Skip to Content

05. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

 

P.313 Brahman, in the tradition, is a self-contained Being

மரபு பிரம்மத்தை மனிதனுக்கெட்டாத நிலையில், உலகுடன் தொடர்பற்றதாகக் கூறுகிறது

  • பகவான் பிரம்மத்தை ஜீவனாக வர்ணிக்கிறார்.
  • அனைத்தையும் தன்னுட்கொண்ட பிரம்மம் உயிரற்ற ஜடமாக எப்படியிருக்கும்?
  • பிரம்மம் ஜீவன், தன்னையறியும் ஜீவன், தன்னை மட்டும் நம்பியுள்ள ஜீவன், தன்னைத் தவிர வேறெதுவுமில்லையென அறியும் ஜீவன், Self-Conscious Being.
  • ஜீவனுக்குப் பவர் (power) உண்டு. பவரில்லையெனக் கூற முடியாது.
  • ஜீவன் தன்னுள் உள்ள சத்தியத்தை கண்டு அதற்குத் தன் பவர் மூலம் ரூபம் தருவது சிருஷ்டி.
  • அதை மனிதன் தன் ஆத்ம புலனால் காணும் பொழுது பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டதைக் காண்கிறோம்.
  • இதுவே சிருஷ்டியின் தாத்பர்யம், வழி, வகை, முறை, complete process.
  • இதைச் செய்வது மாயை.
  • மாயை என்பது ஜீவனின் செயல்.
  • மாயை ஜீவனின் தலைகீழான செயல்.
  • மாயை ஜீவனை மறுப்பதாகத் தோன்றும்.
  • மாயை ஜீவனின் செயல் என்றால் ஜீவனுக்கு எதிராக ஜீவனின் ஜீவியம் எழுப்பும் செயல் என்கிறார் பகவான்.
  • இந்த ஜீவனை பகவானும், அன்னையும் Supreme என்கிறார்கள். உயர்ந்த கட்ட உச்சியில் உள்ள ஜீவனை Supreme எனக் கூறுகிறார்கள்.
  • இதிலிருந்து எழும் ஒரு அதிர்வு, vibration, கதிர் எனவும் கூறக் கூடியது, கோடிக்கணக்கான பிரபஞ்சங்களை ஊடுருவித் தழுவும் என்கிறார் பகவான்.
  • எதை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியுமோ அதுவே பிரம்மம்.
  • பிரம்மம் ரூபமற்றது, குணமற்றது. மேலும் எந்த ரூபத்தையும், குணத்தையும் பெற வல்லது.
  • குணமற்றது, குணத்தைப் பெற முடியும் எனில் எதிரெதிரானவற்றை ஏற்கக் கூடியது.
  • ஒரே சமயத்திலும் ஏற்கக் கூடியது. எனவே முடிவு இல்லாதது. அந்தமற்றது அனந்தம்.
  • மனிதன் இந்த பிரம்மம்.
  • உலகம் இந்த பிரம்மம்.
  • பிரம்மம் தவிர உலகில் எதுவுமில்லை.
  • உலகிலுள்ளவை அனைத்தும் பிரம்மம் - சர்வம் பிரம்மம்.
  • ஆத்மா மூலம் ரிஷி உலகை அறிகிறார்.
  • பிரம்மம் உலகமாக சிருஷ்டியாவது ஆனந்தம் பெற.
  • ஆனந்தம் பிரம்மத்தின் அனுபவம்.

******



book | by Dr. Radut