Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

யோகத்தைப்பற்றிய பொதுவான கருத்துகள்

கர்மயோகி

  • யோகத்தின் சிறப்பை வாழ்வில் தெரிவிப்பது யோகமடித்தது என்ற சொல்.
    வாழ்வில் யோகம் அதிர்ஷ்டம் என்பது வழக்கு.
  • தவம், யோகம் என்ற இரு சொற்கள் குறிக்கும் வாழ்வின் அம்சம் மோட்சத்தை நாடுவது.
  • நிஷ்டை, தியானம், சமாதியில் முடிவது தவம்.
    தவம் என்பது கடுந்தவம் என்று அறியப்படும்.
    தவம் அக்னியாகும்.
    ஆத்மா தழலாக எழும் அக்னி தவம்.
    புலன் அவிந்து அழிவது கடும் தவம்.
    சூடு போட்டாலும் தெரியாத நிலை சமாதி.
  • நிர்விகல்ப சமாதி முடிவான சமாதி.
  • மனிதரில் சிரேஷ்டமானவர் செய்வது தவம்.
  • ஹட யோகம், லய யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், மந்திர யோகம், தந்திர யோகம், ஞான யோகம் எனப் பலவகை யோகமுண்டு,
  • ஆசனம், பிராணாயாமம், மந்திரம், ஜபம், தியானம், நிஷ்டை, விரதம் ஆகியவை கருவிகள்.
  • பூரண யோகத்தில் சமர்ப்பணம் மட்டுமே தத்துவம்.
  • சமர்ப்பணம் தவிர வேறு எதுவும் இங்குப் பயன்படுத்துவது இல்லை.
  • ஹட யோகம் உடலைக் கருவியாகக் கொண்டது
    கர்மயோகம் பிராணனைக் கருவியாகக் கொண்டது.
    ஞான யோகம் எண்ணத்தைக் கருவியாக்கியது.
    ராஜ யோகம் முழுமனத்தையும் கருவியாக்கும்
  • பூரண யோகம் உடல், பிராணன், மனம், ஆத்மா அனைத்தையும் கருவியாக்கும்.
  • துறவிக்குத் தவம், அது துறவறம்.
  • அவனுக்கு உடல் எதிரி, பெண் விலக்கு, வாழ்வு துறக்கப்பட வேண்டியது.
  • புலன் அவிந்து அழிந்தால் மனம் அலைபாயாது. அது முதல் நிலை மௌனம்.
  • சிந்தனை அழிவது அடுத்த நிலை மௌனம்.
  • மௌனம் பெற்றவர் முனி.
  • முனிவர் துர்வாசர், அவதாரப்புருஷனான கிருஷ்ண பரமாத்மாவுக்கு வரம் அளித்தார்.
  • மௌன விரதம் சக்திவாய்ந்தது. முனிவர் கோபப்பட்டால் சபிப்பார்.
    அவருடைய கோபமான பார்வை அவர்மீது எச்சமிட்ட கொக்கை எரித்தது.
    கணவனுக்குப் பணிவிடை செய்யும் கற்புக்கரசிக்கு முனிவர் மனத்திலுள்ள எண்ணம் தெரியும். கொக்குபோல் அவர் கோபத்திற்கு அவள் ஆளாகமாட்டாள்.
  • நளாயினியின் கற்பு காலத்தைக் கட்டுப்படுத்திற்று.
  • அனுசுயாவின் கற்பு திரிமூர்த்திகளைக் குழந்தைகளாக்கியது.
  • சாவித்ரியின் கற்பு எமனிடமிருந்து சத்தியவானை மீட்டது.
    பகவான் ஸ்ரீ அரவிந்தருடைய சாவித்ரி எமனை அழித்து, இருள்மயமான காலனை ஒளிமயமாக்கி, உலகில் மரணத்திற்கு மரணம் கொண்டு வந்தாள்.
  • பகவத் கீதையின் யோகம் ராஜ யோகத்தைவிடப் பெரியது.
    பகவத் கீதையின் கருவி சரணாகதி, ஜீவாத்மா பரமாத்மாவுக்குச் சரணடைய வேண்டும்.
    சகல தர்மங்களையும் சரணம் செய்தால் கிருஷ்ண பரமாத்மா மோட்சம் அளிக்கிறார்.
  • பகவான் அலிப்பூர் சிறையில் கிருஷ்ணனை வணங்கினார்.
  • விஸ்வரூப தரிசனம் பெற்றபின் கிருஷ்ணாவதாரத்தைக் கடந்து விட்டார்.
    அர்ஜுனன் கண்ட விஸ்வரூப தரிசனம் இரண்டு. 1) உலகம் நன்மையாலானது. 2) உலகம் கோரமானது.
  • பகவான் பெற்ற விஸ்வரூப தரிசனம் அவையிரண்டையும் கடந்த சத்திய ஜீவிய தரிசனம். அதில் கோரம் திருவுருமாறி அழிந்து விட்டது.
  • விவேகானந்தர் கனவில் வந்து பகவானுக்கு சத்திய ஜீவியத்தைக் காட்டினார்.
    அதன் சித்தி விஸ்வரூப தரிசனம்.
  • சத்திய ஜீவியத்தை எப்படி அடைவது என விவேகானந்தர் கூறவில்லை.
  • யோகம் முதிர்ந்து உடல் ஜோதிமயமாக, சின்மய தேகமாக ஆகலாம் என வேதமும், வைஷ்ணவமும் கூறுகிறது.
  • அன்னை பகவானைச் சந்தித்த பொழுது கீதையின் யோகத்தை முடித்து விட்டார்.
  • பகவானுக்கு சத்தியஜீவியம் உடலில் சித்திக்க அன்னை சிவபெருமானையும், கிருஷ்ணனையும் அவருடலில் வரச் சொன்னார். சிவன் மறுத்து விட்டார். கிருஷ்ணா பகவானுள் வந்தார். அன்னை அதை பகவானிடம் கூறிய பொழுது கடவுள்களால் எனது யோகம் சுருங்குவதை நான் விரும்பவில்லை என பகவான் பதிலளித்தார்.
  • ஜீவாத்மாவை அடைவது மோட்சம். முதற் சித்தி.
  • ஜீவாத்மா பரமாத்மாவில் கரைவது பெரிய சித்தி.
  • பரமாத்மா பிரம்மத்துள் நுழைவது அதனினும் பெரியது. திரும்பி வருவது எளிதல்ல.
  • நுழைந்த ஆத்மா மேலும் உள்ளே சென்றால் திரும்ப வருவது அவதாரப்புருஷனால் மட்டுமே முடியும்.
  • பிரம்மத்தின் மையத்தை ஆத்மா அடைந்தால் ஆத்மா கரைந்து விடும். ஐக்கியமாகும். திரும்ப வரலாம் என்ற பேச்சில்லை.
  • பூரண யோகத்தில் ஜீவாத்மா பரமாத்மாவை எட்டித் தொட்டு பரமாத்மாவாகி பிரம்மத்துள் நுழையாமல் ஆத்மாவை பிரபஞ்ச ஆத்மாவாக்கி, - புருஷனாக்கி - அதை பிரம்மத்திற்கு உரிய ஈஸ்வரனாக்கும். அந்நிலையில் உலகம் அற்புதமாகும். நோய், மரணம், மூப்பு, இருள், திருவுருமாறி அழியும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்முள் உள்ள ஒவ்வொரு நல்ல குணத்திற்கும் எதிரான குணத்தை நம்முள் காண வேண்டும். அதேபோல், நம்முள் உள்ள ஒவ்வொரு கெட்ட குணத்திற்கும் எதிரான நல்ல குணத்தை நம்முள் காண வேண்டும். இரண்டும் சேர்ந்த முழுமையை அறிந்தால்தான், நாம் நம்மை முழுமையாக அறிகிறோம். நம்மை நல்லவர் என அறிந்து சந்தோஷப்படுவதோ, கெட்டவர் என அறிந்து கவலைப்படுவதோ மனித அறிவு, மனம் பெற்ற அறிவு, பகுதியானது. நல்லவர் தெரிந்தால், கெட்டவரைக் காண வேண்டும்; கெட்டவர் தெரிந்தால் நல்லவராகக் காண வேண்டும். இரண்டும் தெரியும்பொழுது முழு மனிதனைக் காண்கிறோம்.
 
ஒரு பகுதியை அறிவதை விட்டு முழு மனிதனை அறிய வேண்டும்.
 

*******



book | by Dr. Radut