Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 154: But now the Light supreme is far away

இந்த நேரம் அந்தப் பெருஞ் ஜோதி விலகி நின்றது

  • தெளிவான நம் வாழ்வு கண்மூடி சட்டத்தை ஏற்கிறது
  • குருட்டு ஆசைகளும், அறியாமையின் இலட்சியங்களும்
  • மாறுவேடத்திலுள்ள எதிரியை மனம் நாடுகிறது
  • சிதைந்த கிரீடம், மனம் பெற்ற வெற்றிகள்
  • மெதுவாக மாறும் நியதி நம்மைக் கட்டுப்படுத்தும் சட்டம்
  • ஆத்மா விடுதலை பெறும்வரை இதுவே நம் கதி
  • திருவுள்ளத்தின் திருக்கரம் அறிவின் வானத்தைச் சுருட்டி மடக்குகிறது
  • அனந்தம் அணுவைப் பேணுகிறது
  • இயற்கையெழுந்து யுகாந்த ஜோதியை ஏற்கிறது
  • இத்தாழ்ந்த வாழ்வின் கனவு கலைந்தது
  • புரியாத புதிரான இவ்வாழ்வின் ஆரம்பத்தில்
  • பிரம்மாண்டமான முரட்டு யந்திரம்போல் விளங்கும்
  • திரைமறைவிலிருந்து மெதுவாக எழும் ஆத்மாபோல
  • சுவரில்லாத இவ்வறை சுழன்று வருகிறது
  • எங்கும் எழுந்தருளியுள்ள ஏகன் அவனே
  • தன்னையறியாதவன்போல, நம் கண்ணுக்குப் புலப்படாமல்
  • ஜடம் இருளாகி இரகஸ்ய வடிவம் பெற்று அற்புதத்துள்
  • அதுவும் அவனே, எதுவும் அவன் செயலே
  • அனந்த சூன்யம் அடிகொண்டு கிளறும் ஆர்ப்பாட்டம்
  • ஆன்மா ஜடமாகி சூறாவளியின் சுழலாயிற்று
  • உணர்வும் ஆன்மாவுமின்றி உழலும் உடலின் உறக்கம்
  • விளங்கும் ரூபம் விசாலமாகப் பரவும்
  • சூன்ய மௌனம் அளிக்கும் ஆதரவு
  • பிரம்ம ஜீவியத்தில் எழுந்து உலவியது
  • சொரணையற்ற புற உலகத் தோற்றம்
  • பார்க்கும் மனிதரில்லை, உணரும் உள்ளமுமில்லை
  • ஜட இருளின் அற்புதம் கொலு வீற்றுள்ளது
  • சூட்சும அசகாயசூரன் கடை விரித்தான்
  • மந்திரப் பலனுக்கு மாயக்களைக் கண்டான்
  • சிருஷ்டியின் மகத்தான மகிமைகளை நிர்வகித்தான்
  • ஊமை விவேகத்தின் யந்திர சலனம்
  • தவிர்க்க முடியாத எண்ணம், தலையில் உதிக்காதது
  • இறைவனின் அறிவை செயல்படுத்த முயன்றது
  • உயர்ந்த மறைபொருளின் உறுதியை உலகுக்களித்தது

********

ஜீவிய மணி
 
மனமாற்றத்தின் அம்சங்கள்:
 
  • நல்லவனாக இரு.
  • எண்ணத்தாலும் தூய்மையாக இரு.
  • எண்ணத்தின் உற்பத்தி ஸ்தானத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும்.
  • தீமைக்கு எதிரான நல்லது, சிறிய நல்லது.
  • தீமையோடு தொடர்பற்ற நல்லதே பெரிய நல்லது, முழுமையான நல்லது.
  • எண்ணத்திலும், உணர்விலும், செயலிலும், அவற்றின் உற்பத்தி ஸ்தானத்திலும் நல்லது மட்டும் உள்ள நல்லவனாக இருத்தல் வேண்டும்.
 

*******



book | by Dr. Radut