Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

94. யோகம் சித்திப்பது - ஓர் அம்சம் சித்திப்பதும் யோக சித்தி எனப்படும்.

  • தவம், யோகம், ஆன்மீகம், துறவறம் எனக் கூறும்பொழுது ஒரு பரந்த உலகை நாம் மனதில் கொள்கிறோம். இது எல்லா துறைகட்கும் பொதுவான கருத்து.
  • வாழ்வு, அரசியல், கல்வி, விவசாயம், வாணிகம், நிர்வாகம் என்பவை அவை.
  • மேதை என்ற கருத்து அளவிறந்த துறைகட்குப் பயன்படும்.
  • மௌனம் என்ற கருத்து யோகத்தில் அனைவரும் அறியும் கருத்து.
  • திருஷ்டி, ஞானம், மந்திரம், காவியம், தந்திரம், வைத்தியம், ஜோஸ்யம் யோகத்தின் பகுதிகளாகக் கருதப்பட்டன.
  • அஷ்டாவதானம், சதாவதானம், சூட்சும ஞானம் என்பவை 14,600 சித்திகளாகப் பிரிந்து ஒவ்வொன்றிற்கும் உரிய மந்திரம் ஏற்பட்டுள்ளது.
  • வழக்கு ஜெயிப்பது ஒரு யோக சக்தி.
  • பூர்வ ஜென்ம ஞானம் அது போன்றது.
  • இருபது இலக்க எண்ணைப் பத்து இலக்கமுள்ள எண்ணால் பெருக்கிக் கூற ஒரு நிமிஷம் போதும் என்பது யோக சித்தி. உலகெங்கும் இத்திறன் உள்ளவர் உண்டு.
  • மரண தண்டனை விதித்தபின், கொலையாளி உயர்த்திய கத்தியை, மறைய வைக்கும் திறன் பக்திக்குண்டு.
  • ஸ்ரீரங்கம் திருவிழாவில் தேர்ச்சீலை எரிவது இருநூறு மைலுக்கு அப்பால் தெரிவது அது போன்றது.
  • நரி பரியானது யோகம், யோக சித்தி.
  • பொன்னுக்குப் பாடிய கம்பனும், கூழுக்குப் பாடிய ஔவையும் பெற்றவை யோக சித்தி.
  • கொட்டிக் கிழங்கு விற்க நாமகளை அழைத்ததும் யோக சித்தி.
  • சிற்பி சிற்பம் செதுக்கும் பொழுது உடலில் மச்சமுள்ள இடத்தில் சிற்பத்தின் கல் சிதறுவது சிற்பி ரிஷி எனக் கூறுகிறது.
  • அரசனுக்குள்ள அறியாமையை எடுத்துரைக்கும் அறிவு ஒரு சித்தியாகும்.
  • அகந்தை கரைவதும், ஆத்ம தரிசனம் பெறுவதும், மௌனம் வாயில், மனத்தில், ஆத்மாவில், ஜீவனில், பிரபஞ்சத்தில், பிரம்மத்தில் சித்திப்பதும் யோகம்.
  • விலை போகாத சரக்கு விற்பது ஆன்மீகப் பலன்.
  • பூமிக்கடியில் நீர் ஊற்று உள்ளதை உடலில் உணர்வு கூறுவது சித்தி.
  • பிறர் மனம் நினைப்பதைக் கூறுவதும் அதுபோன்றதே.
  • மரத்திலிருந்து விழுந்த பழம் மீண்டும் மரத்தில்போய் ஒட்டிக் கொள்வது எதைச் செய்தால் அது நடக்கும் என அறிபவை சித்தி.
  • கையால் மலையை அரை அங்குலம் நகர்த்துவது யோகம்.
  • ரஸவாதம் சித்தி.
  • காயகல்பம் உடல் பெறக்கூடிய சித்தி.
  • சத்தியவதி உடலில் உள்ள மீன் வாடையைப் போக்கும் மந்திரம் யோக சித்தியைக் காட்டுகிறது.

*******



book | by Dr. Radut