Skip to Content

07. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

62. தொழிலின் உச்ச கட்டத்தை அடைவது - வளர்ச்சி

 • அறிவு, வீரம், செல்வம், சேவை உச்ச கட்டத்தை அடைந்தால் மோட்சம் பெறும் என்பது வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படை.
 • இந்தியப் பண்பாடு ஆன்மீக அடிப்படையுள்ளது. அதன்படி சமையல் வேலை, ஏர் உழுவது, கசாப்புக் கடை போன்ற எந்த வேலையையும் சிறப்பாகச் (perfect) செய்தால் மோட்சம் கிட்டும் என்பது தத்துவம்.
 • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அரசியலை ஆன்மீக அடிப்படையில் செய்ததால் மகாத்மா காந்திஜீயாகி, அரசியலில் துறவறம் பூண்டு தான் பெற்ற அதிகாரத்தை - பிரதமர், ஜனாதிபதி - மனத்தாலும் கருதவில்லை. இது இந்தியாவில் மட்டுமே நடந்தது.
 • தொண்டன் காமராஜ் நாட்டின் அரசியல் தலைமையை எட்டியதும் அவர் தொழிலின் உச்ச கட்டத்தை சிறப்பாக அடைந்த காரணத்தால் தான்.
 • செய்வன திருந்தச் செய் என்ற சொல்லின் மூலம் மோட்சம், பூரண யோக வாயில் திறப்பது.
 • உச்ச கட்டத்தை சிறப்படையாமல் எட்ட முடியாது.
 • சிறப்பை உச்ச கட்டம் தொடாமல் அடைய முடியாது.
 • உச்ச கட்டம் தொடுமுன் சிறப்படைய பூரண யோகம் பூர்த்தியாக வேண்டும்.
 • உச்ச கட்ட சிறப்பு பூரண யோக வாயில்.
 • மனித உடலை இறைவன் ஏற்குமுன் பல உருவங்களைக் கருதி மறுத்ததாக ஆன்மீக வரலாறு.
 • தோற்றத்தில் மனித உடல் விலங்கின் உடலாக இருந்தாலும் நிமிர்ந்து நிற்பதால் பார்வை பூமியை நோக்கிப் போகாமல், நேராக இருப்பது முதல் தெய்வாம்சம்.
 • மனித உடலின் சிறப்பு, எல்லாக் கரணங்களும், எந்த நேரமும் க்ஷணத்தில் செயல்படத் தயாராக இருப்பதேயாகும்.
 • விலங்கிற்கும் அது உண்டு என்றாலும், விலங்கு உணர்ச்சியால் செயல்படுகிறது.
 • உணர்வாலான பூரணம், அறிவால் எழுவது மனித உடலின் மகிமை.
 • அறிவால் எழும் பூரணம் ஆன்மாவால் எழுவது சத்திய ஜீவியம்.
 • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என பத்தினியால் பேச முடிவது இந்தப் பூரணம் அவளைக் கடமையால் நாடுவதால் எனப் புராணம் எடுத்துக் கூறுகிறது.
 • தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா போய் நிரந்தரமாகக் குடியேறிய பெண், அமெரிக்க செல்வ வளத்தை அனுபவித்து, அதை விட்டு விட்டு ஒரு அமெரிக்கப் பெண் இந்தியாவில் வந்து 30 ஆண்டாகக் குடியேறியதை நினைத்து வியந்தாள்.
 • இந்தியப் பெண் அற்புதமான பக்தியுடையவள். உடலில் ஒளியுள்ளவள். எதற்கும் அன்னையை நாடுபவள். அவள் பக்தியின் ஆழம் வாழ்வின் வண்ணங்கள். அவளுக்கு அமெரிக்க வாழ்வின் வசதி பிரம்மாண்டம். அன்னை அவளுக்கு திறந்து காட்டிய ஆன்மீகக் கோயில் கட்டிடமாகத் தெரிந்தது. அமெரிக்கப் பெண் சிறு வயது முதல் வாழ்வை அமெரிக்கப் பெண்ணாக அனுபவித்தவள். அன்னை ஸ்பர்சம் அமெரிக்காவிலில்லை. அமெரிக்காவில் அவளால் 15 நாள் தங்க முடியவில்லை. மூச்சு விட முடியவில்லை. அன்னை ஸ்பர்சம் அமிர்தமானது எனக் கண்டவள். அவள் ஏற்ற வேலையை உச்ச கட்டத்தில் சிறப்பாகச் செய்ததால், அவளுக்கு அன்னை ஸ்பர்சம் ஆத்மாவில் கிடைத்தது.
 • தொழிலைச் சிறப்பாக உச்ச கட்டத்தில் செய்ய வேலையாகச் செய்ய முடியாது. ஜீவன் முழுவதும் அதை இறைவனின் சேவையாக ஏற்க வேண்டும். அதைக் குடும்பமும், ஊரும், உலகமும் ஏற்ற பின்னரே ஒருவர் எட்ட முடியும். 300 ஆண்டுகளாக ஆங்கில நாகரிகத்தை நாம் ஏற்றிருந்தாலும் விஞ்ஞானி என்று ஒரு பெரிய ஆத்மா நம் நாட்டில் பிறக்காததற்குக் காரணம் அந்தச் சூழலில்லை. அமெரிக்கச் செல்வம், செல்வாக்கு, படிப்பு அனைத்தும் ஒரு மகானை 400 ஆண்டாக உற்பத்தி செய்ய முடியவில்லை. நம் நாட்டில் நாம் விருப்பப்பட்டு கோவிலுக்குப் போகிறோம். 1940 முதல் 1980 வரை கோயில்கள் வெற்றிடமாக இருந்தன. 1980க்குப் பின் மக்கள் திரளாக கோயில்கட்கு வந்தனர். அமெரிக்காவில் 1960 வரை எந்த கிருஸ்துவரும் சர்ச்சிற்குப் போகாமலிருக்கமாட்டார். அவர்கள் பாதிரிமார்களை சிருஷ்டித்தனர். மகான், சன்னியாசி, தவசி, முனி, ரிஷி, யோகி அந்த நாட்டில் பிறக்கவில்லை. இந்தியா புண்ணிய பூமி. இந்தியருடம்பில் ஜோதி தங்கியுள்ளது.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையிடம் கூறு; மற்றவர்களிடம் கேட்காதே.
 
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தேவை எழுந்தால், தானே பூர்த்தி செய்து கொள்ளும்.
 
 
 
******book | by Dr. Radut