதலிரண்டையும் விலக்கி, சைத்திய வாயில் மூலம் அடிமனக் குகையில் சைத்தியப் புருஷனை அடைந்து மேலேபோய் சத்திய ஜீவியத்தைத் தொட்டார்.
  • நிர்வாணம் எனில் உள்ளவை அனைத்தையும் இழத்தல்.
    மனத்தின் நிர்வாணம் எனில் மனம் தன் நம்பிக்கைகள் அனைத்தையும் இழத்தல் — புத்தர் பெற்றது.
    உயிரின் நிர்வாணம் — ஆசைகளை விடுதல், இது விரதம் தரும்.
    விரதம் என்பதால் பெரும் ஆன்மீகப் பலன் எழும்
    உடலின் நிர்வாணம் — உடலுக்குரியது உயிர்
    உயிரை உடல் எடுத்துக் கொள்ளாத நிலை நிர்வாணம்
    உடலின் நிர்வாணம் — மரணம்
  • நிர்வாணத்திற்கு நடைமுறைப் பலன் உண்டு. அதை Non-Reaction எனலாம்.
    பிரச்சனை எழும்பொழுது மனதால் எரிச்சல் படாமலிருப்பது Non-Reaction.
    அதைப் பின்பற்றியவருக்கு 43,000 சம்பளம் எதிர்பாராம உயர்ந்து 63,000 ஆயிற்று.
    மாமியார் கொடுமை, மருமகள் கொடுமைக்குச் சிறந்த பரிகாரம் இது.
    Non-Reaction கொடுமை செய்பவரைக் காலத்திற்கு விலக்கும்.

*******

ஜீவிய மணி
 
நாமறிந்த வாழ்வுக்கும், அன்னை இயல்பாக வழங்கும் வாழ்வுக்கும், கவலை தோய்ந்த உள்ளத்திற்கும், மகிழ்ச்சி பொங்கும் நெஞ்சத்திற்கும் உள்ள தூரம் உண்டு. மாற்றத்தை நாடிப் பெறுபவர்களுக்கு இம்மாற்றம் தவறாமல் தெரியும்.
 
கவலையின் சுனை மகிழ்ச்சியி ஊற்றாவது மாற்றம்.
 

*******



book | by Dr. Radut