Skip to Content

11. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னை!

அன்புள்ள அப்பா கர்மயோகி அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

நான் அன்னையை என் வாழ்வில் ஏற்றுக்கொண்டு 9 வருடங்கள் ஆகின்றன. என் வாழ்வில் அன்னை வருகைக்கு பின் எண்ணற்ற மாற்றங்கள். நான் திண்டுக்கல்லில் வசிக்கிறேன். திண்டுக்கல் தியான மையத்திற்கு செல்வேன். அங்கு அன்னையின் சக்தியை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மையத்தில் சில நாட்கள் சேவை புரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. மையத்தை கூட்டி துடைத்தேன். 2 மாதங்கள் சேவை புரிந்தேன். பிறகு வீட்டு சூழ்நிலை காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. அன்னை என் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 8 வருடங்களுக்கு முன் எங்களுடைய மாத வருமானம் ரூ.8,000. ஆனால் கடன் 30,00,000ரூபாய். நாங்கள் அன்னையை இடைவிடாமல் தியானம் செய்தோம். அன்னைக்கு பிடித்த குணங்களை அறிந்து அதன்படி நடந்தோம். அன்னையின் அருளால் இன்று எங்கள் வருமானம் ரூ.50,000 monthly. கடனும் குறைந்துவிட்டது. அன்னை அளவில்லாமல் கொடுப்பவர். அவர் கொடுப்பதை நான் ஏற்று கொண்டேன். இன்று எங்கள் மாத வருமானமும் கூடி, 10,00,000ரூபாய் மதிப்பிற்கு இடமும் எங்கள் பெயரில் இருக்கிறது. மேலும் நாங்கள் நடத்தும் கடையின் இடம் வழக்கில் உள்ளது. 90வருடங்கள் நாங்கள் அந்த கடையை நடத்தி கொள்ள கோர்ட்டில் அனுமதி கிடைத்துவிட்டது. மேலும் அந்த கடையின் இடமும் சொந்தமாக பட்டா வழங்க கோரி கேஸ் நடக்கிறது. அதுவும் அன்னையின் அருளால் வெற்றி பெற வேண்டும். அன்னை அதை வெற்றி பெற செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் ஜீவனுள்ள மலர்கள் புத்தகத்தை மையத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அன்னையே என் வீட்டிற்குள் வருவதை போன்ற ஆனந்தத்தை நான் அப்பொழுது உணர்ந்தேன். என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நான் அன்னையை உணர்கிறேன். சில நாட்கள் நான் தூக்கம் வராமல் அவதிப்பட்டேன். அப்பொழுது திடீரென்று மனதை ஒருநிலைப்படுத்தும் செடி (Concentration) மையத்தில் சேவை புரியும் ஒருவர் மூலமாக நான் கேட்காமலே எனக்கு கிடைத்தது. இதெல்லாம் அன்னையின் அற்புதங்களே. பாண்டிச்சேரிக்கு உங்கள் இடத்திற்கு வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவலாக உள்ளது. உங்கள் அனுமதி கிடைத்தால் சந்தோஷம்.

-- அன்னையின் பக்தை R. சுபாஷினி ராமசுப்பு, திண்டுக்கல்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிறருக்கு நாம் வலி கொடுப்பது தெரியாது. அது ஆனந்தமாகவுமிருக்கும். வலி வரும்பொழுது தெரியும். மனம் மாறினால் நாம் கொடுப்பதும், பெறுவதும் ஆனந்தம் எனத் தெரியும்.
வலி ஆனந்தமாக மாறும் நேரம் மனிதன் பிரம்மமாகும் நேரம்.

******



book | by Dr. Radut