Skip to Content

10. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

Sri Aurobindo and the Tradition

ஸ்ரீ அரவிந்தரும், மரபும்

(ஜூலை 2012 இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. Tradition knows the planes of Time and Timelessness.
    Sri Aurobindo has discovered one more plane of
    Time where they both coexist.

    மரபு காலத்தையும், காலமின்மையையும் அறியும்.
    காலமும், காலமின்மையும் சேர்ந்துறையும் தளத்தை ஸ்ரீ அரவிந்தர் கண்டறிந்தார்.

  2. Tradition reaches the Overmental knowledge which coexists with ignorance.
    Sri Aurobindo reaches the Supramental knowledge where there is no ignorance.

    அஞ்ஞானத்தோடு சேர்ந்துறையும் தெய்வலோக ஞானத்தை மரபு அடைகிறது.
    அஞ்ஞானமே இல்லாத சத்தியஜீவிய ஞானத்தை ஸ்ரீ அரவிந்தர் அடைகிறார்.

  3. To the tradition, Sachchidananda is the final realisation.
    Sri Aurobindo says there is a further stage when Sachchidananda expresses in its opposite.

    மரபிற்கு சச்சிதானந்தமே இறுதியான அறிதல்.
    சச்சிதானந்தம் தனக்கு எதிரானதை வெளிப்படுத்தும் அடுத்த கட்டம் உண்டு என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

  4. Being, Consciousness, Ananda are separate entities to the tradition.
    To Sri Aurobindo, Being is Consciousness, Consciousness is Ananda.

    மரபிற்குச் சத், சித், ஆனந்தம் ஆகியவை தனித்தனியான இருப்புகள்.
    ஸ்ரீ அரவிந்தருக்கு சத்தே சித், சித்தே ஆனந்தம்.

  5. Tradition sees the existence of knowledge as well as ignorance.
    To Him, Ignorance is a modification of knowledge.

    ஞானமும், அஞ்ஞானமும் இருப்பதை மரபு காண்கிறது.
    ஸ்ரீ அரவிந்தரைப் பொறுத்தவரை அஞ்ஞானம் என்பது மாறுதலுக்கு உட்படுத்தப்பட்ட ஞானமே.

  6. Spirituality is for the Rishi, religion is for the masses, lays down the tradition.
    Spirituality is for all, says He. Religion is the masses following one's enlightenment. Spirituality is enlightenment to everyone.

    ஆன்மீகம் ரிஷிகளுக்கும், மதம் பிற அனைவருக்கும் உரியது என்று மரபு விதிக்கிறது.
    ஆன்மீகம் அனைவருக்கும் உரியது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
    ஒருவரின் அகஒளியை அனைவரும் பின்பற்றுவதே மதம், அனைவருக்கும் அகஒளியூட்டுவது ஆன்மீகம் என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்
    .

  7. Spirit is to be liberated from all other parts of the Being is the tradition.
    All parts of the Being should evolve the inner Spirit, says Sri Aurobindo.

    ஜீவனின் பிற அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஆன்மா விடுவிக்கப்பட வேண்டுமென மரபு கூறுகிறது.
    ஜீவனின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளுறை ஆன்மாவை பரிணமிக்க வைக்க வேண்டும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

  8. Yoga is yoga of liberation for the tradition.
    His yoga is called the yoga of spiritual evolution.

    மரபைப் பொறுத்தவரை யோகம் என்பது மோட்சத்திற்கான யோகமே.
    ஸ்ரீ அரவிந்தரின் யோகம், ஆன்மாவைப் பரிணாமம் அடைய வைக்கும் யோகம் என்று அழைக்கப்படுகிறது.

  9. One without a second, All is Brahman are the findings of the tradition.
    Sri Aurobindo reconciles them both in the Omnipresent Reality.

    மற்றது இல்லாத ஒன்று, அனைத்தும் பிரம்மமே என்பது மரபு.
    எங்குமிருக்கும் சத்தியத்தில் அவை இரண்டையும் ஸ்ரீ அரவிந்தர் பொருத்துகிறார்.

  10. Tradition says God created the world.
    Sri Aurobindo says God became the world.

    கடவுள் உலகைப் படைத்தார் என்கிறது மரபு.
    ஸ்ரீ அரவிந்தர் கடவுளே உலகமானார் என்கிறார்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பெண் சமூகத்தைவிடப் பெரியவள்.
சமூகத்தை மாற்றும் சக்தி அவளுடையது.
 

******



book | by Dr. Radut