Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

25. ஜடத்தின் முடிச்சு

நூலுக்கு அடிப்படையாக சில கருத்துகளை நாம் எடுத்துக் கொண்டோம். அவை நமக்கு ஒரு முடிவைத் தருகின்றன. நாம் ஏற்றுக்கொண்ட அடிப்படையினின்று வேறு எந்த முடிவுக்கும் வர முடியாது. மனித வாழ்வின் அனுபவம் ஜடத்தையும், ஆன்மாவையும் தீவிரமாகப் பிரிக்கின்றது. அது மனம் பெற்ற நெடுநாள் பழக்கம். நாம் வந்த முடிவுகள் அப்பிரிவினையை ஏற்க மறுக்கின்றன. நம் முடிவுகளின்படி அப்பிரிவினைக்கு அடிப்படையோ, அதற்குரிய சத்தியமோ இல்லை. உலகம் பலதரப்பட்ட ஒருமையால் நிறைந்தது. தோற்றம் பிரித்துக்காட்டினாலும், பின்னணியில் அடிப்படை இணைந்து ஒற்றுமையை நிலைபெறச் செய்கிறது. சாஸ்வதமான பிரிவினை உணர்வுகள் எங்குமில்லை. பிரிவினையில்லை என்பது மட்டுமல்ல, பிரிந்தவற்றை இணைக்கும் முயற்சியும் தெரியவில்லை. நிரந்தரமாகப் பிரிந்தவை முயன்று ஒன்று சேர முயலும் போக்கையும் காணோம். இணைய முடியாத எதிர்ப்புகள் எங்குமில்லை. மாறாக நீக்க முடியாத ஒருமை எங்குமுள்ளது. அது அனந்தமான ரகங்களை ஏற்படுத்துகிறது. அதுவே அடிப்படையில் ஆரம்பம். பிரிவினை தோற்றமாக உள்ளது. போராட்டம் நம் கண்ணில்படுகிறது. போராட்டத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் முயற்சி பிரிவினையைப் போக்கும் முயற்சி. இவை இரகசியமான ஜீவியத்தின் நீண்ட நாள் குறிக்கோளாகும். அதுவே இலட்சியம். அங்கு உறுதியும் காணப்படுகிறது. உறுதி உறுதியான செயல், சிக்கலைச் சிறப்பாக வெளிப்படுத்தும் நிலையான உறுதியான செயல். இதுவே உண்மையின் உள்ளர்த்தமாகிறது. நாம் ஒரு முடிவான பூர்த்தியை எதிர்பார்க்கிறோம். அது ஜீவியம் உறுதியாக மறைவினின்று எழுவது. அற்புதமான வெற்றியை அறிவிப்பதே முடிவு. பொருள் என்பது ஒருவகையான ரூபம். அது தன்னைத்தானே செயல்படச் செய்யும். அப்பொருளின் ஓர் எல்லை ஜடம். ஆன்மா அடுத்த எல்லை. நாம் ஜடம் எனக் காண்பதின் ஆத்மாவும், சத்தியமும் ஆன்மாவாகும். ஜடம் ஆன்மாவின் உடலும் உடையுமாகும்.

உண்மையில் பெரிய நடைமுறை வித்தியாசம் உண்டு. படிப்படியாக உயரும் வாழ்வு நிலைகள் உண்டு. அது ஒரு தொடர். பகுக்க முடியாத பொருளாலானது. அது உலக வாழ்வு. அவ்வாழ்வு இத்தொடரின் அடிப்படையில் ஏற்பட்டது. பொருள் ஜீவனுள்ள வாழ்வு. பொருள் புலனுக்குரிய புற நிகழ்ச்சியான பொருள். புலன் தொடர்பு அப்படி ஏற்படுகிறது. அதுவே உலகம் உருவாகும் வேலை. அது பிரபஞ்சம் முன்னேறும் வழி. அது இவ்வகையாகச் செயல்படுகிறது. ஒரு அடிப்படை மட்டுமிருக்க வேண்டும் என்பதில்லை. அது அடிப்படையான உறவு. அது உறவின் சட்டம். பொருளுக்கும், புலனுக்கும் இடையே மாற்றமறியாத உறவாக அது எழுகிறது. மாறாக அது ஒரு தொடர். அது படிப்படியாக உயரும் தொடர். அது வளரும் தொடர். வேறொரு பொருள் தென்படுகிறது. தூய்மையான மனம் அதில் செயல்படுகிறது. அது இயல்பான சூட்சுமமான இடைவெளி. அது மென்மையாக மாறும் தன்மையை மிருதுவாகப் பெற்றது. நம் ஜட உணர்வு அதைவிட சூட்சுமமானதைக் கற்பனை செய்ய முடியாது. மனத்தின் பொருள் என நாம் அதைக் கூறலாம். அங்கு அதிக சூட்சுமமான பாதையைக் காணலாம். அப்பாதையில் ரூபங்கள் எழும். அங்கு செயலுண்டு. வேறு ஒரு பொருளையும் கருதலாம். அது தூய்மையான தீவிரமான வாழ்வின் சக்தி. ஜடப்பொருளின் சூட்சும ருபங்களினின்று மாறுபட்டது அது. உடலால் உணர முடியும் சக்தி ஓட்டங்கள் அவை. ஆன்மாவே ஜீவனுடைய பொருள். ஆன்மா புறப்பொருளாக நிற்கிறது. அது ஜட வாழ்வு. மனத்தின் புலன்கட்குரியதல்ல. தூய்மையான ஆன்மீகப் பரிச்சயத்திற்குமுன் அது தன்னை நிறுத்துகிறது. அங்கு அகமே புறம். காலத்தைக் கடந்ததும், இடத்தைக் கடந்ததும் அங்கு தன்னை அறியும். அது தூய்மையான ஆன்மீகச் சிந்தனைக்குரிய சுய நீட்சி. அது அடிப்படையான பொருளின் அஸ்திவாரம். அடிப்படையைக் கடந்ததுண்டு. தன்னையறியும் பிரியாமற்பிரிபவை அனைத்தும் அங்கு மறைகின்றன. அது அகம் புறத்தின் இடைப்பட்டது. ஐக்கியத்தின் ஒற்றுமை முழுமை பெற்ற இடம் உண்டு. அங்கு பொருள் என்பது பொருளை இழக்கும்.

இது முழுவதிலும் சிந்தனைக்குரிய வித்தியாசம். இது மனத்தின் சிந்தனையல்ல. ஆத்ம சிந்தனை. இம்மாறுதல் நடைமுறை வித்தியாசத்தில் முடியும். இதுவே அடுக்குத் தொடரை சிருஷ்டிப்பது. இது ஆன்மாவிலிருந்து ஜடத்திற்குப் படிப்படியாக இறங்கி வருகிறது. இது மனத்தின் வழி நடக்கிறது. மறுபடியும் அது உயர்ந்து ஆன்மாவை அடைகிறது. மீண்டும் அது மனம் வழிச் செல்கிறது. அடிப்படையான ஒருமை எப்பொழுதும் அழிவதில்லை. நாம் ஆரம்பக் கருத்தைக் கருதுவோம். அது ஒருங்கிணைந்த முழுமையான கண்ணோட்டம். அது எப்பொழுதும் எந்த சிறு அளவிலும் குறையவில்லை. அது சிதைக்கப்படவில்லை. ஜடத்தின் கனத்த இருளிலும் அது பாதிக்கப்படவில்லை. பிரபஞ்சத்தின் மூலமும், ஆதரவும் பிரம்மமாகும். அது பிரபஞ்சத்துள் உறையும் தத்துவமுமாகும். மேலும் பிரம்மமே பொருள். அது மட்டுமே பொருளாகிறது. ஜடமும் பிரம்மம். அது பிரம்மம் தவிர வேறெதுவுமில்லை. அது பிரம்மத்திலிருந்து வேறுபட்டதில்லை. ஜடத்தைப் பிரம்மத்திலிருந்து வெட்டிப் பிரித்ததாகக் கொள்வோம். அப்பொழுது அது உண்மையில்லை. ஜடம் தெய்வீக வாழ்வின் முடிவான ரூபம் எனக் கண்டோம். அது புற அம்சம். கடவுளின் எல்லா அம்சமும் அதனுள் உறைகிறது. கடவுள் ஜடத்தின் பின்னணியில் உள்ளார். பார்வைக்கு ஜடம் ஜீவனற்ற முரட்டுத்தனமானது. அது எங்கும் உள்ளது. ஜடத்திற்கு வாழ்வின் சக்தி ஜீவனோடுள்ளது. ஜடம் பலமான, தீவிரமான சக்தி. ஜடம் தீவிரமானது. ஜீவனற்ற வாழ்வுடையதாகக் காணப்படுகிறது. தன்னுள் மனத்தை இது ஊற்றாக உற்பத்தி செய்கிறது. மனம் எங்கும் உள்ளது. அது பார்வையில் படாமல் எங்கும் வேலை செய்தபடி உள்ளது. அதன் இரகசியங்கள் சக்தியுள் உள்ளன. அஞ்ஞானமான மனம் இருளடைந்து தடுமாறும். அது உயிருள்ள உடலில் உள்ளது. அதற்கு ஆதரவுண்டு. சுதந்திரமாக வழிகாட்டியும் உண்டு. அதன் சொந்த ஆத்மா அதைச் செய்கிறது. அது சத்திய ஜீவியம். மனம் ஊடுருவாத ஜடத்துள் அது உள்ளது. எனவே எல்லா மனம், வாழ்வு, உடல், சத்திய ஜீவியமும் பிரம்மமே, பிரம்மத்தின் அம்சங்களே. பிரம்மம் சாஸ்வதமானது. அது ஆத்மா, சச்சிதானந்தம். அனைத்துள்ளும் அது உண்டு. அனைத்தும் பிரம்மமே. எந்த ஒன்றும் தனியாக பிரம்ம ஜீவனாகாது.

இருந்தாலும் சிந்திக்கும் வித்தியாசம் உண்டு. நடைமுறையில் அவை வேறு. ஜடம் ஆன்மாவினின்று வெட்டி விலக்கப்படவில்லை எனக் கொள்வோம். இருந்தாலும் இந்த நடைமுறை மாறுதல்களால், அவை விலக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவை வேறுபட்டவை. இது சட்டத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கலாம். ஜட வாழ்வு மறுப்பாகத் தெரிகிறது. எல்லா ஆன்மீக வாழ்வையும் அது மறுப்பதாகத் தோன்றுகிறது. அப்படி மறுப்பது குறுக்கு வழியாகும். சிரமத்தை விலக்கும் குறுக்கு வழியது. அது நிச்சயம். அது குறுக்கு வழியாகவோ, எந்த வழியாகவோ இருக்கலாம். ஆனால் அது தீர்வாகாது. எப்படியானாலும் சிக்கலின் சிகரம் ஜடம். அதில் ஐயமில்லை. அது தடையை எழுப்பும். ஜடத்தால் வாழ்வு அளவுள்ளதாகவும், மட்டமானதாகவுமாகிறது. மரணமும், வலியும் அதை வதைக்கின்றன. ஜடத்தால் மனம் ஒரு கண்ணை இழக்கிறது. அதன் சிறகு ஒடிகிறது. அதன் கால்கள் குறுகிய பீடத்தில் கட்டுண்டன. மேலேயுள்ள பரந்த சுதந்திரத்தை அவை இழக்கின்றன. அதை ஜடம் அறியும். ஆன்மாவை மட்டும் நாடும் சன்னியாசியைக் கருதுவோம். அவரது கொள்கை சரி. ஜடத்தின் சக்தி அவருக்கு வெறுப்புத் தருகிறது. வாழ்வு மிருகத்தனமாக இருப்பது சன்னியாசிக்கு வெறுப்பை உண்டாக்குகிறது. அதன் குறுகிய நோக்கம் சன்னியாசியின் பொறுமையைச் சோதிக்கிறது. அவர் மனப்போக்கு கீழ் நோக்கியது. அதனின்று விலக அவர் முடிவு செய்கிறார். செயலற்ற மௌனம் அவரை ஈர்க்கிறது. அது ஆன்மாவின் அசைவை இழந்த சுதந்திரம். அது மட்டுமே கொள்கையாகாது. அது உயர்ந்தது, உன்னதமானது, தங்கமான உதாரணங்கள் பல உள. அதன் முடிவான இணைந்துள்ள ஞானத்தை நாம் கருத வேண்டாம். தீவிரமான ஆசையினின்றும், மறுக்கும் புரட்சி மனப்பான்மையினின்றும் நாம் விலக வேண்டும். உலகிலும், பிரபஞ்சத்திலும் தெய்வீக வாழ்வு என்ன என்பதைக் கருதுவோம். இது ஜடத்தின் பெரிய சிக்கலான முடிச்சு. அது ஆன்மாவை மறுக்கிறது. அதன் பிரிந்து விலகும் இழைகளைக் காண்போம். அது பிரிப்பது சரி. ஒரு தீர்வால் அம்முடிச்சை அவிழ்ப்போம். வன்முறையால் வெட்டி அகற்ற முயல வேண்டாம். சிரமத்தை எடுத்துக் கூறுவோம். சிரமம் எதிர்ப்பு. முழுமையாக, தீவிரமாக, பெரிதுபடுத்தி அதை முதலில் கூறுவோம். அவசியமானால் சுருக்கியும் கூறலாம். அதன் விளைவைக் கருதுவோம். இது ஜடத்தின் முதல் எதிர்ப்பு. ஆன்மாவுக்கு எதிர்ப்பு. இது அஞ்ஞானம். இதை அஞ்ஞானத்தின் முடிவு எனலாம். ஜீவியம் வேலையில் தன்னை இழப்பது அஞ்ஞானம். வேலையின் ரூபத்தில் ஜீவியம் தன்னை மறக்கிறது. ஒருவர் வேலையில் தன்னை மறக்கிறார். தான் உயிருடனிருப்பதையே அவர் மறக்கிறார். அந்த க்ஷணம் அவர் வேலையாகவே மாறுகிறார். அந்த வேலையைச் செய்யும் சக்தியாகவே மாறுகிறார். ஆன்மா சுயம்பிரகாசமானது. அது தன்னை அனந்தமாக அறியும். எல்லா சக்தியின் செயலுக்கும் பின்னால் ஆன்மா உள்ளது. அதுவே அதன் தலைவன். அது மறைந்ததாகத் தோன்றுகிறது. அது இருப்பதாகவேயில்லை. எங்கோ அவனிருக்கலாம். இங்கு அவன் விலங்கான ஜட இருளாக, அதன் சக்தியாக இருக்கிறான். அது சாஸ்வதமாக சிருஷ்டித்து அழிக்கிறது. அது தன்னை அறியாது, எதை சிருஷ்டித்தோம், ஏன் சிருஷ்டித்தோம், என அறியாது. அல்லது சிருஷ்டித்ததை ஏன் அழித்தோம் என்றும் அறியாது. மனம் இல்லாததால் அது தன்னையறியாது. அதற்கு நெஞ்சமில்லாததால் பொருட்படுத்தாது. ஜட லோகத்திற்கு உண்மையுண்டு. இது அந்த உண்மையாக இல்லாமலிருக்கலாம். இந்த எல்லா தோற்றத்தின்பின் மனம் என ஒன்றுண்டு. உறுதியுண்டு. மனத்திற்கும், உறுதிக்கும் பெரியதும் ஒன்றுண்டு. இருந்தாலும் அது கரியது. அவையாகத் தோன்றுபவை. ஜடலோகம் தன் ஜீவியத்திற்கு சத்தியமாகத் தோன்றுகிறது. இருளிலிருந்து ஜீவியம் எழுகிறது. ஆனால் அது உண்மையில்லை. அது பொய். அது பெரிய பொய். ஏனெனில் அது நம் தோற்றமான வாழ்வை நிர்ணயிக்கும். நம் முயற்சி, ஆர்வத்தை எல்லாம் அது ஆக்ரமித்துக் கொள்கிறது. ஜடம் பயங்கரமானது, பச்சாதாபமற்ற, கடுமையான ஆச்சரியகரமான ஜடலோகம் அது. மனமற்ற இதனின்று ஒரு மனம் அல்லது பல மனங்கள் எழுகின்றன. அவை ஜோதியைப் பெறப் போராடுகின்றன. தனிப்பட்ட முறையில் அதற்கு எதுவும் செய்வதற்கில்லை. தன்னைப் பாதுகாக்க அதுவும் முடியாத நிலை. அவை ஒரு ராட்சத அஞ்ஞானத்துள் உறைகின்றன. தனிப்பட்ட முறையில் அவை பலஹீனமானவை. அஞ்ஞானம் பிரபஞ்ச சட்டம். இதயமற்ற ஜட இருள் இது. அதன் எல்லை கடுமையானது. அதிலிருந்து இதயங்கள் எழுகின்றன. அவை ஆர்வத்தால் எழுந்தாலும் கொடுமைப்படுத்தப்படுகின்றன. கொடுமையால் இரத்தம் சிந்துகின்றன. கொடுமை குருடாக, சொரணையற்றதாக இருக்கிறது. இது இரும்பாலான வாழ்வாகக் காணப்படுகிறது. கொடுமை அதன் சட்டத்தை அமுலாக்குகிறது. அதற்குச் சொரணை உரைக்கிறது. அது ஆபத்தானது, பயங்கரமானது, மிருகம் போன்றது. புதிராகத் தோன்றும் இது என்ன? இதன் தோற்றத்தின்பின் என்ன இருக்கிறது? அது ஜீவியம். அது மீண்டும் தன்னை வந்தடைகிறது. அது அதனுள் தன்னை இழக்கிறது. பயங்கர மறதியினின்று அது எழுகிறது. மெதுவாக வலிபட்டு எழுகிறது. சொரணையுள்ள வாழ்வுக்கு அது மீண்டும் வருகிறது. அரைகுறையான சொரணையுடையது அது. லேசான சொரணையுடையது. முழுச் சொரணை உடையது. முடிவாக சொரணையைக் கடந்த நிலையையடைய அது போராடுகிறது. சுதந்திரமான, அனந்தமான, அழியாத, தெய்வீக சொரணையை அடைய முயல்கிறது. இதை நோக்கி ஒரு சட்டப்படி அது செல்கிறது. அந்தச் சட்டம் இவை அனைத்திற்கும் எதிரானது. இது ஜட நிபந்தனையின் பேரில் வேலை செய்கிறது. அதாவது அஞ்ஞானப்பிடிப்பிற்கு எதிராகச் செயல்படுகிறது. அதன் பாதை முன்கூட்டி வகுக்கப்பட்டது. அது அளவையும், அஞ்ஞானத்தையும் வலியுறுத்துகிறது. அது துண்டாடப்பட்ட ஜடம். ஒவ்வொரு கட்டத்திலும் அது அளவையும், அஞ்ஞானத்தையும் வலியுறுத்தும்.

இது ஜடத்தின் இரண்டாம் அடிப்படையான எதிர்ப்பு. ஜடம் ஆத்மாவை அதன் மூலம் எதிர்க்கிறது. இயந்திரச் சட்டம் கட்டுப்படுத்துவதன் முடிவு இது. அது ஒரு பிரம்மாண்டமான தமஸ். விடுதலையை நாடும் எதையும் எதிர்க்கும் பாங்குடையது தமஸ். ஜடமே தமஸானதல்ல. அது அனந்தமான சலனம் உடையது. ஜடம் கற்பனைக்கெட்டாத சக்தி. அதன் செயல் அளவிறந்தது. அதனலைகள் பெருமையுடைய பேரளவுடையவை. நாம் அதை இடையறாது பாராட்டலாம். ஆன்மா சுதந்திரமானது. ஆன்மா தன் செயல்களுக்கும், தனக்கும் தலைவன். ஆன்மா அதன் செயல்களால் கட்டுண்டதில்லை. ஆன்மா சட்டத்தை இயற்றும். ஆனால் தன்னை அச்சட்டத்திற்கு உட்படுத்தாது. ஜடம் ராட்சதனைப் போன்ற பிரம்மாண்டமான உருவம் கொண்டது. விலங்குகளால் அசைய முடியாதபடி அது சிறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டங்கள் நிலையானவை, இயந்திரம் போன்றவை. இவை தம்மை மற்றவற்றின்மீது திணிக்கும் திறனுடையவை. ஜடத்திற்கு இந்தச் சட்டங்கள் புரியாது. ஜடம் இவற்றைத் தன் சிந்தனையில் உருவாக்கவில்லை. அவை ஜீவனின்றி செயல்படுகின்றன. ஒரு மெஷின் போல வேலை செய்கிறது. யார் இவற்றை சிருஷ்டித்தார் என அது அறியாது. அதன் முடிவோ, முறையோ ஜடத்திற்குத் தெரியாது. வாழ்வு விழித்தெழுகிறது. வாழ்வு ஜடரூபத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. அதையே ஜடசக்தியின் மீதும் செலுத்த முயல்கிறது. தன் அளவில் வாழ்வு அனைத்தும் ஆகும். தன் சொந்த தேவைக்காக அது செயல்படுகிறது. மனம் விழித்து யார், என்ன, எது, எப்படி என்ற கேள்விகளை எழுப்புகிறது. மனம் அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதையும் கடந்து தான் பெற்ற ஞானத்தை அது பயன்படுத்த விரும்புகிறது. தன்னுடைய சுதந்திரமான சட்டத்தைப் பயன்படுத்த அது இதைச் செய்கிறது. சொந்தமான சட்டத்தை மற்றவர் பின்பற்றச் செய்யும் முயற்சியிது. ஜடம் அடங்குகிறது. ஜடம் மனத்தின் செயலை ஆமோதித்து உதவி செய்கிறது. கொஞ்சநாள் ஜடம் போராடுகிறது. தயக்கத்துடன் போராடுகிறது. அது போராடுவது ஓரளவுதான். அதைக் கடந்த நிலையில் பிடிவாதமான தமஸ் எழுகிறது. அது தடை செய்து மறுப்பை எழுப்புகிறது. மனத்தையும், வாழ்வையும் மேலும் போகக் கூடாது என ஜடம் கேட்டுக் கொள்கிறது. வெற்றி பகுதியானது. முடிவுவரை இது பயன்படாது. வாழ்வு வளர்ந்து நீடிக்க முயல்கிறது. அது வெற்றி பெறுகிறது. அமரத்துவத்தையும் அகன்ற வாழ்வையும் வாழ்வு நாடுகிறது. ஜடம் இரும்பாக எதிர்க்கிறது. குறுகி சாவது வாழ்வு. மனம் வாழ்வை ஆதரிக்கிறது. அது தன் பிரியத்தைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்கிறது. அது ஞானத்தையும், ஜோதியையும் தழுவும். சத்தியத்தை நாடி ஞானமாகவும், ஜோதியாகவுமாக முயல்கிறது. அன்பையும், சந்தோஷத்தையும் அமுல்படுத்தி அவையாக மாற முயல்கிறது. எந்த நேரமும் திசை திரும்பலாம். ஜடவாழ்வின் சொரணைகளில் குறையுண்டு, தெளிவற்ற நிலையும் உண்டு. அது தடை, மறுப்பு. ஜடத்தின் புலன்களையும் ஜடத்தின் கருவிகளையும் அது மறுக்கிறது. குறை தன் ஞானத்தைத் தொடர்கிறது. இருள் பிரியாத தோழன். அது ஜோதியின் பின்னணி. சத்தியத்தைத் தொடர்ந்து பின்பற்ற முயற்சியுண்டு. வெற்றி கிடைத்தபின் அது சத்தியமாக இருப்பதில்லை. முயற்சி தொடர வேண்டும். அன்புண்டு, ஆனால் அது திருப்தி தருவதில்லை. சந்தோஷமுண்டு. ஆனால் அது தான் செய்வது சரியென்று கூறாது. இரண்டிற்கும் விலங்குண்டு. தம் நிழலே எதிர்ப்பதாக அவை செயல்படுகின்றன. அவை கோபம், வெறுப்பு, பராமுகம், தெவிட்டுவது, கவலை, வலி. தமஸ் அஞ்ஞானத்தை வெல்வதைத் தடுக்கிறது. ஜடம், மனம் வாழ்வின் முயற்சிக்குத் தமஸை பதிலாகக் கூறுகிறது. மிருக பலம் எதிர்க்கிறது. அது அஞ்ஞானத்தின் பவர்.

இது ஏன் இப்படி என அறிய நாம் விரும்புகிறோம். இவற்றின் பின் ஒரு காரணம் உண்டு. தமஸ் வெற்றி பெற வேறொரு அடிப்படைக் காரணம் உண்டு. தமஸ் தடை செய்கிறது. அடிப்படைக் காரணம் பிரிவினை. அது மூன்றாம் அடிப்படைக் காரணம். பிரிவினையும் போராட்டமும் முடியுமிடம் இது. சத்தியம் பகுக்க முடியாதது. பிரிவினை செயலுக்கு முழு அடிப்படை. இந்தச் சட்டத்திலிருந்து விலகவும் ஜடம் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு இரண்டு முறைகள் உண்டு. இணைவதும், தொகுப்பும் அவ்விரு முறைகள். தன்னுள் ஈர்த்துப் பெறுவது அடுத்த முறை. ஒரு பகுதி மற்ற பகுதியால் அதற்கு அழிக்கப்பட வேண்டும். இவ்விரண்டு முறைகளும் அவை சாஸ்வதமான பிரிவினை என்று கூறுகின்றன. முதல் முறை இடைவிடாத பிரிவினையை விளக்குகிறது. சேர்ப்பதை விட இச்சட்டத்தை அவை வெளிப்படுத்துகின்றன. பிரிய வேண்டிய நிர்ப்பந்தம் முடிவானது என்றாகும். பிரிவது கரைவது. இருமுறைகட்கும் அடிப்படை மரணம். ஒன்று முறையாகக் கையாள்கிறது. அடுத்தது வாழ்வின் நிபந்தனையாக இதைப் பின்பற்றுகிறது. இரண்டும் வேறொன்றின் அவசியத்தைக் கூறுகின்றன. அது இடைவிடாத போராட்டம். உலக வாழ்விற்கு அப்போராட்டம் தேவை. பிரிந்த பகுதிகளின் போராட்டமிது. ஒவ்வொன்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. அவற்றின் தொடர்பைத் தொடர்கின்றன. அதை எதிர்ப்பவற்றை அழிக்கும் அல்லது நிர்ப்பந்தப்படுத்தும். அவை சேர்ந்து உணவாக மற்றதை விழுங்கும். அதுவே புரட்சி செய்ய ஆரம்பிக்கிறது. நிர்ப்பந்தத்தினின்று ஓட்டம் பிடிக்கிறது. அடுத்தது விழுங்குவதினின்று தப்பிக்கிறது. ஜடத்தின் செயல்களில் வாழ்வின் சட்டம் வெளிப்படுகிறது. இந்த அடிப்படையை அது அங்குக் காண்கிறது. அது அதன் அனைத்து செயல்கட்கு மட்டும் உரியது. இந்தத் தவிர்க்க முடியாத நிபந்தனைக்குத் தலைவணங்குகிறது. மரணம் ஆசை, அளவு என்ற சட்டங்களை ஏற்க வேண்டியதாகிறது. விழுங்கவும், ஆளவும், ஆக்ரமிக்கவும் தொடர்ந்த போராட்டமுண்டு. இதுவே வாழ்வின் முதற்சட்டம். மனத்திற்குரிய சட்டம் ஜடத்தில் காணப்படும். அதே சட்டத்தை அது ஏற்க வேண்டும். அது செயல்படும் அச்சு, பொருளில் அவற்றை ஏற்க வேண்டும். அளவு என்ற அதே சட்டப்படிச் செயல்பட வேண்டும். நிலையான முடிவைக் காணாமல் தொடர்ந்த தேடலாகும் அது. தொடர்ந்து பெறுவதும் இழப்பதும் ஆன முறை அது. அதன் செயலின் அம்சங்களில் அதுவே உண்டு. மனிதன் தேடும் ஞானம் முடிவானதல்ல என நாம் காண்கிறோம். மனிதன் மனத்திற்குரியவன். சந்தேகமும் மறுப்பும் நிற்பதில்லை. அவனுடைய முயற்சியெல்லாம் கண்டிக்கப்படுகிறது. செயலும் மறுப்பும் மாறி வரும் அலைகளாகச் செயல்படுகின்றன. முடிவதும், அழிவதும் முறையாகும். சிருஷ்டி சுழலாக வரும். கொஞ்ச நாள் காத்து, நெடுநாள் அழிவதாக முடிகிறது. முடிவான நிலையான முன்னேற்றமில்லை.

நம் வாழ்வு உயிரும் மனமுமானது. அஞ்ஞானம், தமஸ், பிரிவினை ஜடத்திற்குரியன. மனமும், உயிரும் ஜடத்திலிருந்து எழுகின்றன. இம்மூன்றும் வலி, போராட்டம், நிம்மதிஇன்ø மயை மற்றவற்றின்மீது திணிக்கின்றன. திருப்தி இல்லாமல் நிம்மதி அழிகின்றது. இந்த மூன்று நிலைகட்குரிய அதிருப்தியது. மனத்தின் ஜீவன் முழுவதும் அஞ்ஞானமாக இருக்கும் பொழுது அப்படியிருக்கும். பழக்கம் என்ற கூட்டினுள் இருந்தால் அப்படியிருக்கும். அப்படியிருந்தால் அதற்குத் தன் அறியாமையே தெரியாது, அல்லது அதன் சுற்றுப்புறம் தெரியாது. அது அனந்தமான ஜீவிய சமுத்திரம் என ஞானம், ஜடம் இந்தச் சூழலை விழித்துப் பார்க்கிறது. அது புதியதாக எழும் ஜீவியம், துல்லியமாக அதுபோல் எழும். முதலில் அது உலகில் அஞ்ஞானத்தைக் காண்கிறது. அது இவ்வுலகில் வாழ்கிறது. அது உலகையறிந்து அதை அடக்க வேண்டும். அதன்பின் அது சந்தோஷப்படலாம். இரண்டாவதாக அது தன் லிமிட்டை அறிகிறது. இது முடிவான வறட்சியுடையது. அது ஞானத்தின் வரம்பு. பவரும், சந்தோஷமும் பற்றாக்குறையாகவும், நிலையற்றுமிருப்பதால் இந்நிலை. அதை அனந்த ஜீவியமாக்க வேண்டும். இதற்கு ஞானமும் உயிரும் உண்டு. முடிவற்ற சந்தோஷத்தை அங்கேயே காணலாம். தமஸ், தடை. அதனால் நிம்மதியை அழிக்க முடியாது. அதிருப்தியை ஏற்படுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி பெறும் உயிருக்கு உயிரில்லா விட்டால் அப்படியிருக்கும். தன் அரைகுறை ஜீவனில், அளவுக்குட்பட்ட வாழ்வில் அது திருப்திபடலாம். அந்நிலையில் தன் அனந்தமான பவரை அது அறியாமல் இருக்கலாம். அதன் வாழ்வு அமரத்துவம் பெற்றது. அதனுள் பகுதியாக வாழ்கிறது. அதிலிருந்து பிரிந்து நிற்பது உண்மை. இம்முயற்சியை அதனுள் எதுவும் நாடாவிட்டால் அப்படி இருக்கும். அதன் அனந்தத்திலும், அமர வாழ்விலும் அது பங்கேற்கிறது. வாழ்வனைத்தும் அப்படியே இதை நாட முயல்கிறது. முதலிலிருந்து வாழ்வு இதையறியும். அதற்குப் பாதுகாப்பில்லை. அதனால் அது தன்னை வற்புறுத்திப் போராட வேண்டியுள்ளது. தன்னைக் காப்பாற்ற அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. முடிவாகத் தன் வாழ்வு லிமிட்டிற்கு உட்பட்டது என அறிகிறது. பெருநிலையை நோக்கி நகரும் உள்ளுறை உந்துதலை அது இப்பொழுது உணரும். அனந்தமும், சாஸ்வதமும் அழைப்பதை ஏற்றுச் செயல்படுவதில் முனைந்திருக்கும் நிலையது.

மனிதனில் வாழ்வு தன்னையறியும். அந்நிலையில் இந்த தவிர்க்க முடியாத போராட்டம் அவனுள் மாறுகிறது. அதிக நுணுக்கமாகப் போராட்டத்தை உணர்கிறான். அது முயற்சி, ஆர்வமுமாகும். அது தன் உச்சகட்டத்தை அடையும். வலியும், பிணக்கும் உலகின் நுணுக்கமாகின்றன. அவற்றை மனிதன் ஏற்றுத் திருப்தியடைய முடிவதில்லை. வெகுநாள் மனிதன் பொறுமையாக இருக்கலாம். தன் வரையறைகளை ஏற்று திருப்திபட முயலலாம். அல்லது தன் போராட்டங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஜட உலகில் அது மட்டுமே முடியும் என்றாகிறது. மனிதன் அவ்வுலகில் வாழ்கிறான். தன் அறிவு வெற்றி பெறலாம் — அறிவாலோ, செயலாலோ — என அவன் நினைக்கலாம். அது வளரும் ஞானம். ஜடம் இறுகிய அமைப்புகளை வெல்லும் செயலது. அவை அவன் மனஉறுதிக்குரியன. சிறிய, தெளிந்த, தீவிரமானவை. உந்தும் சக்தியை அது அடக்கும். அது ஜடமான சக்தி. அவை பயங்கரமானவை. பெரும்பலனுண்டு. இங்கும் தன் லிமிட்டைக் காண்கிறான். அவை அரைகுறையான அர்த்தமற்றவை. தன் நிலையைக் கடந்து அவன் செயல்பட வேண்டும். சிறியது திருப்தியடைய முடியாது. அது நிலையானதல்ல. அது தன்னையறியும்வரை நிலையற்றிருக்க முடியாது. இருந்தாலும் தோற்றம் சிறிய ஜீவனாகிறது. தான் உண்மையில் அனந்தம் என அறிகிறான். அல்லது உள்ளதின் பெருமையை அதிகமாக உணரலாம். அல்லது முயன்று முன்னேறும் அகண்டத்தின் உந்துதலைக் காணலாம். இவை இரண்டும் சந்தித்துச் சுமுகமாகும்வரை அவன் திருப்தியடைய மாட்டான். அப்படியானால் அவன் அதை முழுமையாகப் பெறுவான். அவனையே அது முழுமையாகப் பெறலாம். எந்த அளவு என்பது வேறுபடலாம். அனந்தமாகத் தோன்றும் சிறியதாக அவனிருக்கலாம். அனந்தத்தைத் தேடுவதை அவனறியாமலிருக்க முடியாது. மனிதன் பூமாதேவியின் மூத்த பிள்ளை. அவனுக்குத் தெய்வம் உள்ள சாயல் தெரிகிறது. தன் அமரத்துவத்தை அகத்தில் உணர்கிறான். அல்லது தனக்கு அமரத்துவம் வேண்டும் என அறிகிறான். ஞானம் தட்டி எழுப்பும் சாட்டை. அது அவனை வழி நடத்துகிறது. சிலுவையில் அறையும் சிலுவை அது. அனந்த ஜோதியின் பவர், சந்தோஷம் அவன் பெறுவது. சிலுவையை அந்த ஜோதியின் மூலமாக மாற்றுகிறான்.

இதுவே முன்னேறி வரும் வளர்ச்சி. தெய்வீக ஜீவியம் — சக்தி வெளிப்படுவதன் வளர்ச்சியிது. இது ஞானமும் உறுதியும் ஆகும். அவை அஞ்ஞானத்துள் தம்மை இழந்தன. இது ஜடத்தின் தமஸ். இது மகிழ்வுக்குரிய மலர்ச்சியாக இருக்கலாம். அது சந்தோஷத்தினின்று அனந்தப் பெரு மகிழ்வுக்குப் போகலாம். பிரிவினையின் சட்டம் அதைத் தடை செய்கிறது. ஜடம் அந்தச் சட்டம் — பிரிவினை — உண்டுபண்ணியது. மனிதன் தன் சொந்த ஜீவியத்துள் சிறைப்பட்டுள்ளான். அது தனித்த மனம், வாழ்வு, உடல். நம் வளர்ச்சியின் இயற்கையான சட்டம் செயல்படுகிறது. மனம் இந்த இயற்கையான சட்டத்தைத் தடுக்கிறது. உடலுள் அது சட்டத்தைக் கொண்டு வருகிறது. கவர்ச்சியும் உதறித் தள்ளுவதும் அச்சட்டம் செய்யக் கூடியது. தாக்குதலும், காப்பதும்; பிணக்கும், வலியும் அச்சட்டத்திற்குரியவை. ஒவ்வொரு உடலும் ஜீவிய-சக்தியின் வரையறைக்குட்பட்டவை. அவை பிரபஞ்ச சக்திக்குரியவை. தங்கள் எல்லைகளை உடைத்து அவை உள்ளே வருவதைக் காண்கின்றன. வந்து தொடர்பு ஏற்படுத்தும் ஜீவியத்துடன் சுமுகமாக இருக்க முடியவில்லை. அது பெறும் ஜீவியம். அசௌகரியமும் வலியும் சொந்தமாகிறது. அது கவரப்படுகிறது. வெறுத்து ஒதுக்கப்படுகிறது. அது தன்னைப் பாதுகாக்க வேண்டும் அல்லது தாக்க வேண்டும். எந்த நேரமும் அது எதையாவது செய்தபடியிருக்க வேண்டும். அதற்குப் பிரியம் இல்லை, துயரப்பட முடியவில்லை. பிரிவினை என்ற சட்டம் உணர்ச்சியை உள்ளே அனுமதிக்கிறது. உடல் உணர்வையும், அதை உணரும் மனத்தையும் உள்ளே அனுமதிக்கிறது. அவை பெரும் பண்புகளுடன் — சந்தோஷம், கவலை — உள்ளே வருகின்றன. அன்பும், வெறுப்பும், சோகமும், மயக்கமுமாகும். அனைத்தும் ஆசையாகத் தோன்றும். ஆசையென்பதால் வலிந்து செயல்படும் ஆர்வம் காணப்படுகிறது. வலிந்து செயல்படுவதால் குறையும் சக்தியும் வளர்கின்றன. அது இயலாமை. சாதித்து ஏமாறும் ஏற்றத்தாழ்வு அது. உடைமையாகப் பெறுவதும், விட்டு அகல்வதும் மாறி வரும். தொந்தரவு, சிரமம், அசௌகரியம், நிலையாகும். மனம் தன் இயற்கையான ஜீவனின் குறையை அறியும். அது மூவகைக் குறை, பற்றாக்குறை. மனம் தன் சொந்த சிறுமையைக் கருதும். அது உடல், வாழ்வின் சிறுமையுடன் வரும். மனத்தின் முழுமையுள் இரட்டைகளைக் கொண்டு வருகிறது. அதை குறை தொடர்கிறது. ஒளியை இருளும், சக்தியை பலஹீனமும் தொடர்கின்றன. சந்தோஷத்தைத் தொடரும் பொழுது அதை மறுக்கும் வலி எழுகிறது. சாதனை சாதித்ததால் அதிருப்தி தரும். இது சத்தியத்தின் தெய்வீகச் சட்டம் பெரும் சத்தியத்துள் செயல்பட வேண்டும். பதிலாக, இரட்டை எழுகிறது. இது உறுதி. பெரிய திருவுருமாற்றும் உறுதிக்குச் சரணடைய வேண்டும். சிறு திருப்தி வளர வேண்டும். புனிதமான உயர்ந்த திருப்தியை அவை நாட வேண்டும். இவையனைத்தும் ஆனந்த மறுப்பு. மும்மூர்த்தியான சச்சிதானந்த மறுப்பு. மறுப்பைக் கடக்க முடியவில்லையெனில் அது இருப்பதில் பலனில்லை. பெருவாழ்வு ஜீவிய சக்தி லீலையுள் நுழைகிறது. அது இயக்கத்தை நாட வேண்டும். தனக்காக மட்டுமல்ல, லீலையின் திருப்திக்காகவும்கூட. முடிவில் திருப்தி ஏற்படாவிட்டால், அதைக் கைவிட வேண்டும். அது வீண் வேலை. அது மாபெரும் தவறு. ஜீவனை ஏற்ற ஆன்மா பெற்ற ஜன்னியது.

வாழ்வில் நம்பிக்கையற்றவர் இந்த அடிப்படையை நம்புகின்றனர். இவ்வுலகில் நம்பிக்கையற்றவருக்கு அடுத்த உலகில் நம்பிக்கை ஏற்படலாம். அவை நம்மைக் கடந்த நிலைகள். அது பூவுலகைப் பொறுத்தவரை மாயையாகும். அது மனோமயப் புருஷனின் தலைவிதியாகும். அதுவும் ஜட உலகை நம்புகிறது. அவ்வாழ்வு பூவுலகில் ஆத்ம திருப்தி பெறுவதாகக் கூறுகிறது. ஜட வாழ்வின் சுபாவம் பிரிவினை. பிறவி எடுத்த மனமும், அதன் வித்தானதும் தன்னை அறியாமையாலும், அகந்தையாலும் அளவுக்குட்படுத்திக் கொண்டது. ஒரு விஷயத்தை நாடுவதும், தெய்வீக இலட்சியத்தைக் கருதுவதும், உலக லீலைக்கு முடிவு தேடுவதும் வீண். இல்லாததை நாடுவதாகும். மோட்சத்தில்தான் வாழ்வும் ஜீவியமும் இணைய முடியும். தெய்வீக ஆனந்தத்தில் அவை மீண்டும் சேரும். அது உலகுக்குரியதல்ல. ஆத்மாவின் ஆழ்ந்த அமைதியில் மட்டுமே அது முடியும். தோற்றமான உலக வாழ்வில் அது நடக்காது. அகண்டம் தன்னை மீண்டும் அடையலாம். தன் செயல் தவறு என விலகிச் செயல்படலாம். தன்னைக் கண்டமான அணுவில் காண முயலலாம். அச்செயலைத் தவறு எனக் கருதலாம். மனத்தின் ஜீவியம் ஜட உலகில் எழுகிறது. தன்னுடன் எந்த தெய்வீகப் பூரணத்தையும் அது கொண்டு வாராது. பிரிவினை மனத்தின் சட்டம், ஜடத்திற்குரியதல்ல. ஜடம், மனம் எழுப்பிய மாயை. மனம் தன் சட்டமான பிரிவினையையும், அறியாமையையும் ஜடத்துள் கொண்டு வரும். மனத்தின் இம்மாயையுள் ஒருவன் தன்னைக் கண்டறியலாம். பிரிந்த வாழ்வுக்கு மூன்று அம்சங்கள் உண்டு. இம்மூன்று நிலைகளுக்குள் உலவ வேண்டும். பிரிவினையை ஏற்படுத்தியது மனம். அங்கு ஆத்ம ஐக்கியத்தைக் காண முடியாது. அல்லது ஆன்மீக வாழ்வின் சத்தியத்தையும் அங்கு காண முடியாது.

பிரிவினை சட்டம் ஜடத்தில் உள்ளது. அது பிரிக்கும் மனத்தால் மட்டுமானது. ஜட வாழ்வில் மனம் நுழைந்து தங்கியது உண்மை. அந்த ஜடவாழ்வில் சுய ஜீவனில்லை. அது மூலத்தில் உற்பத்தியான தோற்றமல்ல. அது ஒரு அம்சமே. அனைத்தையும் பிரிக்கும் வாழ்வின் சக்தியால் ஏற்பட்டது அது. அனைத்தையும் பிரிக்கும் மனத்தின் சிந்தனையை அது செயல்படுத்துகிறது. ஜீவனை மனம் இத்தோற்றமாக மாற்ற செயல்படுத்துகிறது. அவை அஞ்ஞானம், தமஸ், பிரிவினையாலானவை. இச்செயலால் கட்டடம் எழுப்பும் மனம் தன் செயலில் தன்னை மறந்து விடுகிறது. மனம் தன் சிருஷ்டியில் தன்னை இழக்கிறது. அது ஓர் இருட்டறையில் ஏற்பட்ட சிறை. மனம் தானே செப்பனிட்ட விலங்குகள் அவை. மனம் அவற்றால் கட்டுப்பட்டது. மனம் கட்டடமாக எழுப்புவது சிருஷ்டியின் முதல் சட்டம் என்பது உண்மை. மனத்தின் ஜீவன் ஜடம், வாழ்வுடன் பலனின்றிப் போராட்டம் நடத்துகிறது. அவற்றைத் தோற்கடித்துத் தானும் அவற்றால் தோற்கடிக்கப் படுகிறது. பலனற்ற இச்செய்கையை நெடுங்காலம் மீண்டும் மீண்டும் ஜடம் செய்கிறது. பிரபஞ்ச வாழ்வின் உயர்ந்த செயலாகும் அது. அதுவே சிருஷ்டியில் முடிவாகும். அப்படிப்பட்ட முடிவை ஏற்கும் அவசியம் நமக்கில்லை. மாறாக, ஆத்மா திரைமறைவில் செயல்படுவது உண்மை. ஜடப்பொருளின் கனத்த இருளில் அது செயல்படுகிறது. இருள் ஜடத்திற்கு ஆடையாகக் காண்கிறது. சத்திய ஜீவியத்தின் சுப்ரீம் சிருஷ்டித்திறத்தால் அது செயல்படுகிறது. சத்திய ஜீவியம் மனத்தின் பிரிவினையை அனுமதிக்கிறது. ஜடத்தின் சட்டம் தாழ்ந்த நிலையால் ஆளப்படுவதை அது அனுமதிக்கிறது. இந்த நிபந்தனைகள் ஆரம்ப நிலைகளே. ஏகன் அநேகன் என்ற தத்துவப்படி நடப்பவை இவை. சொல்லப்போனால், நாம் வேறொரு சட்டத்தைக் காண்கிறோம். பிரபஞ்சத்துள் மறைந்திருப்பது மனத்தின் ஜீவனல்ல. மறைந்து உள்ளது அனந்த ஜீவன். அது ஞான உறுதியாலானது. அவை ஜடத்துள்ளிருந்து வாழ்வு மனமாக வெளிவருகிறது. மற்றவை இன்னும் வெளிவரவில்லை. ஜட இருளாகத் தோன்றுவதிலிருந்து ஜீவியம் எழுகிறது. அது வேறொரு முழுமையான அம்சமாக இருக்க வேண்டும். அது சத்திய ஜீவிய ஆன்மீக ஜீவனாக இருக்க வேண்டும். அது மனம், வாழ்வு, ஜடத்தின் மீது உயர்ந்த சட்டத்தை அமுல் செய்யத் திணிக்கிறது. அது பிரிக்கும் மனம். அதனால் இது நடக்கும் சாத்தியமாகிறது.

அப்படிப்பட்ட சத்திய ஜீவன் மனத்தை அம்முடிச்சிலிருந்து விடுதலை செய்யும். அது பிரிந்த நிலையின் முடிச்சு. அதற்கு உபகருவியுண்டு. அக்கருவிக்குரிய செயலுண்டு. மனம் தனி மனிதனை உருவாக்குவது அப்படிப்பட்ட செயல். அது பயனுள்ள உதவி. நாம் அதைக் கண்டோம். சத்திய ஜீவியம் அனைத்தையும் தழுவுவது. அவன் வாழ்வையும் விடுவிப்பான். வாழ்வும் பிரிந்த நிலை வாழ்வினின்று விடுவிக்கப்படும். தனி மனிதனை உற்பத்தி செய்வது ஒரு உபசெயலாகவே பயன்படுத்தப்படும். சித்-சக்தியின் உபசெயலது. அது தன் ஜீவனையும், சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொள்கிறது. அதைச் செய்ய பலதரப்பட்ட ஒற்றுமையை அது நாடுகிறது. ஏன் அது உடலின் வாழ்வை விடுதலை செய்யக் கூடாது என்று சொல்ல முடியாது. தற்சமயம் அது மரணம் என்பதன் பிடியுள் உள்ளது. அதுவும் பிரிவினைக்குட்பட்டது. பரஸ்பரம் விழுங்கும் சட்டம் அது. இங்கும் தனிமனிதனை உருவகம் செய்வதை உபசெயலாகப் பயன்படுத்துகிறார்கள். ஜீவனுள்ள வாழ்வின் ஒற்றுமையின் ஓர் அம்சம் அது. அணுவில் அனந்தம் பெறும் சந்தோஷத்திற்கு அது பயன்படுகிறது. ஏன் ஆத்மா சுதந்திரம் பெறக் கூடாது என்பதில்லை. ரூபத்தின் சுதந்திரமான செயலில் அது விடுதலை பெறலாம். அது தன்னையறியும் அமரத்துவம் பெறலாம். ஜடத்தின் ஆடையை மாற்றுவதிலும் அது அப்படி இருக்கலாம். ஆன்மாவின் ஆனந்தம் சுயமானது. அவ்வுலகம் அழகு அன்பு ஐக்கியத்தால் நிறைந்தது. ஜட வாழ்வெனும் உலகில் மனிதன் வாழ்கிறான். திருவுருமாற்றம் அவன் மூலமே நிகழும். மனம் சத்திய ஜீவியமாக மாறும் திருவுருமாற்றம் அது. முடிவாக அதை நாம் அடைய முடியும். தெய்வீக மனமும் உற்பத்தியாகலாம். தெய்வீக வாழ்வும் தெய்வீக உடலும் எழும். அச்சொற்றொடர் அதிர்ச்சி தரலாம். இந்த நேரம் மனிதனுக்குச் சிந்தனையில் எழும் வாய்ப்பாகலாம்.

ஒரு விஷயம் குறுக்கே நிற்கலாம், தெய்வீக உடல் முடிவான சட்டம். ஜடத்தைப்பற்றிய நம் அபிப்பிராயத்தால் அது நிர்ணயிக்கப்படும். தற்சமயம் இந்தச் சட்டம் ஒரு விஷயத்தைப் பொறுத்துள்ளது. தெய்வம் தன்னை அறிகிறது. தெய்வம் அறியும் பொருளுண்டு. இவற்றிற்குள்ள தொடர்பு இச் சட்டத்தை ஏற்படுத்துகிறது. வேறு தொடர்புகளும் இருக்கலாம். அச்சட்டங்கள் இன்னும் பூவுலகில் எழவில்லை. அப்படியானால் நம்மைக் கடந்த சொர்க்கத்திலிருக்கலாம். வாழ்வின் வேறு லோகங்களில் அச்சட்டம் நடைமுறையிலிருக்கலாம். அதுவே நிலைமையென நாம் கொள்ளலாம். அதுவே உண்மையானால் தெய்வத்தில் மனிதன் பூர்த்தியாவது முழுவதும் சொர்க்கத்தில் இருக்கும். மதங்கள் அப்படிக் கூறுகின்றன. அது மட்டுமல்ல. தெய்வம் நடத்தும் லோகம் என்பது அக்கருத்து. அந்நிலையில் பூலோக வாழ்வு சிறப்பாக இருக்கும். அதை மாயை என விலக்க வேண்டுமா? இந்தச் சிறப்பு அகத்திற்குரியது என நாம் முடிவு செய்யலாம். நம்மை அது தயார் செய்யும் அல்லது அதுவே முடிவான வெற்றியா? மனமும், ஆத்மாவும் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டன. அடுத்தாற்போல் வெற்றி பெற வேண்டியது ஜடம். ஜடத்தை வெல்ல முடியாது, இதுவரை வெல்லவில்லை. கட்டுக்கடங்காதது ஜடம். மண் விழித்து அறியாதது. தெய்வீகப் பொருளை நாம் வேறு இடத்தில் தேட வேண்டும். நிச்சயம் அது ஜடத்தின் வேறு நிலையாக இருக்கும். நிச்சயம் ஓர் அடுக்குண்டு. அது உயரும் தெய்வீகப் பொருள். வேறொரு நிலையுமிருக்கலாம். அது ஜடம் மாறிய நிலையாகும். உயர்ந்த சட்டத்தை ஏற்பதால் ஏற்படும் நிலையது. தன் சட்டத்தைக் கடந்த நிலையது. இருந்தாலும் அது அதன் சொந்த சட்டம். எப்பொழுதும் இரகஸ்யமாக உள்ளே வித்தாக இருந்த நிலையது.

*********

ஜீவிய மணி
நல்லெண்ணம் மனதைக் கனிய வைக்கும். சொல்லில் சூடு இருப்பதை விலக்கும். உணர்வில் கடுமையை அழிக்கும். உடல் துர்நாற்றத்தை எடுக்கும். வியர்வையும் தெளிவாக இருக்கும். நல்லெண்ணம் உபரியாகி, ஜீவன் நிறைந்து உடலாலும் (ஜடம்) வெளிப்படுமானால் அவரால் எதுவும் பூர்த்தியாகும். நாட்டையும் காக்க முடியும். ஆன்மீக நல்லெண்ணம் அதிக சக்தி வாய்ந்தது. அது மனதில் (descent) கீழிறங்கி வெளிப்படுதல், உணர்வில் வெளிப்படுதல் கடைசிக் கட்டம். சைத்தியப் புருஷன் நல்லெண்ணத்திற்கு உரியவன் என்பதால் இது ஆன்மீக சக்தி சைத்திய சக்தியாகிக் கீழிறங்குவதால் வலிமை உயர்ந்து இருப்பதாகும்.
 
நம் மனநிலைக்குரிய பாஷையில் சொன்னால்,
நாமுள்ள ஸ்தாபனத்தின் தலைவரின் அந்தஸ்தைப்
பெற்றுத் தரக் கூடியது.
இதன் வீச்சு முழுமையானால், நம் ஸ்தாபனத்தின்
வருமானம் நமது வருமானமாக முடியும்
 

*********book | by Dr. Radut