Skip to Content

07. சாவித்ரி

சாவித்ரி

P.129 And still it keeps the habit of its birth

பிறந்த பழக்கத்தை மறவாத மனநிலை

  • முரண்பாட்டை முழுமனதுடன் ஏற்பது நம் வழி.
  • அழியும் இவ்வுலகின் முரடான மூலம்
  • வாழ்வோ, மனமோ, நெஞ்சோ நிலையில்லை.
  • அறிவுக்கெட்டாத சூன்யம் அமைத்து அருளிய உலகம்
  • ஜடமான உலகம் தவிர நிலையானதொன்றில்லை,
  • வானமும், மலையும், கடலும் விரும்பி ஏற்ற ஐக்கியம்
  • இளம் தெய்வங்கள் ஆத்ம விடுதலையை ஆர்வமான நாடின
  • உயிரற்ற பொருட்களில் உறக்கமாக உள்ளுறைந்தது.
  • அனைத்தையும் இழந்த பேரலங்காரம், சிறப்பையிழந்த அழகு,
  • செவிட்டுக் காதின் அமைதி, கேளாத சப்தம் அழிக்காத அமைதி,
  • சொல்லப்படாத பாரம் சொற்கடந்த துன்பம்
  • தேவையற்ற லோகத்தின் தெய்வீக அருள்;
  • உணரவோ, உணர்ந்து ஏற்கவோ எவரும் அங்கிலர்.
  • கனத்த பாரம் கண்டுகொள்ளாத உணர்வின் துடிப்பு
  • சிருஷ்டியின் சிறப்பான வேகம் கட்டுப்படாத கலன்:
  • ஜடத்தின் ஜீவனற்ற சுமுகத்தில் தன்னை இழக்க முடியாத நிலை,
  • கல்லாய் சமைந்த கடவுளிழந்த ஆத்ம நிலை.
  • உலகை நீத்த சமாதி தேடியலையும் பார்வை,
  • விழிப்பான இதயத்தின் வேகமான சலனம்,
  • எண்ணமும், சொல்லும், எழுச்சியின் அன்பும் மகிழ்விழந்து வாடி உதிரும்,
  • உணர்வற்ற ஊமை உருளும் இரவும், பகலும்
  • ஏக்கம் எதிர்பார்ப்பாய் எழுவதற்குக் காத்திருக்கும்.
  • இருளாய் அமைந்த ஜடம் ஏற்றமாக வீற்றிருப்பதைத் தொட்டு அசைத்தது,
  • ஞானத்தின் மௌனம் நடுங்கிக் கூறும் நாமம்,
  • உணர்வற்ற அச்சை ஊடுருவ வாழ்வு பெறும் அழைப்பு
  • தெய்வம் முரடனாகக் கண் விழித்தது.
  • உருளும் ஊமை உலகம் எழுப்பும் குரல்,
  • கேட்டறியாத சூன்யத்தில் கேட்கும் முனகல்.
  • இறந்ததின் ஆழத்தில் எழுந்த ஏதோ ஒன்று:
  • விழித்தறியாத வாழ்வு, மகிழ முடியாத மனநிலை,
  • அறிய முடியாத ஆதியினின்று உறங்கும் தோற்றம் பெற்றது.
  • உள்ளுறை சத்தியத்தை உணர்ந்த உண்மை,
  • மறந்த மகிமையையும், இழந்த உரிமையையும் நினைவுகூர்ந்து,
  • அறியவும், ஆர்வமெழவும், அனுபவிக்கவும், வாழவும் விழையும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நாம் போடும் கணக்குத் தப்பாகப் போகலாம்;
அன்னை தவறுவதில்லை.
 

*******



book | by Dr. Radut