Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/1. அழிய வேண்டிய நினைவுக்குச் சமர்ப்பணம் தன் அம்சத்தைக் கொடுத்துச் சமர்ப்பணமாக மாற்றுகிறது.

  • நினைவும், சிந்தனையும் மனத்தின் திறமைகள்.
  • சமர்ப்பணம் முழுமையாகும் பொழுது முதலில் நினைவும், பிறகு சிந்தனையும் கரையும்.
  • மனித முயற்சி தெய்வச் செயலாவது சமர்ப்பணம்.
  • மனித முயற்சி தவறல்ல, மனிதனை ஆட்கொள்ளும் அகந்தையின் எழுச்சி தவறு.
  • அகந்தையும் தவறற்ற நாட்கள் இருந்ததுண்டு.
  • மனிதன் வளர அகந்தை உதவிய நாட்கள் உண்டு.
    இப்பொழுது அகந்தை தடை.
  • கல்லூரி மாணவன் பரிட்சைக்குப் படிக்காமல், கதை படிப்பது தவறு.
  • முதியோர் கல்விக் கூடத்தில் கதை படிப்பது கல்வி கற்பதாகும்.
  • நம்மவருள் நினைவு வலுவாக உள்ளவருக்குப் பிரபலம் உண்டு.
  • பலரும் கண்டு பாராட்டுவர், ஆச்சரியப்படுவார்கள்.
  • அறிவு வளர்ந்த நிலையில் நினைவைவிட, சிந்தனைக்கு மரியாதையுண்டு.
  • யோகிக்குச் சிந்தனையே மௌனத்திற்குத் தடை செய்யும்.
  • அவருக்கு நினைவு பெரிய தடை.
  • சத்திய ஜீவிய சக்தி கருவியையும் உயர்த்தும்.
  • ஸ்பூனால் சாப்பிட்டால், ஸ்பூனுக்கு ருசி தெரியாது.
  • சமர்ப்பணம் சத்திய ஜீவிய சக்தி.
  • சமர்ப்பணத்திற்கு உதவும் நினைவு, சமர்ப்பணத்தால் தன் ஜீவியம் வளர்வதைக் காணும்.
  • சமர்ப்பணத்தை மேற்கொள்பவனுக்கு நினைவும், சிந்தனையும் அழிய வேண்டும்.
  • தொடர்ந்த சமர்ப்பணம் நினைவைப் பயன்படுத்துவதால் நினைவு தீட்சண்யம் பெறும் என நாம் நினைக்கலாம்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதுபோல, சமர்ப்பணத்தை அனுமதிக்கும் நினைவும் சமர்ப்பணத்தின் பலன் பெறும்.
    இதனால் நினைவு தன்னையறியாமல் சமர்ப்பணமாகும்.
    சமர்ப்பணமாகும் நினைவு, அழியும் நினைவு.
  • திருடனை வாழ்நாள் முழுவதும் கண்டு பிடிக்கும் போலீஸ்காரனுக்கும் திருட்டுப் பழக்கம் வரும் வாய்ப்புண்டு.
  • நல்லதையே தொடர்ந்து செய்யும் தவறானவர்க்கும் நல்ல பழக்கம் வரும் வாய்ப்புண்டு.
  • இயல்பான கோபமுடைய ஜட்ஜுக்கு இருதரப்பு வாதத்தைப் பொறுமையாகக் கேட்பதால், கோபம் குறைந்து சாந்தம் வருவதுண்டு.
  • எதிராகவும் சட்டம் செயல்படும்.
  • சர்வீஸ் முழுவதும் அமைதியாக வக்கீல் பேசுவதைக் கேட்டிருந்த ஜட்ஜுக்கு இயல்பான கோபம் அடங்கி உள்ளே வளர்ந்து ஓய்வு பெற்றபின் அதிகமாவதுண்டு.
  • சமர்ப்பணத்தின் கருவியாகத் தொடர்ந்து செயல்பட்ட நினைவும் சமர்ப்பணத்தால் பாதிக்கப்பட்டு அழியும் வாய்ப்புண்டு.
  • நினைவு அழிந்தால் சமர்ப்பணம் வளரும். நினைவழிந்த மனம் லயத்தை நாடும்.
  • லயம் சித்திக்க நினைவும், சிந்தனையும் அழிய வேண்டும்.
  • நினைவழிவது லயம் சித்திப்பதில் முதற்பகுதி.

*******



book | by Dr. Radut