Skip to Content

11. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1&2)

Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 1)

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

முன்னணியில் இருக்கின்ற டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், corporate CEOக்கள் என்று இவர்கள் எல்லோரும் உடல் உழைப்புக்குப் பதிலாக அறிவைப் பயன்படுத்தி சம்பாதிக்கின்றவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தை எடுத்துக் கொண்டால்கூட குறைந்தபட்சம் சில இலட்சங்கள் இருக்கும், அதிகபட்சமாக வருடாந்திர வருமானம் ஒரு கோடியாகக் கூட இருக்கும். வெறும் உடல் உழைப்பால் கிடைக்கின்ற மாத வருமானமான ரூ.6,500 அல்லது ரூ.7,800 மற்றும் வருட வருமானமான ரூ.78,000 அல்லது ரூ.93,600உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது சில இலட்சங்களும், ஒரு கோடியும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நாம் தாண்டி வராமல் நம் வாழ்க்கையை நாம் உயர்த்திக் கொள்ள முடியாது. Physical plane வரையறைக்கு உட்பட்டது என்றாலும் vital plane மற்றும் mental plane ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைக்கும் அளவிற்கு அதற்கும் ஒரு வரம்பற்ற தன்மை பிறக்கிறது. ஒரு மனிதன் எந்த ஈடுபாடும் அக்கறையும் இல்லாமல் வேலையை மெக்கானிக்கலாக வெறும் உடல் சக்தியை மட்டும் பயன்படுத்திச் செய்யும் பொழுது அவருக்கு விரைவில் களைப்பு வந்துவிடுகிறது. அதனால் 8 மணி நேரத்திற்கு மேலும் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றால் கட்டாயப்படுத்தித் தான் அந்த வேலையை வாங்க முடியும். ஆனால் அதே உடல் வேலையை ஒரு ஈடுபாட்டுடன் செய்யும் பொழுது அவருடைய உணர்வு மையத்தினுடைய ஈடுபாடு அந்த வேலையில் சேர்ந்து கொள்கிறது. அதனால் அவருடைய வழக்கமான உடல் தெம்போடு அவருடைய உணர்வு மையம் வழங்கக் கூடிய கூடுதல் எனர்ஜியும் அவருக்குக் கிடைக்கிறது. அந்தக் கூடுதல் எனர்ஜியோடு வேலை செய்யும் பொழுது வழக்கமாக வருகின்ற களைப்பு வாராமல், நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்ய முடிகிறது. ஒரு கம்பெனிக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்துள்ளதாகவும், அதை நிறைவேற்றிக் கொடுத்தால் கம்பெனிக்குப் பெரிய வருமானம் கிடைக்கும் என்றும், ஆனால் 3 அல்லது 4 நாட்களிலேயே ஆர்டரை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். ஆர்டரை நிறைவேற்றினால் பெரிய வருமானம் கிடைக்கும் என்று தெரியும் பொழுது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி பிறக்கிறது. அந்த மகிழ்ச்சி நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்யக்கூடிய ஒரு உடல் தெம்பை அவர்களுக்குக் கொடுக்கிறது. அந்தத் தெம்பை வைத்துக் கொண்டு day shift மற்றும் night shift என்று மாறி, மாறி ஓய்வெடுக்காமல் தொடர்ந்து அந்த மூன்று, நான்கு நாட்கள் வேலை செய்து, அந்த ஆர்டரை அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடிகிறது. இப்படி ஒரு பெரிய வருமானம், அதனால் கிடைக்கின்ற பெரிய மகிழ்ச்சி என்று இவைகளினுடைய support இல்லாமல் வேலையை வெறும் வேலையாகச் செய்யச் சொல்லி, ஓய்வெடுக்காமல் இந்தக் கம்பெனி ஊழியர்களை மாறி, மாறி day shift மற்றும் night shiftக்கு வரச் சொன்னால் அவர்கள் அப்படி ஆர்வமாக வேலைக்கு வருவது சந்தேகம். அவர்களுடைய உடம்பினுடைய அளவுக்குட்பட்ட physical எனர்ஜியை அளவற்ற எனர்ஜியாக மாற்றுவது அவர்களுடைய உணர்வு மையத்தில் இருந்து பிறக்கின்ற மகிழ்ச்சி வழங்கிய அளவுகடந்த vital எனர்ஜியாகும். தேர்தல் சமயங்களில் அரசியல் தலைவர்கள் நேரம், காலம் பார்க்காமல், சரியாகத் தூக்கம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் மாநிலம் முழுவதும் மற்றும் அகில இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய பயணம் செய்வதைப் பார்க்கிறோம். 70 வயது கடந்த அரசியல் தலைவர்கள் கூட இப்படி ஓய்வில்லாமல் பிரச்சார வேலையில் ஈடுபடுவதும் உண்டு. 70 வயதைக் கடந்தவருக்குப் பொதுவாக இந்த எனர்ஜி இருக்காது. ஆனால் தேர்தலில் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் இருக்கும் பொழுது, அந்த முதிய வயதிற்கு உண்டான தளர்ச்சியையும் மீறிப் பிரச்சார வேலையைச் செய்யும் அளவில் அவர்களுடைய உணர்வு மையம் அவர்களுக்கு எனர்ஜியை வழங்குகிறது. இம்மாதிரியே போருக்குச் செல்கின்ற படை வீரர்கள், காடு, மலை, பாறை, பாலைவனம் என்று explorationக்குப் போகின்றவர்கள், மற்றும் international competitive gameக்கு விளையாடச் செல்கின்ற வீரர்கள், இவர்கள் எல்லாம் களைப்பே தெரியாமல் அவரவர்களுக்குண்டான பணிகளைச் செய்வதே அவர்களுடைய இயற்கையான உடல் தெம்பிற்குப் பதிலாக, அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் இருக்கின்ற ஈடுபாட்டிலிருந்து பிறக்கின்ற அளவுகடந்த எனர்ஜி அவர்கள் உடம்பை இயக்குவதால் தான்.

இம்மாதிரியே நம்முடைய அறிவின் ஆதிக்கத்தின் கீழ் நம்முடைய உடம்பு செயல்படும்போதும் நம் உடம்பின் ஆற்றலும் physical planeஉடைய ஆற்றலும் அளவு கடந்து பெருகுகிறது. வெறும் கைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் வேலை செய்யும் பொழுது நம்முடைய உற்பத்தித் திறன் மிகவும் குறைவு. ஆனால் machineகள் நம் அறிவால் கண்டுபிடிக்கப்பட்ட சாதனங்கள் ஆகும். Machineகளை வைத்துக்கொண்டு மனிதன் factoryஇல் வேலை செய்யும் பொழுது factory உற்பத்தி அபாரமாக அதிகரிக்கிறது. இதே ரீதியில் பார்க்கப்போனால் நம் அறிவைவிட அதிக சக்தி வாய்ந்தது நம்முடைய ஆன்மாவாகும். அப்படி என்றால் இந்த ஆன்மாவின் ஆதிக்கத்தின் கீழ் நம்முடைய உடம்பு செயல்பட முன் வந்தால் அதனுடைய உற்பத்தித் திறன் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்பதை நாம் கற்பனை செய்ய வேண்டும். தன்னுடைய உடம்பு, உணர்வு, அறிவு ஆகிய மூன்றும் கொடுக்கின்ற எனர்ஜி மற்றும் ஆற்றலை வைத்துக் கொண்டு வேலை செய்கின்ற ஒருவர் மாதம் ரூபாய் 20,000 தான் சம்பாதிக்கிறார் என்றால் ஆன்மீகப் பண்புகளான பக்தி, நம்பிக்கை மற்றும் சமர்ப்பணம் மற்றும் மௌன சக்தி என்ற இவை கொடுக்கும் பலத்தை வைத்துக் கொண்டு செயல்பட முன்வந்தார் என்றால் அதே ரூ.20,000 என்பது மாதம் ரூபாய் 2 இலட்சம் ஆகவும், ரூ.2 கோடியாகவும் கூட உயர்வதைக் காணலாம். அதாவது வெறும் உடம்பு மட்டும் வேலை செய்வதால் குறைந்தபட்சப் பலன்தான் கிடைக்கும். உணர்வும் அறிவும் கலந்து கொண்டால் சுமாரான பலன் கிடைக்கும். ஆனால் வரம்பில்லாத வளர்ச்சி மற்றும் முடிவில்லாத முன்னேற்றம் என்று இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் நம் வாழ்க்கையில் ஆன்மாவைக் கொண்டு வர வேண்டும். இப்படி நம்முடைய ஆன்மாவின் ஆதிக்கத்தின் கீழ் நம்முடைய அறிவு, உணர்வு, உடம்பு என்று மூன்றும் செயல்பட முன்வந்தால் உலக மக்களுடைய வாழ்க்கைத் தரம் அதாவது living standards அடையாளம் தெரியாத அளவிற்கு உயர்ந்து போகும். அதாவது உலகத்தினுடைய ஐஸ்வரியம் அந்த அளவிற்குப் பெருகிவிடும், உயர்ந்தும்விடும்.

இப்படி நம்முடைய ஆன்மா நம் வாழ்க்கையில் செயல்பட்டு வரம்பற்ற முன்னேற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றால் அது வெளிவருவதற்கு ஏற்றவாறு நம்முடைய அறிவு, உணர்வு மற்றும் நாம் செயல்படும் பாணி என்று இவை எல்லாவற்றையும் நாம் மாற்றி ஆக வேண்டும். நம்முடைய வழக்கமான செயல்பாடுகள் எல்லாம் நாம் finiteஆக இருப்பதால் வருகின்ற செயல்பாடுகளாகும். ஆனால் நாம் Infiniteஆக மாறினால் நம்முடைய செயல்பாடுகள் எல்லாம் நேர் எதிராக இருக்கும். இப்பொழுது finiteஇன் உடைய செயல்பாடுகளைப் பற்றி 10 கருத்துகளையும், அதற்கு நேர் எதிர்மாறான Infiniteஇன் செயல்பாடுகள் என்று ஒரு 10 கருத்துகளையும் பட்டியலிட்டு வழங்க விரும்புகிறேன். பட்டியலுக்குண்டான விளக்கங்கள் அடுத்த இதழில் வெளிவரும்.

Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 2)

 
Finite
 
Infinite
1.
இதனுடைய வளர்ச்சி பெற்றுக் கொள்வதால்தான் சாத்தியமாகிறது.
1.
பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்து இது வளர்கிறது.
2.
சிந்தனை செய்வதால்தான் இதனுடைய அறிவு வளரும்.
2.
சிந்தனை செய்யாமல் மௌனத்தின் மூலம் இதனுடைய அறிவு வளர்கிறது.
3.
Finite Initiative மூலம் சாதிக்கிறது.
3.
ஆனால் இதற்கு நேர் எதிர்மாறாக Surrender மற்றும் சமர்ப்பணத்தின் மூலம் இது சாதிக்கிறது.
4.
Finite பகுத்தறிவை வைத்துச் செயல்படக் கூடியது.
4.
Infinite நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் செயல்படுகிறது.
5.
Finiteஇனுடைய கண்ணோட்டம் பகுதியானதாகும்.
5.
Infiniteனுடைய கண்ணோட்டம் முழுமையானது.
6.
Finiteக்குக் கிடைக்கும் பலன்கள் காலத்திற்கு உட்பட்டவை.
6.
Infinite செயல்படும்போது பலன் உடனடியாகக் கிடைக்கும்.
7.
Finiteக்குச் சிறியது, பெரியது, quantity, quality என்ற வித்தியாசங்கள் எல்லாம் உண்டு.
7.
இதற்கு இந்த வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது.
8.
இருப்பதைச் சேகரம் செய்து Finite வளரும்.
8.
இருப்பதைச் செலவு செய்து Infinite வளரும்.
9.
Finite என்பது தனக்குத் தெரிந்த மற்றும் வழக்கமான விதிமுறைகளின்படிதான் செயல்படும்.
9.
Infinite இயற்கையாக புதுமையாகச் செயல்படும்.
10.
Finite பிரிவினையை வலியுறுத்திச் செயல்படுகிறது.
10.
Infinite முழுமை மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திச் செயல்படுகிறது.

 

தொடரும்....

********

ஜீவிய மணி
 
தானே மாற முன்வரும் மனத்தின் தைரியம் பெரியது.
யார் மீது குறை மனதில் எழுந்தாலும் அது மனக்குறை தவிர
வேறொன்றும் இல்லை.
அதிகாரத்தால் ஸ்தாபனம் நின்று நிலைபெறும். பொறுப்பும்,
பண்பும் ஸ்தாபனத்தை வளரச் செய்யும்.
உள்ளே போனபின் வெளியேயிருப்பது தெரியாது.
ஸ்ரீ அரவிந்தம் ஸ்ரீ அரவிந்தர் அனுபவம்.
பெருமையை அறிந்து அறிவது அடக்கம்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தெம்பு தெளிவு பெறும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நிம்மதியாக இருக்க மனிதன் பிரியப்படுகிறான்.
இருப்பது எல்லாம் நிம்மதியாக இருக்கிறது
என்பதே ஞானம்.
 
 
 
******



book | by Dr. Radut