Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

P.315 Sri Aurobindo sitting on the compound and all were inside Him (Vol. III)

August 15, 1962இல் தியானத்தின்பொழுது பகவான் ஆசிரம காம்பவுண்டு மீது அமர்ந்து அனைவரையும் தன்னுட் கொண்டிருந்தார்

  • பெரியவர்களை தரிசிக்கும் பொழுது அவர்களுடன் இரண்டறக் கலப்பதாக உணர்வதுண்டு.
  • ஆசிரமத்தில் இறந்த சாதகர்கள் ஆத்மா அனைத்தும் அன்னை தம் நெஞ்சில் குடி கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.
  • தாயார் அன்பால் குழந்தைகள் தன் பகுதியாக உள்ளதை அறிவார். அவர் தியானத்தில் குழந்தைகள் அவருள் தெரியும்.
  • தியான மையம் நடத்துபவர்க்கு தியானத்தில் அன்பர்கள் தெரிவதுண்டு. மையத்துள் தெரிவதுண்டு, தன்னுள் தெரியும்.
  • பிரபஞ்சத்தில் ஏகனும் அநேகனும் உள்ளனர். அநேகன் என்பது இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்கள்.
  • ஜீவாத்மா சித்திப்பது மோட்சம். அதற்கு ஏகன் என்ற பரமாத்மா சித்திப்பது உயர்ந்த மோட்ச நிலை. அதைக் கடந்த 3 நிலையும் உண்டு.
  • பூரணயோகம் மோட்சத்தை நாடாது, ஜீவாத்மா சித்தித்தவுடன் அடுத்த ஜீவாத்மாக்களுடன் இணைய முயலும். அடுத்த கட்டத்தில் பரமாத்மா - ஏகன் - வுடன் இணையும். மோட்சப் பாதையைத் தவிர்க்கும்.
  • ஜீவாத்மாக்கள் சித்திப்பது பிரபஞ்சம் சித்திப்பது. இதற்கு அகந்தை கரைய வேண்டும். பரமாத்மா சித்திப்பது கடந்தது சித்திப்பது. அதுவும் சித்தித்தபின் மனிதனுள் வெளிப்படுவது ஆத்மா ஈஸ்வரனாகி, அற்புதம் வெளிப்படுவது.
  • பகவானும் அன்னையும் சாதகர்கள் அனைவரையும் தங்கள் ஆத்மாவினுள் ஏற்று அனுக்கிரகம் செய்கிறார்கள்.
  • குடும்பத் தலைவர் குடும்பத்தினர் அனைவர் தேவைகளை ஏற்பது போல் சாதகர்கள் அனைவரின் ஆன்மீக தேவைகளை பகவான் தருகிறார்.
  • குடும்பம், தொழில் (கம்பனி), கட்சி, பெரும் பண்ணை நடத்துகிறோம். நாம் குடும்பத்துடன் எந்த அளவுக்கு ஆத்மாவில் இணைந்துள்ளோம் என அறிய தியானத்தின் போது அதைக் காண முயலலாம். கொஞ்ச நாள் கழித்து அது பலிக்கும் வாய்ப்புண்டு.
  • அந்த நேரம் நாம் பிரியத்தால் ஏற்றுக் கொண்ட அனைவரும் நம்முள் தெரிவர்.
  • கணவன், மனைவி, உடன் பிறந்தவர் அன்னியோன்யமாக இருப்பதுண்டு. பிறர் தியானத்தில் ஒருவர் வந்தால் உடன் அடுத்தவரும் வருவார். அவர்கள் ஆத்மாவில் இணைந்தவர்கள்.
  • அன்னியோன்யமான தம்பதிகளும், வெறுப்பால் பிரிந்த தம்பதிகளும் தியானத்தில் அடுத்தவரைத் தவறாது காண்பதுண்டு.
    வெறுப்பு தீவிர அன்பு. வெளிப்பாடு எதிராக அமைந்துள்ளது.
  • பார்த்து பல வருஷமானவர் தியானத்தில் வந்தால், சில நாட்களில் அவரைச் சந்திக்க நேரும். உருவம் அதிக தெளிவாக இருந்தால், கதவைத் திறந்து கொண்டு கண்ணில் படுவார்.
  • மனக்கண், அகக்கண், ஞானக்கண் என்பவை செயல்படும் வகை வேறுபடும்.
  • மனக்கண் நினைவிலிருப்பதைக் காட்டும்.
  • அகக்கண் ஆத்மாவின் கண். ஆத்மாவின் அம்சம் அதில் தெரியும்.
  • ஞானக் கண் எதிர்காலத்தைக் காட்டும்.
  • குடி தண்ணீரில்லாத ஊரில் கூலிக்காரன் கனவில் ஊரில் மூன்று போகம் பயிராவது வரும். பத்து ஆண்டுகட்குப் பின் ஊரில் அனைவரும் கிணறு தோண்டி மூன்று போகம் பயிர் செய்தனர்.
  • அத்தை மகளை மணக்க விரும்புபவன் கனவில் அவள் தங்கை வரும். திருமணமாகும் பொழுது கனவில் கண்டவளே மனைவியாக வருவாள். இது சூட்சுமப் பார்வை.
  • ஒருவர் கல்லூரி விருந்திற்கு 2 அமெரிக்கர்கள் வந்தனர். 14 வருஷம் கழித்து அந்த விருந்தை ஏற்பாடு செய்தவரை நாடி இரு அமெரிக்கர் வந்து அவருடனே தங்கினர். நிகழ்ச்சி ஞானக் கண்ணாக செயல்பட்டுள்ளது.

********

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மௌனம் சாதிக்கும்.
 
 
********
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையைக் காண ஆயிரம் கண்கள் போதாது.
அகக்கண் ஒன்றே போதும்.
அன்னை தரிசனம் அகம் பெறும் அதிர்ஷ்டம்.
 
 
*******



book | by Dr. Radut