Skip to Content

13. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

பகுதியான ஒரு அத்தியாயத்தை முழுமையான நூலாக எழுதிய பாணி

 

  • சாவித்திரி 1900 அளவில் 14 வரி செய்யுள் (sonnet) வடிவில் எழுதப்பட்டது.
    1950இல் 12 புத்தகங்களான 24,000 வரியுள்ள இதிகாசமாக முடிந்தது.

    நிறைவின் முழுமையை மூலத்தில் அறிந்த கவி நீட்டலாம், சுருக்கலாம்.

    எதை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியுமோ அதற்கு பிரம்மம் எனப் பெயர்.

    மூலம் தெரிந்தால் முழுமை பிடிபடும்.

    திருமணத்தின் கரு ஆணல்ல, பெண். பெண்ணின் பெருமை முழுமையான மூலம்.

    பெண்ணின் பெருமையின் பூரணத்தை அறிந்தவனுக்கு திருமணம் சொர்க்கம்.

    கல்வியைப் பற்றிக் கூறும்பொழுது "இளமையிற் கல்” என்றார்கள்.

    காதல் இளமையின் அனுபவமற்ற அறியாமை இல்லாததால் மகிழ்வது என உலகம் முழுவதும் நம்புகிறது. வெறும் உடலான மனிதனுக்கும், உணர்வில் உலகை இழப்பவனுக்கும் அது உண்மை.

    காதல் தெய்வீகமானது, ஆத்மாவை அறியாதவனுக்குக் காதல் விலக்கு.

    ஆத்மா தன்னை அறிவது ஜீவன் முக்தி.

    ஆத்மா இறைவனையறிவது ஜீவன் பரமாத்மாவில் கரைந்து பெறும் மோட்சம்.

    ஆத்மா மனத்துள்ளிருந்து வெளிப்பட்டு மனம் பெறும் ஆன்மீக மெருகு சைத்திய புருஷன்.

    உணர்வின் ஆத்மா பரிணாமத்தால் வெளிப்படுவது சைத்திய புருஷன் (உயிருக்குரியது).

    அதுவே இராதையின் காதல் எழுந்த உற்பத்தி ஸ்தானம்.

    "அனைவரும் கண்ணனை நாடிப் போகின்றனர். கண்ணன் என்னை நாடி வருகிறான்'' என்றாள் ராதை.

    "கண்ணனவன் என்னகத்தில் காலை வைத்த நாள் முதலாய் எண்ணமெல்லாம் அன்னவன் மீது ஏகியபின் மீளவில்லை'' என்றார் புலவர்.

    "கண்டதுண்டோ கண்ணன் போல்'' என்பது கோபிகை.

    "கண்ணா என்று நான் கதறியபொழுது பண்ணிசைத்தே வருவான்'' என்பது பெண் மனம்.

    "தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெலாம் ஓருருவாய் சமைத்தாய் உள்ளமுதே கண்ணம்மா'' என்பது கண்ணன் காதலின் குரல்.

    "அவள் தாளதனைக் கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்'' என்பது கண்ணனின் ஈடுபாடு.

    காதல் அழியாதது, அழிவையறியாதது. கடவுளை மனிதனில் அறிவது காதல்.

    ஆசையும், மோகமும் உடலுக்குரியன, உள்ளத்தைக் கிளர்வன, உயிரில் எழுவனவல்ல.

    மூலத்தையும், முழுமையையும் மனிதனில் அறிபவன் காதலை அறிவான்.

    மூலத்தை முழுமையாக அறிபவராலேயே கண்டத்தில் அகண்டத்தை வெளிப்படுத்த முடியும்.

    பெரும்பாலும் எல்லா அத்தியாயங்களிலும் பகவான் அதை சிறப்பாகவும், உயர்வாகவும் செய்திருக்கிறார். அதை அறிவது பகவான் எழுத்தின் ஜீவனைப் பெறுவது.

    முதல் அத்தியாயம் முடிவில் கூறுவது: எதையும் இடையில் கைவிடக்கூடாது.

    கடைசி அத்தியாயம் முதலில் கூறுவது: மனிதன் தன் முழுமையை அறிய வேண்டும்.

    கடைசி அத்தியாயத்தின் தத்துவக் கரு முதல் அத்தியாயத்தில் உபாயமாகக் கூறப்படுகிறது.

    7ஆம் அத்தியாயம் அகந்தையைப் பற்றியது. எப்படி அகந்தையைக் கடந்து ஆண்டவனை அடைவது எனக் கூறுகிறது. இது வேதாந்தம். முதல் அத்தியாயத்தில் வேதாந்தம் கூறும்,

    பரிணாமம் - வாழ்வு உடலில் எழுகிறது. மனம் வாழ்வில் எழுகிறது - அடுத்த கட்டத்தில் ஆன்மா மனத்திலெழுகிறது என்று பொருள்படுகிறது என்கிறார். இரண்டும் ஒரே வேதாந்தக் கருத்தை இரு அத்தியாயங்களில் இடத்திற்கேற்ப கூறுகின்றன.

    பிரம்மம் புருஷா ஈஸ்வரா - (Book II - Chapter II) என்ற அத்தியாயம் முழுவதும் முழுமையைக் கூறுவது.

    முதல் அத்தியாயம் உடலும், உயிரும், மனமும், ஆத்மாவும் பிரிந்துள்ளதை இணைத்த பரிணாமத்தையும், இனிவரும் பரிணாமத்தையும் எடுத்துக் கூறி அற்புதத்தில் முடிக்கிறது.

******



book | by Dr. Radut