Skip to Content

08. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

50. செய்த தவறு சரியாக மாறுவது, நிலை உயர்கிறது

  • தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  • மனிதர் தவற்றை மன்னிப்பதுண்டு.
  • வாழ்வுக்கு மன்னிக்கத் தெரியாது. இருப்பினும் அதனால் தண்டிக்காமலிருக்க முடியும்.
  • பாவ மன்னிப்புக் கேட்பதையும், அதை ஏற்பதையும் கேள்விப்பட்டுள்ளோம்.
  • தரும புத்திரரானாலும், பொய் சொன்னால் தேர்ச் சக்கரம் இறங்கும் என்பது சட்டம்.
  • செய்த தவறு சரியாக மாறுவது உலகம் அறியாதது.
  • இதற்கு அன்பர் வாழ்வில் உதாரணம் கூற முடியும்.
  • அதனால் நாம் தவறு செய்யலாம் எனப் பொருளில்லை.
  • தண்டனை, செய்த காரியத்திற்கு வருவதைவிட செய்த நோக்கத்திற்கு வருவதால் மனிதன் தவற்றை நாடக் கூடாது.
  • செய்த தவற்றை மீறியும் பலன் வரும் என்பது உலக அனுபவம்.
  • தவறு மாறி சரியாகிறது என்றால் அப்படிப்பட்ட சக்தியை உலகில் கேள்விப்பட்டதில்லை. அதுவே பூரணயோக தத்துவம்.
  • இருள் என்பது இல்லை, நம் பார்வைக்கு அருள் இருளாகத் தோன்றுகிறது என்பது தத்துவம்.
  • அப்பார்வையை ஏற்பது சத்தியஜீவியத்தை ஏற்பது.
  • தவற்றையும், சரியையும் கடந்த சக்தியுண்டு.
  • தவறு அதனுள் நுழைந்தால் தவறாக இராது. மாற விரும்பினால் சரியாகும்.
  • சத்தியஜீவியம் அப்படிப்பட்ட சக்தி.
  • எலிசபெத் டார்சியை அவதூறாகத் திட்டினாள்.
  • பெம்பர்லியில் பார்த்தபொழுது அவன் அவள் திட்டியதைப் பாராட்டாமல் பழகினான்.
  • லிடியா, ஜேன் திருமணத்திற்குப் பின் அவளைச் சந்தித்த பொழுது அவளைச் சந்தித்த முதல் சந்தர்ப்பத்தை நினைவு கூர்ந்தான்.
  • அவளுக்கு லஜ்ஜையாய்விட்டது. அதைப் பற்றிப் பேச வேண்டாம், வெட்கமாயிருக்கிறது என்றாள். தவறு செய்துவிட்டேன் அப்பொழுது என்றாள்.
  • அது எப்படித் தவறாகும், எனக்குப் புத்திமதி கூறினாய், அதனால்தான் திருந்தி நான் இன்று மனிதனாகியிருக்கிறேன் என்றான்.
  • அவள் செய்த தவறு அவனுடைய மனநிலையில் சரியானதாகப்பட்டிருக்கிறது.
  • இது உலகில் நடப்பதில்லை.
  • அன்பர்கட்கு அடிக்கடி நடக்கிறது.
  • எவருக்கு இது நடக்கிறதோ, அவருக்கு அது பூரணயோக வாயில்.
  • செய்த தவறு அனுபவம் தந்து அதன் மூலம் பலன் வரும்.
  • ஓரிடம் தவறு செய்தால் அதற்குச் சமமாக வேறிடத்தில் பலன் எழும்.
  • ஒருவருக்குத் தவறு செய்தவர் தவற்றுக்குரிய தண்டனையை அனுபவிக்கும்பொழுது தவறிழைக்கப்பட்டவர் வாழ்வு மாறி, இனி இது போன்றவர் அவர் வாழ்வில் வர முடியாத நிலை ஏற்படும்.
  • மிஸஸ். பென்னட் செய்த தவறு என்ன என்று அவர் அறியவில்லை.
  • மிஸ்டர் பென்னட் செய்த தவற்றை உணர்ந்து மாறி, அதற்குரிய பலனைப் பெற்றார்.
  • லேடி காதரீனுக்கு எதுவும் புரியவில்லை. எல்லாம் போய்விட்டது.
  • காரலின் அவசரமாக ஆனால் ஆனந்த ஆர்ப்பாட்டத்துடன் மாறிக் கொண்டாள்.
  • தவறு சரியாவது இவையல்ல.
  • அது சத்தியஜீவியம் செய்வது.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இரகஸ்யம் சொல்லாததில் இருக்கிறது. சொல்லாததைச் சொல்வது அருள். அருளை அருளாகப் பெற்று, கர்மத்தைக் கரைத்து, திறமையை வெளிப்படுத்தலாம். அருள் வந்து கர்மத்தைக் கரைக்கும் பொழுது திறமையைக் கைவிட்டு அருளைப் பேரருளாக்குதல் நன்று.
 
நம்பிக்கை அருளைத் தரும்.
நம்பிக்கையை இழப்பது பேரருளைத் தரும்.

*******



book | by Dr. Radut